ஒதுங்க இடமில்ல
ஒத்தாசைக்கு ஆளில்ல
மாத்து துணி இல்ல
மந்தைக்குபோக மக இல்ல
ஒத்தவயிறு காயிது
பெத்தமகன் இங்கில்ல
குடிக்க கூழு இல்ல
கும்பிட்டசாமி கூட வல்ல
கடைசியா பேரன பாத்தது
காதுகுத்த ஊருக்கு வந்தப்ப
இந்த கெளவிய பாக்க
இதுவரைக்கும் வந்ததில்ல
பாடையில போறத
பாக்க வருவானா
ஊதுபத்தி புடுச்சுகிட்டு
ஊர்வலமா வருவானா
பாதகத்தி கட்ட வேகிறத
காடுவர வந்து பாப்பானா
//ஒத்தவயிறு காயிது
ReplyDeleteபெத்தமகன் இங்கில்ல//
ஒருதாயின் இன்றைய நிலைபாட்டை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் பாராட்டுகள்
உண்மையான கருத்துக்கள் அருமையாய் எழுதியுள்ளீர்கள் நெஞ்சு வலிக்கிறது
ReplyDeleteநிஜமான வலி :)
ReplyDeleteஉணர்வ இருக்குங்க....
ReplyDeleteஉருக்கமான கவிதை. பேச்சு நடையில் அருமையான வெளிப்பாடு. வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதை...உருக்கமாக இருக்குங்க.. வாழ்த்துக்கல்
ReplyDeleteபெரும்பாலான முதியவர்களின் மனசு பாடும்பாடல். இது தான். மகவுகளுக்கும் ஒருகாலம் இப்படி வராமலா போகும்........? உள்ளம் தொடும் வரிகள். பாராட்டுக்கள் .
ReplyDeleteஎப்பவும் போல் உங்கள் எழுத்தில் தெறிக்கும் நிதர்சனம்...
ReplyDeleteThanks for all
ReplyDelete
ReplyDeletenenjai thotta varigal
ஊதுபத்தி புடுச்சுகிட்டு
ஊர்வலமா வருவானா