வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, June 6, 2010

குழந்தையின் பதில்

Office-ல் இருந்து ரெண்டு ரயில் மாறி வீட்டுக்குள் நுழைந்தபோது ஒரு coffee சாப்பிட்டா நல்ல இருக்குமுன்னு தோனுச்சு. மனைவின் நெனப்பு வந்ச்சு. Refrigerators-ல இருந்து பால எடுத்து instant coffee பொடி கலந்து oven - ல  வைத்து ரெண்டு  minute set பண்ணினேன்.   coffee குடித்து கொண்டே net - ல தமிழ் நாளிதழை நோட்டம் விட்டேன். ரெண்டு நாள video chat - ல வரசொன்ன பொண்டாட்டிகிட்ட  நேரம் இல்லன்னு சொல்லி இருந்தேன். Computer  5.30 pm காட்டியது, இப்ப இந்தியாவில 5.00 am தான் இருக்கும் தூங்கிகிட்டு இருப்பா கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடலாமுன்னு  இருந்தேன். அதுக்குள்ள அவளே online - ல வந்தா.  காசு அனுப்பங்க பொண்ண computer class அனுப்பனும் என்றாள். Leave - ல ஊருக்கு போயிருந்தேன் சொன்னா. சரி எல்லாரும் நல்ல இருக்கங்களா, அப்புறம் என்ன சொல்றங்க  என்று கேட்டு வைத்தேன். நீங்க எல்லாம் பண்ணிகொடுத்தும், உங்க அம்மாவும் அப்பாவும் ஊருல இருக்க உங்க தம்பிக்குத்தான் support பண்ணி  பேசுறாங்க என்றாள். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் வழக்கம் போல விழித்தேன். தாத்தாவையும் அப்பத்தாவையும் சித்தப்பாதானே பக்கத்தில இருந்து எல்லாம் பாத்துகிறாரு என்றாள்  அங்கு இருந்த என் பொண்ணு.  எனக்கு அவளின் பார்வை சரி என்றே பட்டது பெருமையாகவும்  இருந்தது.

3 comments:

  1. மைக்ரோவேவில் 2 மினிட்ஸ் செட் பண்ணினீர்களா...30 செகண்டிலேயே தர தர வாகுமே...

    இந்த பதிவு,கற்பனைக் கதையென்றால் ,யதார்த்தத்தை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.
    நிகழ்வு என்றால் ,இது கதையாகவே போகட்டும் என்று சொல்லிக் கொள்கிறேன்

    ReplyDelete
  2. குழந்தையின் பதில் ஏற்றுக் கொள்ளத் தக்க ஒன்று.
    வெளியூரில் வேலைக்காகச் சென்றவர்கள் எல்லோருக்கும் இந்த நிலைமைதான்...

    ReplyDelete
  3. நன்றி குழந்தையின் பதிலை ஏற்றுக்கொண்டதற்கு.

    ReplyDelete