வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, May 7, 2010

காலப்போக்கில்

உற்றார் மரணம்
மறந்துபோனேன்
காலப்போக்கில்...

என் மரணம்
உற்றார் மறப்பர்
காலப்போக்கில்...

சுகப்பிரசவம்


தாய் சேய்
நலம்
கத்தி ரத்தத்துடன்
சுகப்பிரசவம்

Thursday, May 6, 2010

தமிழ் தலைவன்

பொதுவுடைமை
பேசி
பொது சொத்துடைப்பர்

தமிழ் உயிர்
என்று
தமிழன் மடியதுனையாவர்

வாரிசு அரசியல்
மறுத்து
வாரிசு அறிக்கைவிடுக்கும்

தொண்டன்
விலை போகக்கூடாது
என்று
ஓட்டுக்கு காசுகொடுப்பர்

பெண்ணுரிமை
பேசி
33 க்கு முட்டுக்கட்டையிடுவர்

கள்ளக்கலவி
கொண்டு
காதல் எதிர்ப்பர்

சாதியியம்
மறுத்து
தனிஒதிக்கீடு கேட்பர்

காவியுடன்
கூடி
கடவுள் மறுப்பர்

நாற்காலியாசை
இல்லையென
சக்கரநாற்காலியில்
இருந்து பதில் அளிப்பர்

Wednesday, May 5, 2010

ஏனோ இன்று...

பணத்திற்காக
ஏங்கிய மனம்
பழசுக்காக ஏங்கியது
அம்மாவின் அருகாமை
அப்பாவின் கண்டிப்பு
நண்பனின் அரட்டை
அற்ற அமெரிக்கா
அர்த்தமற்றதானது
ஏனோ இன்று...