வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, April 20, 2011

அவனாலா?


அன்னம் மறந்தேன் அவனாலா?
அன்னம் பிடிக்காமல் ஆனதாலா?

இடைமெலிந்து ஆனது பாதியா?
இல்லையிது காதல் வியாதியா?

கைவளை தனியே போனதா?
இல்லையிது பசலையால் வந்ததா?

உயிர்மூச்சில் உன் வாசமா?
உன் சுவாசத்தின் மீதமா?

உதட்டின் ஓரம் மச்சமா?
உன் முத்தத்தின் மிச்சமா?

கண்மூடி உனைகாண்பது கனவா?
காதல் செய்த நினைவா?

14 comments:

 1. பாஸ்.. டி.ஆர்., ரசிகரா.?? ஹி ஹி.. நல்லா படிச்சிட்டு வர்றேன்..

  ReplyDelete
 2. //அன்னம் மறந்தேன் அவனாலா?
  அன்னம் பிடிக்காமல் ஆனதாலா?//

  அட இது தெரியாதா பாஸ்.. அதுக்கு முந்தய வேலை நல்லா சாப்பிட்டிருப்பீங்க.. பசிச்சிருக்காது.. அவ்வளவு தான்.. வேற ஒண்ணும் இல்லை..

  ReplyDelete
 3. //கண்மூடி உனைகாண்பது கனவா?
  காதல் செய்த நினைவா?//

  அது ஒண்ணுமில்ல.. கொஞ்சம் வெறப்பா உக்காந்து யோசிச்சா இப்படிலாம் தோணும்..

  ReplyDelete
 4. எல்லாமே கேள்விகளாகவும், சில கேள்விகள் ரசனைக்காக மட்டும் கேட்டது போல உணர்கிறேன்.. கேள்வி பின்னர் அந்த கேள்வியை மெருகேற்றுவது போலான விடை.. இப்படி கவிதை அமைந்தால் செமயா இருக்கும்..

  ReplyDelete
 5. இத்தன வோட்டிங் விட்ஜெட் வச்சிருந்து என்ன யூஸ்.. ஒண்ணுத்திலயும் இணைக்கலையே.!!

  அதனால வெளிநடப்பு செய்யுறேன்..

  ReplyDelete
 6. தமிழ்மணத்தின் கதவு திறந்திட்டது.. குத்தியாச்சு ஒரு ஓட்டு..

  ReplyDelete
 7. நன்றி கூர்மதி. மற்ற பதிவுகளையும் படிக்கவும். எல்லா பின்னுடத்தையும் மிகவும் ரசித்தேன். இது பெண்ணின் பார்வையில் எழுதியது.

  ReplyDelete
 8. ///
  தம்பி கூர்மதியன் said...

  பாஸ்.. டி.ஆர்., ரசிகரா.?? ஹி ஹி.. நல்லா படிச்சிட்டு வர்றேன்..
  ///

  ரீபீட்டு..

  ReplyDelete
 9. நன்றி பாட்டு ரசிகன்.
  நிச்சயம் இல்லை. ஏதோ புலோவுல வந்து எழுதுனது. என்னை அறிய மற்ற பதிவுகளையும் படிக்கவும்.

  ReplyDelete
 10. உயிர்மூச்சில் உன் வாசமா?
  உன் சுவாசத்தின் மீதமா?  ...very nice.

  ReplyDelete
 11. இனி தொடர்ந்து வருகிறேன் நண்பரே..

  ReplyDelete
 12. கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
  கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

  http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

  ReplyDelete
 13. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_05.html

  ReplyDelete