கராணங்கள் எல்லாம் சரியாகத்தான் ஆனால் நரிவிரட்டியை அணுகுவதில் சிறிய சிக்கல். அவருக்கு நான் யார் என்பது தெரிந்துவிட்டது என்பது என் யூகம். காரணம் அவரின் முதல் பார்வை அவர் கேட்ட கேள்விகள். நானும் இதே ஊரைச் சேர்ந்தவன்தான். நானும் வண்டிக்காரன் மகன் அசோக்கும் நல்ல நண்பர்கள் சிறுவயதில். நான் அந்த ஊரிலே உள்ள முக்கிய மனிதரின் பிள்ளை. என் அப்பாவுக்கு அசோக்குடன் சேர்வது பிடிக்கவில்லை இருந்தும் எங்கள் நட்பு தொடர்ந்தது.
வண்டிக்காரன் இறப்பால் என் நட்பை இழந்தேன். பின் நானும் ஆறாவது வெளியூரில் படிக்க மெல்ல என் குடும்பமும் நகரத்தை நோக்கி நகர தொடர்பு இல்லாமல் போனது. மறுபடியும் மாற்றலாகி இப்பொழுது இங்கே. இந்த இடமாற்றம் நான் விரும்பி கேட்டது. என் நண்பனின் அம்மாவுக்காக. நான் இந்த ஊர்க்காரன்... என் அப்பாவின் முகச்சாயல் இதைவைத்து நரிவிரட்டி என்னை கண்டுகொண்டார். நான் போலீஸ் என்று தெரிந்த அவர் என்னை மேலும் கேள்வி கேட்க்காது அங்கிருந்து நகர்ந்தது என் சந்தேகத்தை உறுதிபடுத்தியது.
நடுவில் அசோக்கை பார்க்க முயற்சித்து முடியவில்லை. ஒருமுறை அவரின் அம்மாவின் ஊர்க்கு போனேன். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. அசோக் அம்மா அவனை படிக்க வைப்பதற்காக சென்னையில் ஏதோ சிறிய வேலையில் சேர்ந்து அவர்கள் அங்கு சென்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். பாவம் அசோக்கும் அவன் அம்மாவும்.
அசோக் அம்மா அந்த காலத்திலேயே பத்தாவது படித்தவர்கள். எப்படி வண்டிக்காரனை காதலித்து கல்யாணம்... என்னால் நினைத்து பார்க்கமுடியவில்லை அதுவும் சாராயம் காச்சுரவனை. ஆனால் வண்டிக்காரன் ஒரு சகலகலா வல்லவன்... நல்ல பாடுவான்... நல்ல மாடு அனைவன் சல்லிக்கட்டில்... நல்ல வண்டி ஓட்டுவான்... ஏதோ ஒரு ஊர்க்கு நாடகம் போடப்போனபோது கண்மணி அம்மா இவனை நல்லவன் என்று நம்பி ஏமாந்திருக்கிறார்கள். கல்யாணத்திற்கு பிறகு எவ்வளவோ முயன்றும் திருத்தமுடியவில்லை. பாவம் நிறைய கஷ்ட்டப்பட்டர்கள் பல காரணங்களுக்காக. அவன் செய்யும் எல்லா தவறுக்கும் இவரும் அசோக்கும் பதிக்கபட்டனர்.
வேலையில் சேர்ந்தபிறகு அசோக்கை தேடுவதைத் தீவிரப்படுத்தினேன். இருபது வருடங்களுக்கு முன் என்னுடன் கிராமத்தில் படித்த நண்பனை கண்டுபிடிப்பதில் சற்று சிரமமாக இருந்தது. என் நண்பர்கள் சொல்லி எல்லா சோசியல் நெட்வொர்க் இணையதளத்தில் சேர்ந்தேன். பின் அசோக்கை இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது. காரணம் அவன் wild life photographer ஆகிருந்தான். எல்லா இணையத்திலும் இருந்தான். அவனை தொடர்பு கொண்டு ஒரு முறை கண்மணி அம்மாவையும் அவனையும் பார்க்க போயிருந்தேன்.
அவன் முழுவது மாறிப்போயிருந்தான் அவன் உலகம் குறித்த பார்வை மாறிப்போயிருந்தது. அவன் அவன் அப்பா வண்டிக்காரனை முழுவதும் மறந்துபோயிருந்தான். உண்மைதான் அவன் அப்பா குறித்தா எந்த நல்ல நினைவுகளும் அவனுக்கு இருந்திருக்க வாய்ப்பு குறைவே. அவன் மிகவும் வறுமை கஷ்டம் மட்டுமே பார்த்திருந்தான் இந்த ஊரில் இருந்தபோது. அவன் அம்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவனை மிகவும் நல்லவனா வளர்த்திருந்தார். நான் சும்மா கேட்டேன் உன் அப்பாவை கொலை செய்தவரை கொண்டுபிடிக்க வேண்டுமா என்று. அது வீண் முயற்சி மேலும் அவர் ஒன்றும் நல்லவர் இல்லை. அவர் பல குடும்பங்களை கெடுத்தவர் தண்டனை அடைய வேண்டியவரே என்று. எனக்கு ஆச்சிரியத்தை தந்தது.
