கண்ணாடியில்
என் முகம்
பார்ப்பேன் ...
உன் முகத்தில்
என் மனம்
பார்ப்பேன் ...

கோவில்
குடி
கூத்து
பிரிந்ததில்லை
இருவரும் ...
ஆயிரம் கேள்வி
அன்று ஓர்நாள்
நீ
என்னுடன்
வராதபோது ....
நான்
பசித்திருப்பேன்
நீ
சமைத்திருப்பாய் ...
கோடிட்டு
பழகியதில்லை
ஆனால்
எல்லை தாண்டியதில்லை
இருவரும் ...
நிறை பாராடினோமா ?
நினைவில்லை
குறை கூறிகொண்டதில்லை
இருவரும் ...
உதவியாக இருந்தோமா ?
நினைவில்லை
உறுத்தலாக இருந்ததில்லை
இருவரும் ....
முடிவில்
பார்த்துக்கொள்வோமா ?
தெரியாது
ஆனால் நிச்சயம்
நினைத்துக்கொள்வோம் .
பின்னிட்டீங்க!!
ReplyDeleteநன்றி
ReplyDeleteathenna, Kudi Koothu'nnu udane, KK Photo?
ReplyDeleteithellam nalla illa, pathukonga!
I will add your photo
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் உங்களுடைய வலைப்பூ அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்http://blogintamil.blogspot.com/2013/09/1.html?showComment=1379384881277#c1156036493630622032
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் முணியாண்டி - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - நட்பு பாராட்டும் நற்கவிதை நன்று - மிக மிக இரசித்தேன் - நட்பின் இலக்கணம் -அருமையான கவிதையில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் முணியாண்டி - 20 மாத காலமாக எழுத வில்லையா - பணிச்சுமை காரணமா ? சற்றே நேரம் ஒதுக்கி எழுதத் துவங்கவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete