வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Saturday, June 12, 2010

அமெரிக்கரயிலில் தமிழ்ப்பெண்

       குளித்து முடித்து கண்ணாடி பார்த்து தலை வாரிக்கொண்டிருந்தேன். குளியல் அறைக்கதவை ஆள் நெருங்கும் சப்தம். கதவு தட்டும்முன் திறந்தேன் துண்டுடன் நண்பன். எனக்கு அகநானூரில் வரும் கதவானாள் என்ற சொல் நினைவுக்கு வந்தது. பத்து நிமிடம் லேட்  என்றான் நண்பன். அலமாரி திறந்து எதோ ஒரு சட்டையும் பேண்டும் எடுத்து போட்டுக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தேன்.


    கொஞ்சநாளா நேரம் இல்லாததால் காலை உணவுக்குப்பதில் ஹோர்லிக்ஸ்க்கு   மாறியிருந்தேன். ஹோர்லிக்ஸ்யை உறிஞ்சிக்கொண்டு நண்பனுக்கு காத்திருந்தேன். டிவியில் சக்தி டவுன்லோட் செய்து கொடுத்த இளையராஜா பாடல் ஓடிக்கொண்டிருந்தது.  "காத்தடிச்சா தாங்காதடி மல்லியப்பூ  மாராப்பு" என்று நாயகியை சீண்டிக்கொண்டிருந்தான் நாயகன். "கையிருக்கு காவலுக்கு" என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் நாயகி. 


      நேரமே ஆபீஸ்க்கு போகணும் மீட்டிங் இருக்கு. குளியல் அறை நோக்கி போனேன் உள்ளே நண்பன் புதிய எ ஆர் ரஹ்மான் பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தான். பாடலை விட எனக்கு தண்ணியின் சத்தம் அதிகமாக கேட்டது.  அதுவும் நன்றாகவே இருந்தது. கதவு தட்டி நான் முன்னே போகிறேன் மீட்டிங் இருக்கு என்றேன் சரி என்றான் நண்பன். 


     மூன்று சிக்னலில் காத்திருந்து ரயில் நிலையம் அடைந்தபோது தூரத்தில் ரயில் வந்துகொண்டிருந்தது. உள்ளே முழுதும் மூடிய அமெரிக்க ஆண்களும் கொஞ்சமே மூடிய  அமெரிக்க பெண்களும் கலந்து அமர்ந்திருந்தனர். நண்பனுடன் வந்தால் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு செல்வோம்.  நண்பன் இல்லாததால் மூவர் அமரும் இருக்கையில் இரண்டவதாக அமர்ந்தேன் நடுவில் இடம்விட்டு.  இந்த இருக்கையில் ஒரு வசதி மூன்றாவதாக யாரும் அமர்வதில்லை. தூங்கினாலும் அடுத்தவர் மீது விழத்தேவையில்லை.


      இங்கு ரயிலில் யாரும் பேசி பார்த்தது இல்லை இந்திய லைப்ரரியைவிட அமைதியாக இருக்கும். இங்கு எல்லோரும் iPod - ல் பாட்டு கேட்டுக்கொண்டோ அல்லது புத்தகம் வாசித்துக்கொண்டோ இருப்பார்கள். எனக்கு பேச ஆளில்லாததால் தூங்கிப்போனேன்.  தமிழில் பேசும் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன். 


      என் அருகே மூன்றாவதாய் ஒரு தமிழ்ப்பெண் போனில் பேசிகொண்டிருந்தாள் .  அவள் ஊரில் இருந்து வந்து கொஞ்சநாள் தான் ஆகியிருக்கவேண்டும். புருவம் திருத்தியிருக்கவில்லை. முடியை நேராக்கி விரித்துப்போட்டு கழுத்துவரை குட்டையக்கிருக்கவில்லை. உடலோடு ஒட்டிய பனியனோ ஜீன்ஸோ அல்லாது சுடிதார் அணிந்திருந்தாள்.  அந்த பெட்டியில் அவள் மட்டும் தனித்திருந்தாள்.  நான் ஒரு விநாடி ஊருக்குபோய் திரும்பியிருந்தேன்.



14 comments:

  1. உங்களில் ஒரு தேர்ந்த எழுத்தாளன் இருக்கிறான்.. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. கே . ஆர். பி. செந்தில் நன்றி.

    உங்கள் வரிகள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது. நன்றி.

    ReplyDelete
  3. நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  4. sinhacity நன்றி.

    எனது பதிவை இன்றைய டாப் இருவதில் ஒன்றாக தேர்வு செய்தமைக்கு.

    ReplyDelete
  5. மதுரை சரவணன் நன்றி.

    உங்கள் வாழ்த்து மேலும் ஊக்கப்படுத்துகிறது.

    ReplyDelete
  6. சிறுகதை, தொடர்கதை, அனுபவக் கட்டுரை என்று எந்த வடிவத்திலும் பொருத்த முடியாததாக இருக்கிறது.
    விவரணைகள் செய்தித்தனமாக இருப்பதைக் கொண்டு ஒரு அனுபவத்தை விவரித்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
    அனுபவக் கட்டுரைகள் எழுதுவதில் இருவிதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று செவ்வியல் தரத்தோடு எழுதி தீர்க்கமான கருத்தைத் தெரிவிப்பது.
    இன்னொன்று அசாதாரண சம்பவத்தை அல்லது அனுபவத்தை பதிவு செய்வது - அதனோடு தன் குரலையும் பதிதல்.
    இவைகள் யுக்திகள்தான். அதை மறுப்பதும் பெருக்குவதும் அவரவர் சாமார்த்தியம்.
    தொடர்க.

    ReplyDelete
  7. Thanks for your comments. I will consider your feedback while writing next time.

    Thanks again for your comments.

    ReplyDelete
  8. ரொம்ப நன்றாக இருந்தது சந்தோசம்!!! ஆனா ஒரு சந்தேகம்....

    அகநானுரை நினைவுபடுத்திய நண்பன், காதலை கவிதையில் கலந்தளித்த இளையராஜா, ஆஸ்கர் மேடையில் தமிழன்னையை நினைவு படுத்திய ஏ.ஆர். ரகுமான், இவர்களில் யாரும் நினைவுபடுத்தாததை யாருடுனோ பேசிக்கொண்டிருந்த அந்த பெண் அப்படி என்னதான் நினைவு படுத்தினாள்???

    ReplyDelete
  9. ஆனந்த் நன்றி. தமிழ் பெண்ணென்று நெனைக்கிறேன். ஆனால் இது ஒரு புனைவு. இது எதுமே நிகழ்ந்தது அல்ல. தமிழ் பெண் குறித்த எதிர்பார்ப்பு. தமிழ் மனம் மாறாத ஒரு பொண்ணு இருந்த நல்லா இருக்கும் கதையில் வருவதுபோல்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு

    அருமை.....

    தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

    ReplyDelete
  11. நன்றி.

    உங்கள் வாழ்த்து ஊக்கப்படுத்துகிறது.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. அயல் நாட்டில் இருந்தால், "மியாவ் ,'வள் வள்" என்ற எல்லா ஒலியும் ”ஆஹா தமிழ்நாட்டு பூனை,தமிழ்நாட்டு நாய்...”என்று நம்மைப் பரவசமாக்கி விடும்

    ReplyDelete
  14. உண்மை கோமதி. உங்கள் வார்த்தைகள் மிகவும் உண்மை.

    நன்றி.

    ReplyDelete