வண்டிக்காரன் ஒரு தொடர்.... இதன் முந்தைய பதிவுகள்
நரிவிரட்டியை வீட்டுக்கு வந்து தன்னை பார்க்க சொல்லி ஆள் அனுப்பினார் இன்ஸ்பெக்டர். இந்த கேஸ்யை ஸ்டேசனில் வச்சு விசாரி க்க முடியாது. தன் சொந்த விருப்பத்தின் பேரிலு ம் தன் நண்பனின் அம்மாவுக்காகவும் விசா ரிப்பது. வண்டிக்காரன் கடைசியா ஏதாவது சொ ன்னாரா என்று கேட்கவே இந்த விசா ரணை. நரிவிரடியிடம் விசாரணையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ன கேட்பது எதை முதலில் கேட்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார் இன்ஸ்பெக்டர்.
"டொக்...டொக்... சார்...சார்..." யோசனையில் இருந்து விடுபட்ட இன்ஸ்பெக்டர் நரிவிரட்டி ஒரு பையுடன் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டுருப்பதை பார்த்தார்.
"சார் வரச்சொன்னிங்கலாம்...."
"ஆமா உள்ள வாங்க..." என்று உக்கார சேர் நகத்திபோட்டார் இன்ஸ்பெக்டர்.
"என்ன விஷயமா என்ன வரச்சொன்னிங்க சார்..."
"நான் நேரே விசயத்துக்கு வரேன்... ஏன் வண்டிக்காரன கொலை பண்ணிங்க... எதுக்கு பண்ணிங்க... எப்படி பண்ணிங்க..."
"உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன்... அதுக்கும் முன்னாடி எனக்கு நீங்க ஒரு உண்மையச்சொல்லனும்..."
"கேளுங்க..."
"நீங்க நம்ம பழைய பிரசிடன்ட் வெள்ளைசாமியோட பையனா ?"
"ஆமாம்..." இனிமேலும் மறைக்க வேண்டாம் என்று ஒத்துகொண்டார் இன்ஸ்பெக்டர்.
"அப்ப சரி தம்பி... உங்க அப்பா இந்த கிராமத்துக்கு எவ்வளவோ நல்லது பண்ணியிருக்காரு... உங்க அப்பா பிரசிடன்டா இருந்தப்பதான் நாம ஊரு கம்மா வெட்டுனது... பள்ளிக்கொடம் வந்தது... ஏன் கரண்டு இழுத்து நாம ஊருக்கு வெளுச்சம் போட்டதே உங்க அப்பாதான்... நீங்களும் நல்லவராத்தான் இருப்பிங்க தம்பி... உங்கள நம்பி நடந்த உண்மையெல்லாம் சொல்றேன்... நல்லது கெட்டது நீங்களே பாத்து செய்யுங்க..."
"முதல நடந்தது என்னனு சொல்லுங்க... நல்லது கெட்டது பின்ன பாக்கலாம்..."
"வண்டிக்காரனை பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல... உங்களுக்கே அவன் செஞ்சது எல்லாம் தெருஞ்சிருக்கும்..."
"ஏன் கொலை பண்ணனுமுன்னு முடிவேடுத்திங்க..."
"அவன் சாராயம் காச்சுறதுக்கு என்னோட தோட்டத்துல இருந்துதன் தண்ணி எடுத்தான்... எடுக்கவிடாட்டி என்கூட சண்டைபோடுவான்... அவன் போலீஸ்ல பிடிபடும் போதெல்லாம்... விசாரணைன்னு போலீஸ் என்னை தெனமும் நடக்க விட்டாங்க... அப்ப போலீஸ் ஸ்டேஷன் வேறே சாப்டூர்லே இருந்துச்சு... போக வர பத்து மையில் நடக்கணும்... அவனால நான் ரெம்ப பாதிக்கப்பட்டேன்... ஆனாலும் சொந்த ஊருக்காரன்னு முடுஞ்ச வரைக்கும் எனக்கு எதுவும் தெரியாதுன்னுதான் சொன்னேன்... சாட்சி இல்லாம போலீஸ் அவனை உள்ள தள்ள முடியாம கஷ்ட்டப்பட்டாங்க... அவன் உள்ளேயும் போகம... சாராயம் காச்சுறதையும் நிறுத்தாம... அவனாலே நான் ரெம்ப கஷ்டப்பட்டேன்..."
