வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, September 1, 2010

வண்டிக்காரன் (பாகம் 2)

வண்டிக்காரன் ஒரு தொடர்.... இதன் முந்தைய பதிவுகள் 



சிறிது நேரத்தில் பெருசுக்கு மயக்கம் தெளிந்தது. ஆஸ்பத்திரிக்கு போகனுமா என்றதற்கு பெருசு மறுத்தது. ஏதாவது வாங்கிசாப்புடுங்க என்று இன்ஸ்பெக்டர் கொடுத்த  ஐம்பது ரூபாயை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு முதல்முறையாக வாயை திறந்தது பெருசு.

"உங்கள நான் இந்த ஊருல பார்த்ததில்லையே.... நீங்க யாரு?"

யோசித்த இன்ஸ்பெக்டர் "ப்ரெண்டு  ஒருத்தர பார்க்கவந்தேன்" என்றார்.

"உங்கள எங்கேயோ பாத்திருக்கேன்... உங்க முகம் என் மனசுல அப்படியே ஆணி அடிச்சதுபோல பதுஞ்சுருக்கு" தாடையை தடவி யோசிக்க ஆரம்பித்தது பெருசு.

பெருசு கண்டுபிடுச்சுரும்போல என்று ஒரு நிமிஷம் ஆடிப்போனார் இன்ஸ்பெக்டர். என்ன சொல்லலாம் என்று யோசிக்கும்போதே அடுத்த கேள்வி கேட்டது பெருசு.

"என்ன போலீஸ்காரர் வண்டி போல இருக்கு. நீங்க இந்த ஊருக்கு புதுசா வந்த போலீசா ?"

"ஆமாங்க பெருசு... நான் தான் புதுசா இந்த ஊருக்கு வந்திருக்க போலீஸ்..." இனிமேலும் மறைக்க வேண்டாம் என்று ஒத்து கொண்டார் இன்ஸ்பெக்டர்.

கேஸ் பத்தி கேக்கலாமா? கேட்டாலும் எந்த உண்மையும் வரப்போறது இல்லை சரியான நேரத்தில் சரியான முறையில் விசாரிக்கலாம் என்று ஒரு நிமிஷம் யோசித்து வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டார். பெருசு எழுந்து நடக்க ஆரம்பிக்க இன்ஸ்பெக்டரும் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினார்.

கொஞ்சதூரம் போயி திரும்பிபார்த்த பெருசு. என் கணக்கு சரியா இருந்தா இந்த போலீஸ் கிட்ட கொஞ்சம் சாக்கரதையா இருக்கணும். இவரு இந்த ஊருக்கு வந்த நோக்கம் என்ன தெரியனும். இவர் வந்த நோக்கம் வண்டிக்காரன் கொலையாளி என்றால்? கொலைகாரன் தப்பிப்பது கஷ்ட்டம். வீட்டுக்கு வெரசா நடந்தார் பெருசு.

பைக்கை ஸ்டாண்டு போட்டுவிட்டு ஸ்டேசனுக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்த இன்ஸ்பெக்டர் கேஸ் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தார். என் யுகங்கள் சரியானால் பெருசு தான் கொலையாளி. ஆனால் அதை எவ்வாறு ஊர்சிதப்படுத்துவது... அதில் நிறைய சிக்கல் இருக்கு. தான் யார் என்று தெரிந்தாலும் கேஸ் மேல் நோக்கி எடுத்து செல்வதிலும் சிக்கல். இது ஒரு மூடிய கேஸ் அரசாங்கமோ மேல்அதிகாரியோ விசாரிக்க சொல்லவில்லை. என்னை பல வருடங்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயம். கட்டாயம் கண்டுபிடிக்கணும். சட்டத்தின் முன் நிறுத்தனுமா? வண்டிக்காரன் கொலை செய்யப்படவேண்டியவனா ? என்னக்கே பல கேள்விகள் உண்டு. ஆனால் எனக்காக... என் ஆத்மா திருப்திக்காக கண்டுபிடிக்கணும். 

எவ்வாறு நரிவிரட்டியாய் மடக்குவது என்று யோசித்தார். நரிவிரட்டி அதுதான் பெருசின் பெயர்.

இந்த இன்ஸ்பெக்டர் யார் ? இந்த நரிவிரட்டி என்ற பெருசு யார்? ஏன் நரிவிரட்டி  வண்டிக்காரனை கொலை செய்ததாக இன்ஸ்பெக்டர் நம்புகிறார்? இன்ஸ்பெக்டருக்கு ஏன் மூடிய கேஸ் மீது அக்கறை?
என பல கேள்விகள் உண்டு உங்களை போல் எனக்கும்.... வண்டி வரும் வரை காத்திருப்போம் ...... ????  

