வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, April 22, 2010

காதல் விடுதூது

சொல்லத்தான்
போகிறேன்
உன் நினைவை ...

கரைந்துதான்
போகிறேன்
உன் கண்ணில் ...

தொலைந்துதான்
போகிறேன்
உன் கன்னக்குழியில் ...

கலைந்துதன்
போகிறேன்
உன் கார்குழலில் ...

ஆடித்தான்
போகிறேன்
பின்னழகில் ...

வளைக்கதான்
போகிறேன்
உன்னிடையை ...

அணைக்கத்தான்
போகிறேன்
முன்னழகை ...

கூடத்தான்
போகிறேன்
உன்னுடனே ...

சொல்லத்தான்
போகிறேன்
உன் நினைவை ...


Wednesday, April 21, 2010

முன்னால் காதலன்

அவன்
தாடியுடன்

நான்
தாலியுடன் ...

அவன்
என் காதலுடன்
நான்
என் கணவனுடன் ...

அவன்
அவனாகயில்லை
நான்
இவனானதால் ...

Monday, April 19, 2010

காதல் மனைவி

மவுனமே பதிலனாய்
காதலில்
கேள்வி மட்டுமே
கேட்கிறாய்
மனைவியாக ...

எப்போதும் சிரிப்பாய்
காதலில்
எப்போதாவது தான்
சிரிக்கிறாய்
மனைவியாக ...

Sunday, April 18, 2010

கடன் அட்டை

நண்பன்
கைவிட்டாலும்
நான்
கைகொடுப்பேன் ...

மாசக்கடைசியில்
மானம்
காப்பேன் ...

கடனுக்கு
சலுகையளித்து
சந்தோசபடுத்துவேன்

என்னை வைத்து
எடை போடுவார்
உன்னை ...

ஆண்டியும்
அரசன்
என்னால் .....

Silver
Gold
Platinum
என்னை வைத்து
உன்னை தரம்
பிரிப்பர் ....

Friday, April 16, 2010

மண்தின்ற அம்மா


பிள்ளைவரம் வேண்டி
மண்சோறு தின்றவளை
மண் தின்றது
பிள்ளைக்கு வேண்டாததால்.

Wednesday, April 14, 2010

வேண்டி தொலைத்தது

கல்வி வேண்டி
இளமை
தொலைந்தது ...

காதல் வேண்டி
சுயம்
தொலைந்தது ...

வேலை வேண்டி
கனவு
தொலைந்தது ...

பதவி வேண்டி
நட்பு
தொலைந்தது ...

இல்லறம் வேண்டி
இன்பம்
தொலைந்தது ...

கலவி வேண்டி
தூக்கம்
தொலைந்தது ...

சமுகமரியாதை வேண்டி
சுற்றம்
தொலைந்தது ...

வேண்டியதெல்லாம்
கிடைத்தது
வெறுமையில் ...


Tuesday, April 13, 2010

பேனா

எண்ணத்தின்
வண்ணம்
நீ ...

மனிதனின்
மனசாட்சி
நீ ...

மொழி பேதம்
பார்பதில்லை
நீ ...

காகித உடலின்
உயிர்
நீ ...

ஊமையின்
மொழி
நீ ..

Monday, April 12, 2010

சொந்தமண்


உண்ண
உணவளித்தாய்
தாயாக ...

உடுக்க
உடையளித்தாய்
தந்தையாக ...

வீழ்ந்தபோது
தாங்கினாய்
நண்பனாக ...

முதல் காதல்
முதல் முத்தம்
முதல் கலவி
முதல் தோல்வி
மவுனசாட்சியாய் ...

என் வாழ்வின்
எல்லாமான உனைவிட்டு
எங்கோ போனேன்
என் வாழ்க்கைதேடி ...

Sunday, April 11, 2010

பசலை

கண்ணா
விடைபெற்றுப்போன
உன்னை வீதியில்
தேடுகிறேன்...

அன்பே
நீ அவிழ்த்த
அழக்குச்சட்டையை
உடுத்திக்கொள்கிறேன்...

காதலே
நீ இருந்த
இடத்தில் நின்று
நகர்கிறேன்...

ஆருயிரே
நீ விட்டு
சென்றதை
தொட்டுப்பார்கிறேன்...

Saturday, April 10, 2010

வாசனை

என் எல்லா
சுவாசத்திலும்
என் மண்ணின்
வாசனை ...

என் எல்லா
உணவிலும்
என் அம்மாவின்
வாசனை ...

என் எல்லா
உறவிலும்
என் அப்பாவின்
வாசனை ...

எல்லா
குழந்தையிடத்தும்
என் மகளின்
வாசனை ...

Friday, April 9, 2010

காதல் கடவுள்

காதலும்
கடவுள்போல்
முழுசாய் புரிந்தோர்
எவருமில்லை ....

காதலும்
கடவுள்போல்
எதிர்ப்பு ஆதரவு
எப்போதுமுண்டு ....

காதலும்
கடவுள்போல்
உணரத்தான்
முடியம் ...

காதலும்
கடவுள்போல்
இதற்குமுன்
எல்லோரும் சமம் ..


காதலும்
கடவுள்போல்
அடைவது எளிதில்லை ...
காதலும்
கடவுள்போல்
அடைதோர் சிலரே ....


காதலும்
கடவுள்போல்
கல்லானதுமுண்டு ...


காதலும்
கடவுள்போல்
இல்லவே இல்லை
என்பர் சிலர் ...
காதலும்
கடவுள்போல்
ஆக்கவும்
அழிக்கவும்
செய்யும் .....

Thursday, April 8, 2010

முதல்

முதல் காதல்
குளக்கல்லாய்
கரைவதில்லை ...

முதல் முத்தம்
உதட்டிரமாய்
உலரவில்லை ...

முதல் கலவி
மனவடுவாய்
மறையவில்லை ...

முதல் தோல்வி
குடவிளக்காய்
அணையவில்லை ....

Tuesday, April 6, 2010

அறை நண்பன்

கண்ணாடியில்
என் முகம்
பார்ப்பேன் ...
உன் முகத்தில்
என் மனம்
பார்ப்பேன் ...

கோவில்
குடி
கூத்து
பிரிந்ததில்லை
இருவரும் ...

ஆயிரம் கேள்வி
அன்று ஓர்நாள்
நீ
என்னுடன்
வராதபோது ....

நான்
பசித்திருப்பேன்
நீ
சமைத்திருப்பாய் ...

கோடிட்டு
பழகியதில்லை
ஆனால்
எல்லை தாண்டியதில்லை
இருவரும் ...நிறை பாராடினோமா ?
நினைவில்லை
குறை கூறிகொண்டதில்லை
இருவரும் ...

உதவியாக இருந்தோமா ?
நினைவில்லை
உறுத்தலாக இருந்ததில்லை
இருவரும் ....

முடிவில்
பார்த்துக்கொள்வோமா ?
தெரியாது
ஆனால் நிச்சயம்
நினைத்துக்கொள்வோம் .
Monday, April 5, 2010

வேலை பளு


வாழ்க்கை
நடத்த
வேலைக்கு போனேன்
வேலையே
வாழ்க்கையானது ...

வாழ்க்கை
பளு குறைக்க
வேலைக்கு போனேன்
வேலையே
பளுவானது ....

விடுமுறையில்
வேலைக்கு போனேன்
இன்று
விடுமுறை நோக்கி
வேலைக்கு போகிறேன் ...

பிடித்து
வேலைக்கு போனேன்
வேலையே
பிடிக்காமல் போனது ...