வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, December 28, 2010

அவளருகில்


அவள் அருகாமை எனக்கு பிடித்திருந்தது.

ஒரு பெண்ணை இவ்வளவு அருகில் நான் பார்த்ததில்லை.

மிகவும் மங்கலான வெளிச்சம் என் எதிரில் அவள்.

இருவருக்கும் நடுவில் மேசையில் காப்பி.

தொட்டுவிடும் தூரத்தில் அவள் கை.

சிகரங்களை நோக்கி - வைரமுத்து அவள் கையில்.

விரலால் கலைந்த முடியை காதுக்கு பின் தள்ளுகையில் காதுமடலில் சிறு மச்சம் கவனிக்க தவறவில்லை.

என் அம்மாவுக்கு அடுத்து இவள்தான் அழகி என்று தோன்றியது.

இது போல் இதற்கு முன் தோன்றியது இல்லை எந்த பொண்ணை பார்த்தபோதும்.

காப்பியை ஒவ்வொரு துளியாய் ருசித்தேன் அவளை ரசித்துக்கொண்டே.

ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் ஏதும் என் புத்திக்கு எட்டியதாகத் தெரியவில்லை.

இதுபோல் இருந்ததில்லை நான் இதற்கு முன், இதுவும் பிடித்திருந்தது.

மாற்றம் ஏதோ என்னுள் நிகழ்ந்துகொண்டிருந்தாய் உணர்ந்தேன்.

என் தலைக்குப்பின் ஏலக்கை டீ வாசனை. நேரம் ஆகுது சீக்கிரம் எழுந்திருடா  பாட்டியப்  பாக்க ஊருக்கு போகணும் அம்மாவின் குரல் போர்வைக்கு வெளியே.

7 comments:

 1. என்னை புரிந்துகொள்ள
  உன்னை படிகின்றேன்
  என் புத்தகம் நீ !!!

  ReplyDelete
 2. கவிதை தனமாய், ரசிக்கும் படியாய் அருமை..

  ReplyDelete
 3. அப்பப்போ இப்படி தான் எங்க இருக்கோம் என்றே தெரியாது :)

  ReplyDelete
 4. கல்யாணம் பண்ணா இந்த மாதிரி வியாதிலாம் தன்னால சரியாகிடும்

  ReplyDelete