வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, December 10, 2010

மகாநதி ஒரு பயணம்


இது ஒரு மனிதனின் வாழ்க்கை ஓட்டத்தை சொல்வதலோ என்னவோ கதை நாயகனின் வாழ்க்கையும் அதன் சார்ந்த நிகழ்வுகளும் நதியின் கரையிலும் அது சார்ந்த பகுதியிலும் நிகழ்வதாக காட்டப்பட்டிருக்கும். கதை காவரியில் (திருநாகேஸ்வரம்) தொடக்கி கூவத்தில் (சென்னை)  பயணப்பட்டு கூக்கிலியில் (கல்கத்தா) விரிந்து கூவத்திற்கு திரும்பி பின் காவேரியில் ஆரம்பித்த இடத்திலே அவன் வாழ்க்கை அமைதியாக தொடர்வதாக சொல்லப்பட்டிருக்கும். 

கதையில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர் நதியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கும். கதையின் மையநாயகனின் பெயர் கிருஷ்ணா. நாயகியின் பெயர் யமுனா. நாயகனின் முதல் மனைவின் பெயர் நர்மதா. நாயகன் குழந்தைகளின் பெயர் காவேரி மற்றும் பரணி. மகாநதி இதுவம் நதியின் பெயர். படத்தின் தலைப்பு நதியின் வலைவுகளாலும் கோடுகளாலும் எழுதப்பட்டிருக்கும். படத்தின் முதல் காட்சியும் கடைசிக்காட்சியும் நதியில் ஆரம்பித்து நதியில் முடியும்.

கதாநாயகன் சிறையில் இருக்கும் போது ஏதோ ஒன்று அவனை அவன் பழைய நினைவுகளை தூண்டவேண்டும். சிறையில் இருப்பவனுக்கு நான்கு பக்கம் சுவர் மட்டுமே இருக்கும் எது அவன் பழைய நினைவை தூண்டமுடியும்? இங்கே கதாசிரியர் மிகவும் சிறப்பாக ஒன்றை உபயோகித்திருப்பார். அதுதான் சென்னை மத்திய சிறைசாலையின் பின்ன ஓடும் ரயில் சப்தம் நாயகனின் வீட்டிற்கு பக்கத்தில் ஓடும் ரயில் சப்தம் போல் இருப்பதால் அவன் நினைவு சிறையில் இருந்து சப்தத்துடன் பயணப்பட்டு அவன் பழைய வாழ்க்கை திரையில் விரிவதாக காட்டபட்டிருக்கும்.

மற்றொரு கவிதையான காட்சி. நாயகன் சிறையில் இருப்பன். வழக்கமாக முதலில் ஓடிவரும் மகள் அன்று மறைந்திருந்து தலையை மட்டும் நீட்டி கம்பிக்கு பின் இருக்கும் அப்பாவை பார்ப்பாள். அத்தை முறை உடைய வயதான கிழவி நாயகனின் அருகில் இருக்க மகளை நாயகன் கைகாட்டி அழைக்க அவள் மெதுவாக மறைவில் இருந்து தாவணியுடன் வெளிப்படுவாள்.  நாயகன் விழிகள் இரண்டும் கண்ணீர் கோர்க்க மனசு வெடித்து பேச வார்த்தைகள் இன்றி தலை ஆட்டி கேட்பான். உங்கள பாத்துட்டுபோன அன்னிக்கி மாப்புள்ள என்பாள் கெழவி. கெழவியோ அத்தை முறை, போது இடம்  பேத்தி வயதுக்கு வந்தது குறித்து பேச இயலாது. நல்ல படிக்கிற என்று பேச்சை மாற்றுவாள் கெழவி.  நாயகனோ சிரத்தை இல்லாமல் தலையாட்டுவான் கம்பிக்கு பின் கண்ணிருடன். மகளோ தந்தை காலில் விழுவாள் கம்பிக்கு இந்தபக்கம்.

மகன் கதாபத்திரத்தை விளக்கும் காட்சிகளாக... நாயகனின் பையன் ஏதாவது வித்தியாசமான பொருள் கண்டால் எடுபதுபோல் படத்தில் காட்சிகள் வரும் லண்டன் நண்பன் வாங்கிவந்த பொருள், அவன் கார் சாவி, கோவில் அருகில் நாய் குட்டி, வில்லனின் விசிடிங் கார்டு. இந்த விசிடிங் கார்டுயை வைத்துத்தான். நாயகனின் மகளும் மகனும் அவனை பார்க்கப்போய் அங்கிருந்து சீரளிக்கபடுவாள் மகள். மகன் நாய் பின் ஓடி கலைக் கூத்தாடியிடம் சேர்வான். அவள் சீரழிக்கபடுவதற்கு முந்தய காட்சியில் அவளின் வீணை தெருவில் ஒருவன் கால்படுவது போல் காட்டி யானை வரப்போவதை மணியோசை செய்திருப்பான் கதாசிரியன்.

