வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, September 10, 2010

வண்டிக்காரன் பாகம் 3




வண்டிக்காரன் ஒரு தொடர்.... இதன் முந்தைய பதிவுகள் 

"சார் டீ..." டீ பையன் டேபிளில் டீ டம்ளர் வைத்த சத்தத்தில் யோசனையில் இருந்து விடுபட்டார் இன்ஸ்பெக்டர்.

வண்டிக்காரன் கொலை செய்யப்பட்டபோது எனக்கு இந்த டீ பையன் வயசுதான் இருக்கும். எனக்கு கொலைக்கான காரணம் புரியாவிட்டாலும் இழுப்பும் அதன் வேதனையும் புரிந்தது.  வயசு ஆக ஆக கொலை யார் செய்திருக்க கூடும் என்ற கேள்வியும் அது சார்ந்த விசாரணையும் என்னுள் வேறு வேறு கோணங்களில் விரியத் தொடங்கியது அதன் முடிவு நரிவிரட்டி. நரிவிரட்டிதான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று நான் நம்ப காரணங்கள் உண்டு.

காரணம் 1 
இந்த ஊரிலே அருவ வேல்கம்பு வேட்டை என்று ஆயுதங்களுடன் பரிச்சயம் உள்ளவர் நரிவிரட்டி. நரிவிரட்டி மலைக்கு வேட்டைக்கு போவதுண்டு. புதரில் ஒளிந்திருந்து எந்த மிருகத்தையும் வேட்டையாடுவதில் கில்லாடி. வேட்டைக்கு போனபோது நரியை வேல்கம்பை கொண்டே குத்தி கொன்றதால்தான் அவருக்கு இந்த பெயர். 

காரணம் 2 
வண்டிக்காரன் ஒரு வீரன் அவனை ஒதைக்குஒத்தை சண்டையிட்டு விழ்த்துவது கடினம். எனக்கு தெரிந்து வண்டிக்காரன் போதைமயக்கதில் இருந்தபோது புதரில் மறைந்திருந்து வேல்கம்பால் நரிவிரட்டி குத்தி சாய்த்திருக்க வேண்டும். பின் வண்டிக்காரனை வெட்டி கூறு போட்டிருக்க வேண்டும். நரிவிரட்டி  காசாப்பு கடை வைத்திருப்பதால் எப்படி ஒரு உடலை துண்டாக்குவது என்று தெரியும். வண்டிக்காரனை துண்டு துண்டாக வெட்டும் அறிவும் தைரியமும் நரிவிரட்டிக்கு மட்டுமே சாத்தியம்.

காரணம் 3 
மேல சொன்னா இரண்டும் நரிவிரடியின் தைரியம் சார்ந்தது. ஆனால் இது கொலைக்கான காரணம். நரிவிரட்டியின் தோட்டம் வண்டிக்காரன் சாராயம் காச்சும் கரட்டின் அடிவாரத்தில் தான் உள்ளது. அதனால் நரிவிரடிக்கு தேவையில்லாத தொல்லைகள். வண்டிக்காரன் போலீசில் மாட்டும்போது எல்லாம் நரிவிரட்டி சாட்சி என்ற பெயரில் அலக்கழிக்கபடுவது வாடிக்கை. அதனால் நரிவிரட்டியின் அன்றாடம் வாழ்க்கை வண்டிக்காரனால் பதிக்கபட்டிருந்தது.

காரணம் 4
இந்த காரணம் தான் நரிவிரட்டி வண்டிக்காரனை கொலை செய்ய முக்கியம் என்று நான் நம்புவது. வண்டிக்காரனின் தொடுப்பு மேகலா நரிவிரட்டியின் மனைவி. நரிவிரட்டிக்கு அவர்கள் தொடர்பு தெரியவந்தா என்பதில் எனக்கு சந்தேகமுண்டு. அப்படி தெரிந்திருந்தால் இது கொலைக்கான வலுவான காரணம் என்று நான் நம்புவது சரியாக இருக்ககூடும்.

