வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, January 28, 2011

ஆசையா புள்ள காத்திருக்கு


பேறுகாலத்துக்கு வந்த
மக தோடு அடகுவச்சு
போட்ட கடலச்செடி
மொளச்சு வந்துருச்சு.

கொடி கொலுசு
கொழந்தைக்கு எடுத்து
அடகுத்தோடு திருப்பி
அப்பன் அனுப்புமுன்னு
ஆசையா புள்ள காத்திருக்கு.

மறுதண்ணி இல்லாம
செடி வாடத்தொடங்கிருச்சு
ஒரு தூத்த வந்தா
செடி பொளச்சுக்கும்
புள்ளய அனுப்பலாம்
புருசன் வீட்டுக்கு.

6 comments:

 1. arputhamana kavithai.. vivasayiyin sokathai sollama solitinga ....

  ReplyDelete
 2. எதார்த்த நடையில் எதார்த்தத்தை பதிவு செய்த விதம் அருமை

  ReplyDelete
 3. யதார்த்தமான கிரமாத்து வாசனை..

  ReplyDelete
 4. அருமை அருமை அருமை

  ReplyDelete
 5. கவிதையின் நடை அருமை.. உண்மை சுடுகிறது...

  ReplyDelete