இவர்களும் நானும்
இதுவரை காணாத கடவுளை
கண்டால் சில வரங்கள் கேட்பேன்
நினைக்கும் நேரத்தில் உங்களை
வந்தடையும் விண் வழி கேட்பேன்
கண்மூடி திறக்கும்முன் உங்கள்முன்
நிற்கும் நொடிவிமானம் கேட்பேன்
கூட்டத்தில் மற்றவரிடம் இருந்து
மறையும் தந்திரம் கேட்பேன்
சேர்ந்திருக்கும் நேரம் அப்படியே
உறையும் சூத்திரம் கேட்பேன்
விரும்பும் மட்டும் உங்களுடன்
விளையாடும் மந்திரம் கேட்பேன்
நாம் மட்டும் பேச
சொந்தத்தில் மொழி கேட்பேன்
உங்களை மட்டும் காண
மூன்றாம் விழி கேட்பேன்
வராத கடவுள் வருவாரா?
கேட்கும் வரங்கள் தருவாரா?
அழகான... அருமையான... ஏங்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
படம் பிரமாதம்...
சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது உலவு ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும்... உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும்... நன்றி...