என்னாடி காளியம்மா....புள்ளப்பெத்து முழுசா முப்பது நாக்கூட ஆகல அதுக்குள்ள தலையில இடுப்புல கையிலன்னு சொமைய தூக்கிக்கிட்டு காட்டுக்குப்போறே. என்ன என்னாக்கா பண்ணச்சொல்லிரிங்க அந்த மனுஷன் கோழிகூவுரதுக்கு முன்னையே கலப்பையே தூக்கிக்கிட்டு உழுகப்போயிட்டாரு. அதான் மாட்டுக்கு தண்ணி, நாயுக்கு கஞ்சி, அவருக்கு சாப்பாடுன்னு எல்லாத்தையும் நானே எடுத்துக்கிட்டு போறேன்.
சரி புள்ளய எங்கடி? அதுக்கு பாலக்குடுத்து உறங்க வச்சுட்டு வந்திருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு எங்க ஆத்தா தூக்கிட்டு வரும். சரிக்கா... காட்டுல நாலுபேறு கள எடுக்குராங்க. தலச்சொம வேறே கனக்குது நான் வரேன் என்று பெரிய எட்டு வச்சு நடந்தா காளியம்மா.
கோரப்புல்லும் நெல்லுப்பயிரும் பாக்க ஒண்ணுபோல இருக்கும் கோரப்புல்ல புடுங்கிரதுக்கு பதிலா நெல்ல புடிங்கி போட்டுராதிங்க என்று சொல்லிக்கொண்டே காட்டுக்குள் நொலஞ்சா காளியம்மா. கொண்டுவந்த தண்ணிய மாட்டுக்குழுதானியில ஊத்திட்டு, கஞ்சிய நாய்க்கல்லுல ஊத்திட்டு, சாப்பாட்ட தாவாரத்து கம்புல தொங்கவிட்டா. சும்மாடு கூட்டியிருந்த சேலையில புள்ள வந்தா தூங்குறதுக்கு பூவரசமரத்தில தொட்டில் கட்டிட்டு வயல்ல இறங்கி கோரப்புல்ல புடுங்கத் தொடங்கினாள்.
நீ ஊரக்கூட கடந்திருக்க மாட்டா அதுக்குள்ள அழுக ஆரம்பிச்சிட்டான் ஒம்புள்ள. புள்ளயவாங்கி பசியமத்தி ஆத்தாகிட்ட கொடுத்து தொட்டியில போடச்சொன்னா காளியம்மா. வெயில்த்தெரியாம இருக்க ஊர்க்கத பேசிக்கொண்டே தன்னோட நெரையில இருக்கும் புல்லைப்புடுங்க ஆரம்பித்தார்கள்.
அந்த மனுஷன் உழது முடிசுட்டாரு. ஏரேக்கலட்டி மாட்டக்கட்ரதுக்குள்ள சாப்பாடு எடுத்து வக்காட்டி மூக்குமேல கோவம்வரும் புள்ள அழுதா பாத்துக்க வெள்ளத்தாயி என்று புருசனுக்கு சாப்பாடு போடப்போனாள் காளியம்மா. தலமறையிரதுக்குள்ள புள்ள அழுக ஆரம்பித்தான். புல்லுப்புடுங்கின கையக்கழுவிட்டு புள்ளயத்தூக்கி பசியமத்த ஆரம்பித்தாள் வெள்ளத்தாயி.
ஏண்டி புள்ள அழுகுறது கூடத்தெரியாம அப்படி என்னடி பேச்சு புருசன்கூட என்றாள் களயெடுத்துக்கொண்டிருந்த கெழவி. அப்பத்தா உனக்கு தெரியாததா... அவ புள்ள செத்து இருபது நாக்கூட ஆகல பால்கட்டிக்கிட்டு கஷ்ட்டபடுறா அதான் அவ எம்புள்ளைக்கு பால்க்குடுக்கட்டுமுன்னு விட்டுடேன் என்றாள் காளியம்மாள்.
"அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டால .....
மாமா அடிச்சாரே மல்லியப்பூ செண்டால .....
அடிச்சரே சொல்லியழு....ஆராரோ...ஆரிராரோ..."
தாலாட்டு பாடிக்கொண்டிருந்தாள் வெள்ளத்தாயி.