காலத்தின் கையில் நான்
------------------------------
விதை இருந்து
விலகி கருயிருத்தி
குளிர்ந்து பெருத்து துளிர்த்து
விரிந்து பிரிந்து
முலை முட்டி
இலை விரித்து
இதம் கதகதப்பு வேண்டி
வேரிடமிருந்து விலகி
கிளை பரப்பி
மரமாகி பூத்து
சூல்கொண்டு காய்த்து
கனியில் கருவேற்றி
விதை நிறுத்தி
தாய்மண்ணில் வேர்விடுவேனா?
பச்சையம் இழந்து தளர்ந்து
உலர்ந்து சருகாகி
தள்ளாடி தள்ளாடி
அயல்மண்ணுக்கு உரமாவேனோ?
காலத்தின் கையில் நான்.
அருமை.. வாழ்த்துக்கள்
ReplyDeletesimply superb... depicted state of mind...
ReplyDeleteதனித்துவமான படைப்பு
ReplyDeletehttp://kavikilavan.blogspot.com/
மிக அருமை.
ReplyDelete//பச்சையம் இழந்து தளர்ந்து
ReplyDeleteஉலர்ந்து சருகாகி
தள்ளாடி தள்ளாடி
அயல்மண்ணுக்கு உரமாவேனோ?//
அற்புதமான வரிகள்...
பச்சையம் இழந்து தளர்ந்து
ReplyDeleteஉலர்ந்து சருகாகி
தள்ளாடி தள்ளாடி
அயல்மண்ணுக்கு உரமாவேனோ?
காலத்தின் கையில் நான்.
....Simply Superb!
மறு சுழற்சி ...
ReplyDeleteவாவ்....
ReplyDeleteஅருமைங்க....
அருமை
ReplyDeleteAnnachi..Interesting..nice. Esp. the second paragraph.
ReplyDeleteJust that this small brain is not capable of understanding completely about what is conveyed in the first paragraph in its entirety :-). Will bridge the gap.
ஆஹா ..அமர்க்களம் ...
ReplyDeleteமனதை சுருட்டி கவர்ந்து விட்டது கவிதை
am sharing this in face book
ReplyDeletekalakittinga thalaiva, mika nalla kavithai.
ReplyDelete