இருக்கையில் அமர்ந்தாள்
நீண்டபெருமூச்சு விட்டாள்
சன்னல் திறந்தாள்
எங்கோ வெறித்தாள்
தூறலை தொட்டாள்
முந்தானைமுக்காடு இட்டாள்
நகம் கடித்தாள்
புத்தகம் புரட்டினாள்
புன்னகை பூத்தாள்
புருவம் சுருங்கி யோசித்தாள்
புத்தகம் நழுவ தூங்கினாள்
சொம்பல் முறித்து எழுந்தாள்
கைகள்தேய்த்து கண்ணில் ஒத்தினாள்
கண்கள்மூடி காத்து வாங்கினாள்
தலைமுடி காதுக்கு ஒதிக்கினாள்
முந்தானை சரி செய்தாள்
அவள் நிறுத்தத்தில் இறங்கினாள்
ஒத்தையடிபாதையில் நடந்து மறைந்தாள்
சில நாட்கள்.......
சில மாதம்.......
சில வருடம்......
ஒத்தையடிபாதை நிறுத்தம் வரும்போது
நிற்காமல்வருது அவள் நினைப்பு
பயணம் தொடருது அதேவழி
பயணம் தொடருது அதேவழி
ம்ம்ம் பல நாட்களுக்கு பிறகு பதிவு...அருமை..தொடரட்டும் பயணம்..
ReplyDelete//பயணம் தொடருது//
ReplyDeleteதொடரட்டும்... super...