வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, January 31, 2011

மகன் கையெழுத்து

மாசம் மொத தேதியாச்சு
மணியாடர் இன்னும் வல்ல.

மறக்காம மாசாமாசம் பணம்
அனுப்பும் மகனுக்கு என்னாச்சோ.

களப்பு கடக்காரன் கடனுக்கு
காப்பி கெடையாதுன்னுடான்.

எல்லையில நித்தம் சன்டையாம்
எல்லாரும் பேசிக்கிறாங்க.

வீட்டுக்கு ஒருத்தன் இருக்கான்
வெவரம் கேக்க ஆள்யில்ல.

லெட்டர் போட்டு கேக்க
எழுத படிக்கத் தெரியாது.

போன் போட்டு பேச
பட்டலியன் நம்பர் தெரியாது.

தபால்காரகிட்ட தகவல் ஒன்னுமில்ல
எப்போ வருமோ தெரியல.

மணியாடர்ல மகன் கையெழுத்து
பார்த்த மனசு கெடந்தடிக்காது.

3 comments:

  1. லெட்டர் போட்டு கேக்க
    எழுத படிக்கத் தெரியாது

    போன் போட்டு பேச
    பட்டாலியன் நம்பர் தெரியாது


    ......பாவம்ங்க....! எத்தனை பாரம்!

    ReplyDelete
  2. அதி அற்புதம்ங்க முனிஸ்... ஒரு தாயோட மன பாரத்த அற்புதமா சொல்லிட்டிங்க ....

    ReplyDelete
  3. தாய் மனசு படும்பாடு ........அழகாய் நாலு வாரிகளில் ...........பாராட்டுக்கள.

    ReplyDelete