வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, June 7, 2011

எண்ணும் நாட்கள்


ஒதுங்க இடமில்ல
ஒத்தாசைக்கு ஆளில்ல

மாத்து துணி இல்ல
மந்தைக்குபோக மக இல்ல

ஒத்தவயிறு காயிது
பெத்தமகன் இங்கில்ல

குடிக்க கூழு இல்ல
கும்பிட்டசாமி கூட வல்ல

கடைசியா பேரன பாத்தது
காதுகுத்த ஊருக்கு வந்தப்ப

இந்த கெளவிய பாக்க
இதுவரைக்கும் வந்ததில்ல

பாடையில போறத
பாக்க வருவானா

ஊதுபத்தி புடுச்சுகிட்டு
ஊர்வலமா வருவானா

பாதகத்தி கட்ட வேகிறத
காடுவர வந்து பாப்பானா

10 comments:

  1. //ஒத்தவயிறு காயிது
    பெத்தமகன் இங்கில்ல//

    ஒருதாயின் இன்றைய நிலைபாட்டை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  2. உண்மையான கருத்துக்கள் அருமையாய் எழுதியுள்ளீர்கள் நெஞ்சு வலிக்கிறது

    ReplyDelete
  3. உணர்வ இருக்குங்க....

    ReplyDelete
  4. உருக்கமான கவிதை. பேச்சு நடையில் அருமையான வெளிப்பாடு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கவிதை...உருக்கமாக இருக்குங்க.. வாழ்த்துக்கல்

    ReplyDelete
  6. பெரும்பாலான முதியவர்களின் மனசு பாடும்பாடல். இது தான். மகவுகளுக்கும் ஒருகாலம் இப்படி வராமலா போகும்........? உள்ளம் தொடும் வரிகள். பாராட்டுக்கள் .

    ReplyDelete
  7. எப்பவும் போல் உங்கள் எழுத்தில் தெறிக்கும் நிதர்சனம்...

    ReplyDelete

  8. nenjai thotta varigal
    ஊதுபத்தி புடுச்சுகிட்டு
    ஊர்வலமா வருவானா

    ReplyDelete