என் போலீஸ் புத்தியும் என் ஆர்வமும் சும்மா இருக்கவில்லை. கண்மணி அம்மாவிடம் பேசினேன் அசோக் இல்லாதபோது. அவர்கள் சொன்னது என்னை தினுக்குற வைத்தது. நரிவிரட்டிதான் கொலைகாரன் என்றும் ஆனால் என் புருசன் தண்டிக்க படவேண்டியவர். அவரால் நரிவிரட்டியின் குடும்பம் மற்றும் பல குடும்பம் பதிக்க பட்டது. நான் அவரை திருத்த பல முயற்சி எடுத்து தோற்றுவிட்டேன். அதன் நான் நரிவிரட்டின் மேல் கேஸ் கொடுக்கவில்லை. அப்போது எனக்கு என் மகன் அவன் எதிர்காலம் முக்கியம் என்று பட்டது. அதனால் அக்கிராமத்தில் இருந்து நகர்ந்த விட்டேன் என்றார்.
நரிவிரட்டிதான் கொலை செய்தார் என்று எப்படி உறுதியாக சொல்ரிங்கம்மா என்றதற்கு. கொலை நடந்த இடத்தில் கிடைத்ததாக அவர்கள் கொடுத்தது தன் இந்த நரிவிரடியின் நரிபல் தாயித்து. நான் தான் போலீஸ் இடமிருந்து மறைத்து விட்டேன். பாவம் இனிமேலாவது நரிவிரட்டி நல்ல இருக்கட்டும் என்று. இது எதும் அசோக்கிற்கு தெரியாது என்றார்.
என் புருசன் தண்டிக்கபடவேண்டியவர் தான் ஆனால் அவரின் கடைசியில் என்ன நினைத்தார் என்ன பேசினார் அவரின் ஆசை என்னவாக இருந்தது தெரியல அதன் கஷ்டமா இருக்கு என்றார். அதன் நான் இங்கே.
அடுத்த பதிவில் நரிவிரடியிடம் கேக்கலாம் எப்படி கொலை செய்தார் என்று. வண்டிக்காரன் எதாவது சொன்னனா என்று.
நல்லா இருக்கு நண்பா.. தொடருங்கள்
ReplyDeleteபோலீஸ்...கொலைன்னு மிரட்டிக்கிட்டே இருக்கீங்க !
ReplyDeleteகண்மணி அம்மாவின் விளக்கம் கண்டு, அவர்கள் மேல் மதிப்பு கூடியது..... (கொலைகாரரை தப்பிக்க விட்டுருந்தாலும் கூட......)
ReplyDeleteஎல்லாமே வண்டிக்கறார் மனைவி சொன்னதுன்னா, நீங்க (போலிஸ்) என்ன கண்டுபிடிச்சிக.... (தாயத்து கூட அவங்க தான் குடுத்திருக்காங்க)
ReplyDeleteநல்லாயிருக்கு அண்ணா.. சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க...
ReplyDeleteகதை ஆருமையாக போயிட்டுருக்கு, சில எழுது பிழை தவிர
ReplyDeleteஎழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். நன்றி சதீஷ்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகலாநேசன் @ இது இருபது வருடத்திற்கு அப்புறம் விசாரிக்கப்படும் கேஸ். அதுவுன் அவன் சொந்த விருபத்திற்க்காக. பாவம் போலீஸ் மன்னித்துவிடுங்கள்.
ReplyDeleteவெறும்பய @ நன்றி. சீக்கிரம் போடுகிறேன்
சித்ரா @ நன்றி. அவர்கள் உண்மையில் ரெம்ப நல்லவங்க.
ஹேமா @ நன்றி. சீக்கிரம் முடித்துவிடுகிறேன். அப்புறம் உங்களுக்கு பிடித்த மாதரி சிறுகதைகள் வரும்
வினோ @ நன்றி.
//// கொலை நடந்த இடத்தில் கிடைத்ததாக அவர்கள் கொடுத்தது தன் இந்த நரிவிரடியின் நரிபல் தாயித்து. நான் தான் போலீஸ் இடமிருந்து மறைத்து விட்டேன்.///
ReplyDeleteநல்லா போகுது
நல்லா போகுது... தொடருங்கள் பாஸ்
ReplyDeleteநல்லா போகுது... when is next?
ReplyDeleteவண்டிக்காரன் நல்ல போகுது வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeleteஇன்றைக்குத்தான் அனைத்து முந்தைய பதிவுகளையும் மொத்தமாக படித்தேன்.. நன்றாக எழுதி இருக்கிறீர்கள், கதை முடிந்தபின் நான் அதனை உங்களுக்கு மீண்டும் திருத்தி அனுப்புகிறேன்.. ஏனெனில் இக்கதையில் ஒரு நல்ல ஓட்டம் இருக்கிறது. ஆனால் முதன்முறையாக எழுதுவதால் கதை கொஞ்சம் சிக்கலாக நகர்கிறது..
ReplyDeleteஎனவே மொத்தமும் படித்துவிட்டு விமர்சனம் எழுதுகிறேன்...