அழகு அழகாய் பம்பரம்
இறுக்கி சுற்றி சுற்றி வந்தது
சாட்டை.
சுழற்றி விட்டதில்
சுற்றி தலைகுனிந்து விழுந்தது
பம்பரம்.
பம்பரம் பார்த்து சிரித்து
கேலி பழி சொன்னது
வேடிக்கை பார்த்த
கூட்டம்.
கலர் கலராய் வேறு பம்பரம்
சுற்றி சுழற்றி விட்டது
அதே சாட்டை.
அடுத்த அடுத்த பம்பரம்
வேறு வேறாய் பழி கேலி
பம்பரத்தின் மீது.
கேலி பழி பாதிப்பதில்லை எப்போதும்
சாட்டைகளை
ஆண்களை போல்.
இறுக்கி சுற்றி சுற்றி வந்தது
சாட்டை.
சுழற்றி விட்டதில்
சுற்றி தலைகுனிந்து விழுந்தது
பம்பரம்.
பம்பரம் பார்த்து சிரித்து
கேலி பழி சொன்னது
வேடிக்கை பார்த்த
கூட்டம்.
கலர் கலராய் வேறு பம்பரம்
சுற்றி சுழற்றி விட்டது
அதே சாட்டை.
அடுத்த அடுத்த பம்பரம்
வேறு வேறாய் பழி கேலி
பம்பரத்தின் மீது.
கேலி பழி பாதிப்பதில்லை எப்போதும்
சாட்டைகளை
ஆண்களை போல்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்திருக்கீங்க போலிருக்கு.. வரவேற்கிறேன்.
ReplyDelete(என்ன யாருன்னு தெரியலையா நான் தான் வெறும்பய)