23 comments:

  1. கதை அழகாக செல்கிறது... விறுவிறுப்பாக இருக்கிறது...

    ReplyDelete
  2. இந்த இன்ஸ்பெக்டர் யார் ? இந்த நரிவிரட்டி என்ற பெருசு யார்? ஏன் நரிவிரட்டி வண்டிக்காரனை கொலை செய்ததாக இன்ஸ்பெக்டர் நம்புகிறார்? இன்ஸ்பெக்டருக்கு ஏன் மூடிய கேஸ் மீது அக்கறை?
    என பல கேள்விகள் உண்டு உங்களை போல் எனக்கும்.... வண்டி வரும் வரை காத்திருப்போம் ...... ????

    ...Suspense!!!

    ReplyDelete
  3. என்னன்னே இப்படி திடீர்ன்னு முடிச்சிட்டீங்க... ரொம்ப கேப் விடாம சீக்கிரம் அடுத்த பாகத்த போடுங்க...

    ReplyDelete
  4. கதையில் செம ஃப்ளோ இருக்கு

    தொடருங்கள் :)

    ReplyDelete
  5. இந்த பாகம் கொஞ்சம் சீக்கிரமா முடிஞ்சா மாதிரி இருக்கு...

    ReplyDelete
  6. கொஞ்சம் வசனத்தை கூட்டி, சுவாரசியத்தை ஏத்துங்கள்

    ReplyDelete
  7. கட்டாயம் செஞ்சுருலாம் அருண். நன்றி உங்கள் சுவடு பதித்ததற்கு.

    ReplyDelete
  8. என்ன செய்யிறது கலாநேசன் பெருசா போட்டா நாம மக்கள் படிக்க மாட்டேன்றாங்க. அதான் சுருக்கமா போட்டேன்... இப்ப சுவாரசியம் கூட்டா சொல்றங்க. நன்றி தாங்கள் சுவடு பதித்ததற்கு.

    ReplyDelete
  9. இன்ஸ்பெக்டர்- பிரபு

    ஏட்டு - கார்த்திக்

    மேகலா - நளினி, மஞ்சுளா அல்லது லதா

    பேட்ரி - சுதாகர், டெல்லி கணேஷ்

    வண்டிக்காரன் மற்றும் நரி விரட்டி - சத்தியராஜ் விஜயகாந்த், சரத் குமார்

    இப்படியே நினைச்சிக்கிட்டு கதை படிக்கலாமா தல

    ReplyDelete
  10. என் கதைக்கு நல்ல திரைக்கதை எழுதி காட்சி பிரித்து படம் எடுக்காமல் இருந்த சரி, இருந்தாலும் விஜகாந்த்,சரத்குமார் கொஞ்சம் ஓவர். நீங்கள் அவர்கள் ரசிகரா இருந்த மன்னிக்கவும்.
    கதாபாத்திர தேர்வுக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  11. கண்டிப்பா போட்ரலாம் ஜெயந்த்... ஆனா அதுல ஒரு சிக்கல் நான் மூனு நாள் ஊர்ல இல்ல வந்துதான் போடணும் அதுவரை காத்திருப்பிர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  12. என்ன பண்றது இப்படி ஏதாவது இன்ருந்தாதன் படிக்குராங்க. நன்றி சித்ரா.

    ReplyDelete
  13. சங்கவி வருகைக்கு அன்புக்கு விமர்சனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  14. ///நரிவிரட்டி அதுதான் பெருசின் பெயர்///இந்த பெயர் காரணம் சொன்னால் நன்றாக இருக்கும்.கதை விறுவிறுப்பாக போகுது.

    ReplyDelete
  15. விறுவிறுப்பு கூடிருச்சு... கலக்கல்

    ReplyDelete
  16. i like the pictures, which exactly matches with the story.. vandi nalla poigittu irukku.. konjam fast-aa varumaa..

    ReplyDelete
  17. கதை நல்லா போகுதுங்க... கொஞ்சம் பெரிய பார்ட்ஆ போடுங்க.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ஆமா ஆமா.. எல்லா கேள்வியும் வந்துச்சு..
    சீக்கிரம் வந்து பதில் சொல்லுங்க..
    பார்ப்போம்.. :-))

    ReplyDelete
  19. படிக்கிறபோது சுவாரஸ்யத்தையும்,கூடுதல் ஆவலையும் கொண்டுவருகிற எழுத்து.வாழ்த்துக்கள் முனியாண்டி.

    ReplyDelete
  20. தல நல்ல இருக்கு !!!
    நிறைய கேப் விடாதீங்க அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க !

    ReplyDelete
  21. கதை பரபரப்பா ஆரம்பிச்சிருக்கு.... வண்டி வரும்வரைக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  22. நல்ல கதை வாழ்த்துக்கள்

    ReplyDelete