இது தவிர என்னிடம் வேறு ஒரு ஆதாரமும் சிக்கியுள்ளது நரிப்பல்லு. நரிவிரட்டி கொன்ன நரியோட பல்ல தாயித்து மாதரி செஞ்சு கழுத்துல அணிந்திருப்பார். அது வண்டிக்காரன் கொலைக்கு அப்புறம் காணவில்லை. அது என்னிடம் சிக்கியுள்ளது. 

ஏன் இந்த ஆதாரங்களை தேடி அப்போது போலீஸ் போகவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமே. வண்டிக்காரனால் போலீஸ்க்கு பல தொல்லை அதனால் கேஸ்யை அவசர அவசரமாக முடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

போலீஸ்க்கு அன்று சிக்காத நரிப்பல்லு எவ்வாறு இன்ஸ்பெக்டரிடம் வந்தது? பார்க்கலாம்.
 

21 comments:

  1. interesting! நல்லா எழுதுறீங்க!

    ReplyDelete
  2. கதை நல்லா போகுது

    ReplyDelete
  3. அருமையா கொண்டு போறீங்க...

    ReplyDelete
  4. நரிப்பல்லா... ஐயோ என்னங்க இப்படியெல்லாம் பயப்படுதறீங்க...ம்... கதை களை கட்டுது... கலக்குங்க

    ReplyDelete
  5. ஓய்வில் இருந்ததால் எல்லாமாக வாசிக்கிறேன்.தொடருங்கள்.

    ReplyDelete
  6. அண்ணா கதை அருமையா போகுது.. சீக்கிரம் அடுத்த பாகத்த போடுங்க..

    ReplyDelete
  7. நரிவிரட்டி நரியைத்தானே விரட்டினான்.
    இன்ஸ்பெக்டர் அவனை என் விரட்டுகிறார். யுவர் ஆனர் என் கட்சிக்காரர் நிரபராதி..

    ReplyDelete
  8. காரணமெல்லாம் சரியாத்தான் இருக்கு....அப்போ அரெஸ்ட் வாரன்ட்ல கையெழுத்து போட்ரவா.........

    ReplyDelete
  9. அட நரிவிரட்டியும், வண்டிக்காரனும் வேற வேற ஆளா..,,

    நான் ஒரே ஆளோன்னு நினைச்சிருந்தேன்

    ReplyDelete
  10. இண்டிலிக் 26வது ஓட்டா இருந்தாலும், தமிழ்மணத்தில் இரண்டாவது ஓட்டு என்னோடது,

    மக்களே தமிழ்மணத்திலும் ஓட்டுப் போடுங்க

    ReplyDelete
  11. ஓட்டு சேர்க்கப் பட்டது என்று வருகிறது. ஆனால் தமிழ்மணப் பட்டையில் 1 மட்டுமே காட்டுகிறது. என்ன கொடுமை சரவணா இது. மீண்டும் போட்டால் ஏற்கனவே சேர்க்கப் பட்டுவிட்டது என்று வருகிறது.

    ஐயகோ..,

    தமிழ்மணப் பட்டையை காகம் தூக்கிக் கொண்டு ஓட..,

    ReplyDelete
  12. காரணம் 1, 2, 3, 4, என்று வரிசைப் படுத்த யாருமே இல்லையா?

    ReplyDelete
  13. //போலீஸ்க்கு அன்று சிக்காத நரிப்பல்லு எவ்வாறு இன்ஸ்பெக்டரிடம் வந்தது? //

    கோமள வல்லி, கொஞ்சும் சிலை, குதிக்கும் மான் என்றெல்லாம் புகழப் பட்ட அந்த கோமளாவுக்கு தெரிந்திருக்குமோ..,

    ReplyDelete
  14. கதை நல்லாவே போகுது...!!

    ReplyDelete