வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, January 26, 2011

முத்தம்
கொடுத்து கொண்டே
பெற்றுக் கொள்ள
முடிகிற விந்தை.
***
உடலில் பொருள்
பாராமல் பரிமாற
முடிகிற புதுமை.
***
இங்கு மட்டுமே
எச்சிலும் ஏற்க
துணியும் ஆச்சரியம்.
***
கணக்கு பார்த்து
கொடுப்பது இல்லை
இதில் கண்முடிகொண்டதால்.
***
இதழ்கள் நான்கு
என்றாலும் சேர்ந்தெழுப்பும்
ஓசை ஒன்றே.
***
வாங்குமிடம் கொடுக்கவும்
கொடுக்குமிடம் வாங்கவும்
முடிகிற லாவகம்.
***
கன்னத்தை குறிவைத்து
இதழில் இட்டாலும்
குற்றமென்று சட்டமில்லை.
***
கொடுப்பதால் இழக்க
ஏதுமில்லை - வாங்கியவன்
கொடுக்க குறைவதில்லை.
***
எதில் தொடங்கி
எங்கு முடிந்தாலும்
இதில் தொடங்கினால் சுபமே.
***
கொடுக்கல் வாங்கலில்
கொஞ்சம் கூடிக்குறையலாம்
இதுவொன்றும் கணிதமில்லை.
***
இறுக்கமான இதமான
அழுத்தமான மிதமான
எல்லாமே சரிதான் இதில்.
***
உன்னது என்னது
பாகுபாடு இல்லை
இதழ்களில் இடம்மாற.
***
இதழ்கள் இருப்பிடம்
வெவ்வேறு ஆனாலும்
இதில் சேருமிடம் ஒன்றே.
***
தொடக்கத்தில் தொடரவும்
முடிந்தபின் தொடங்கவும்
இதுவே முதல்.
***


5 comments:

  1. ஒரே முத்த மழையா இருக்கே,...

    ReplyDelete
  2. ரைட்டு.....என்சாய்...!

    ReplyDelete
  3. அழகான முத்துக்களை கோர்த்த மாலை ......கவிச்ச்ரமஅழகாய் இருக்கு ......

    ReplyDelete