நான் பிறந்தபோது
அழுதேனோ தெரியாது
நீ பிறந்தபோது
அழுதேன்
உயிரை பிரிந்ததாய்
உணர்ந்தேன்
உன்னை விட்டு
ஊருக்கு போகையில்
நான் வேண்டியது
கிடைத்ததில்லை
நீ வேண்டியது
கிடைத்திட விளைகிறேன்
என் நாள்
உன் குரல் கேட்டு
விடியவும் முடியவும்
செய்யும்
விளையாட்டாய்
நீ உன்மடியில்
எனைசாய்த்தபோது
என் தாய்மடி உணர்ந்தேன்
என் எல்லா
திசையிலும் உன்குரல்
என் எல்லா
பக்கத்திலும் உன்முகம்
குழந்தையில் தாய்மை உணர்த்தும் கவிதை..
ReplyDeleteஉங்களுக்கும் த்ரிஷாவுக்கும் வாழ்த்துக்கள்..