இவர்களும் நானும்
இதுவரை காணாத கடவுளை
கண்டால் சில வரங்கள் கேட்பேன்
நினைக்கும் நேரத்தில் உங்களை
வந்தடையும் விண் வழி கேட்பேன்
கண்மூடி திறக்கும்முன் உங்கள்முன்
நிற்கும் நொடிவிமானம் கேட்பேன்
கூட்டத்தில் மற்றவரிடம் இருந்து
மறையும் தந்திரம் கேட்பேன்
சேர்ந்திருக்கும் நேரம் அப்படியே
உறையும் சூத்திரம் கேட்பேன்
விரும்பும் மட்டும் உங்களுடன்
விளையாடும் மந்திரம் கேட்பேன்
நாம் மட்டும் பேச
சொந்தத்தில் மொழி கேட்பேன்
உங்களை மட்டும் காண
மூன்றாம் விழி கேட்பேன்
வராத கடவுள் வருவாரா?
கேட்கும் வரங்கள் தருவாரா?