"இதுதான் கொலைசெய்யா காரணமா ?"
"இதுமட்டும் இல்ல தம்பி... ஊருல அவனுக்கும் என் பொண்டாடிக்கும் தொடர்புன்னு என் காது படவே பேசிக்கிட்டாங்க... நான் நம்பல.. ஆனா போலீஸ் சொல்லுச்சு... அவனுக்கும் என் பொண்டாடிக்கும் தொடர்பு இருக்காதனாலே தான்... நான் அவன்கிட்ட காசு வாங்கிட்டு உண்மையே சொல்லன்னு சொன்னங்க... அப்பதான் முடிவு பண்ணுனேன் வண்டிக்காரன கொலைபன்னனுமுன்னு..."
"சரி எப்படி கொலை பன்னேங்க..."
"அவனோட கொலையே ரெம்ப நிதானமா... யாரும் கண்டுபிடிக்க முடியாத மாதரி செய்யானுமுன்னு முடிவு செஞ்சேன்... அதுக்காக புதுசா அருவா வேல்கம்பு கதியெல்லாம் அடுச்சேன்... ஏன்னா என்னோட கசப்பு கடையில இருக்க அருவ கத்திய வச்சு கொலை செஞ்சா எங்க போலீஸ் மோப்பநாய் கண்டுபிடுச்சுருமொன்ன பயம்... அந்த புது அருவ கத்திய அவனுக்கு தெரியாம அவன் சாராயம் காச்சுற எடத்துக்கு பக்கத்துலேயே ஒரு மரபோந்துல ஒலுச்சு வெச்சேன்..."
"கொலையா எப்ப பன்னேங்க..."
"ஒரு முழுநிலா இருக்குற பவுர்ணமியில கொலை பண்றதுன்னு முடிவு பண்ணினேன்... அவன் அன்னிக்கு கட்டாயம் சாராயம் காச்சா வருவான்... அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் செஞ்சேன்... நானா எனக்கு பெதிபோரதுக்கு மருந்து சாப்பிட்டுட்டு எழுமலை கவர்மெண்டு ஆஸ்பத்திரியில ரெண்டு நாளைக்கு முன்னாடியே அட்மிட் ஆனேன். கொலை செய்யணுமுன்னு முடிவெடுத்தா அன்னிக்கு யாருக்கும் தெரியாம ஆஸ்பத்திரியில இருந்து அவன் சாராயம் காச்சுற கரட்டுக்கு வந்தேன்... ஒரு பெரிய பானையில இருந்து டுயூப் வழியா சின்ன பானைக்கு சாராயம் சொட்டு சொட்ட போயிக்கிட்டு இருந்துச்சு... அவன் தூங்கிக்கிட்டு இருந்தான்... இதுதான் சரியான சமயமுன்னு... சாராயம் காச்சுறதுக்கு நேரே மேலே ஒரு பெரிய பறையில மறஞ்சிருந்த நான் தூங்கிக்கிட்டு இருந்த அவன் கழுத்த குறிபார்த்து வேல்கம்ப எறிஞ்சேன்... அது கரக்டா அவன் கழுத்துல பாஞ்சது... அவனிடம் ஒரு அசைவும் இல்ல...சரின்னு கீழ எறங்கிப்போனேன்..."
"அப்புறம் என்ன பன்னேங்க..."
"அவன் வலியால் துடிக்கலே...கால் கை அசையலே... மெதுவா பக்கத்துல போயி உடம்ப தொட்டு பாத்தா ஒடம்பு ஜில்லுன்னு இருந்துச்சு... எனக்கு தூக்கிவாரி போட்டுருச்சு... எனக்கு தெருஞ்சு அவன் நாலு அஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடியே செத்து போயிட்டன்..."
வண்டிக்காரன நரிவிரட்டி கொலை செய்யவில்லை என்றால் அவன் எவ்வாறு இறந்தான்?அவன் ஏன் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டான்? அவன் தலை மட்டும் எரிக்கப்பட்டது ஏன்? அடுத்த பதிவில் பார்க்கலாம்.