ஒரு நெஞ்சை உருக்கும் காட்சி. மகளை நாயகன் பார்க்க கூடாத இடத்தில் பார்த்து மீட்டிக்கொண்டு வரும்போது மஞ்சத்துணியால் போர்த்துவதும் ஒரு சிறுமி அவளுக்கு குங்குமம் இடுவதும் அங்கிருந்து அவர்கள் கூக்கிலி நதியில் பயணப்படுவதுபோல் காட்டி அவள் புனிதபட்டதுபோல் காட்சி அமைத்திருப்பார்கள். அதே காட்சியில் மகளில் அறையில் அப்பாவின் புகைப்படும் இருப்பதும் என அவள் மனதில் அப்பா இருப்பதை கவிதையாய்  காட்டப்பட்டிருக்கும்.

வசனக்கர்த்தாவின் பங்காக சில நல்ல காட்ச்கிகள்.  சாராயம்,சிகிரெட் விற்க கூப்பிடும் போலீஸ்யைப்பார்த்து "இது தப்புசென்சவங்க திருந்துற இடமுன்னு வெளியில இருக்கவங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க... நானும் அப்படித்தான் நினச்சுக்கிட்டுருக்கேன்... நீ காக்கிசட்டபோட்ட குற்றவாளி... எனக்கு அது இல்ல" என்பன் கைதி நாயகன். 

கெட்டவர்களை தெய்வம் தண்டிக்கும் என்று சொல்லும் அய்யருக்கு பதிலாக  "நின்னு கொல்லர தெய்வமும் சும்மா இருக்கு... அன்னு கொல்லர சட்டமும் சும்மா இருக்கு" என்பன் நாயகன்.

நேர்மையான எனக்கு ஏன் இந்த தண்டனை என்று பழிவாங்க துடிக்கும் நாயகனிடம் "நேர்மையானவன்னு ஒருத்தனும் கெடையாது... என்னைவிட அயோக்கின்னு வேணுமுன்ன சொல்லலாம்.... பிளக்குல டிக்கெட் வாங்கலையா.... வேட்டியும் சேலையும்  வாங்கிட்டு ஓட்டு போடலையா... சாக்கடியில இறங்கி சுத்தம் பண்றத விட்டுட்டு... சாக்கட நம்ம மேலே படாம ஒதுங்கிப்போரதுதான் உத்தமம்..." என்பதாய் ராஜேஷ் (போலீஸ்) விவாதம் போகும்.

அதேபோல் மகள் கதாபாத்திரம் தூக்கத்தில் உளறுவதுபோல் கதை முன்பகுதியில் இருஇடங்களில் காட்டப்பட்டு. அதன் தொடர்ச்சியாய் அவள் கல்கத்தாவிலிருந்து மீட்டிவந்த பின் அந்தப்பெண் "விடுங்கட தேவிடியா பசங்களா...ஒரு நாளைக்கு எத்தன கஷ்டமர்ஷ் நான் என்ன மெசினா..." என்று தூக்கத்தில் உளறுவதுபோல் காட்சியை   பார்த்த நாயகன் தந்தை வெம்பி வெகுண்டு வில்லன்களை கொல்லாப்புறபடுவான்.

ஜெயிலில் ராஜேஷ்(போலீஸ்) நாயகனுக்கு பாரதி புத்தகம் கொடுக்கும்போது அப்புத்தகத்தின் பிளாஷ்டிக் அட்டையில் சூரிய ஒளிபட்டு நாயகன் முகத்தில் படுவதாக காடப்பட்டு, "பல வேடிக்கை மனிதரைப்போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று பாரதி கவிதையுடன் நாயகன் பழிவாங்கல் முடியும்.

இந்த படம் ஒரு வாழ்க்கை அனுபவம். வாழ்க்கையின் முக்கிய முடிவை அவசரப்பட்டு மிகப்பெரிய ஆசையால் சலனத்துடன் முடிவெடுத்தால் அதன் விளைவு மகாநதி.

9 comments:

  1. தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் இந்த படமும் ஓன்று...

    ReplyDelete
  2. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்..

    ReplyDelete
  3. மகாநதி அருமையான படம் சார் நிறைய முறை பார்த்திருக்கேன்
    தாங்கள் அழகாகன வரிகளில் தொடுத்துள்ளீர்கள் மகாநதியை அருமை

    ReplyDelete
  4. காலம் கடந்த கண்ணோட்டம் என்றாலும் புதுமை வார்த்தைகள் முழுவதிலும் நிரம்பி வழிகிறது . உங்களின் இந்த திரைப் பார்வை ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. பார்த்த படமானாலும் இன்னொருதரம் பார்க்கவேணும்போல இருக்கு.கண்டிப்பாய் இந்தக்கிழமை பர்ப்பேன்.நன்றி !

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம்!!

    நல்ல கதை, திரைக்கதை எல்லாம் இருந்தாலும் கமல் எனும் மாபெரும் சக்திக்காகவே இந்த படம் சிறந்த படம் என்ற அந்தஸ்தைப் பெற்றது என்றால் அது மறுக்க முடியாது!!

    ReplyDelete
  7. //கதையில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர் நதியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கும்//

    இந்த கோணத்துல யோசிச்சதில்ல... வாவ்... ரெம்ப கரெக்ட்... நெறைய வாட்டி பாத்த படம் இது... நல்ல விமர்சனம்... பல கோணங்களிலும்

    ReplyDelete
  8. வித்தியாசமான கோணத்தில் ஒரு அலசல்... வாழ்த்துக்கள்

    ReplyDelete