நீ போனாலும்
போகலடி உன் வாசம்.
கண் முடினாலும்
மறையலடி உன் உருவம்.
என் சுவாசத்திலும்
சுடுதடி உந்தன் இளங்சூடு.
முழுக்க போர்த்தினாலும்
இல்லையடி உந்தன் கதகதப்பு.
தலையணை கூட
தல்லையடி அந்த இதம்.
மெத்தையில் கூட
இல்லையடி அந்த பதம்.
இரவின் நிசப்தம்
நினைவூட்டுதடி அந்தநேர மவுனம்.
பாதித்தூக்கத்தில் உனை
தேடுதடி என் பாழ்மனது.
கனவிலும் உன்னிடம்
தொடருதடி என் சீண்டல்.
நீளும் இரவு
குடிக்குதடி என் உயிர்.
உந்தன் பெண்மையிடம்
தோற்றதடி எந்தன் ஆன்மை.
உறக்கத்தில் கூட
கொல்லுதடி உன் பிரிவு.
எழுந்தப்பின்னும் கலைய
மறுக்குதடி உன் நினைவு.
என்னாச்சுங்க...
ReplyDelete"Miss"ing...... her. :-)
ReplyDeleteம் ம் காதல் கொள்ள வெளிகிட்டுது உங்களையும் வாழ்க வளமுடன்
ReplyDeleteCan't say more... very nice...
ReplyDelete