வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, May 6, 2010

தமிழ் தலைவன்

பொதுவுடைமை
பேசி
பொது சொத்துடைப்பர்

தமிழ் உயிர்
என்று
தமிழன் மடியதுனையாவர்

வாரிசு அரசியல்
மறுத்து
வாரிசு அறிக்கைவிடுக்கும்

தொண்டன்
விலை போகக்கூடாது
என்று
ஓட்டுக்கு காசுகொடுப்பர்

பெண்ணுரிமை
பேசி
33 க்கு முட்டுக்கட்டையிடுவர்

கள்ளக்கலவி
கொண்டு
காதல் எதிர்ப்பர்

சாதியியம்
மறுத்து
தனிஒதிக்கீடு கேட்பர்

காவியுடன்
கூடி
கடவுள் மறுப்பர்

நாற்காலியாசை
இல்லையென
சக்கரநாற்காலியில்
இருந்து பதில் அளிப்பர்

9 comments:

 1. etho kurippitta katchiya thakki pesara mathiri theriyuthu???

  ReplyDelete
 2. அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும்!
  http://kaniporikanavugal.blogspot.com/ மிக்க நன்றி!

  ReplyDelete
 3. //தொண்டன்
  விலை போகக்கூடாது
  என்று
  ஓட்டுக்கு காசுகொடுப்பர்//

  அருமை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. உங்கள் கண்ணிர் மழை நன்று. தொடருங்கள் மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 5. மதுரை சரவணன். உங்களை எனக்கு புரிகிறது. நானும் அந்த மண்ணுக்கு சொந்தக்காரன் என்றமுறையில்.

  ReplyDelete
 6. பொதுவுடைமை
  பேசி
  பொது சொத்துடைப்பர்

  சேர்த்தது மக்களின் இதயம் என்று வார்த்தை ஜாலம் புரிவர்

  ReplyDelete
 7. எனக்கு புரிகிறது உங்கள் மனவேதனை.

  நன்றி.

  ReplyDelete