வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, June 18, 2010

நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா?

நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா ?


         அப்பா, "உங்கள அம்மா கெளம்ப சொன்னங்க கோயிலுக்கு போகனுமாம்". இல்லடா அப்பாக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலே பாக்கி இருக்கு. நீங்க ஆப்பத்தாவ கூப்பிட்டுக்கிட்டு  போயிட்டு வாங்க.  அப்படி என்ன தான் ஆபீஸ் வேலையோ சனி ஞாயிறு கூட என்று ஆட்டோவில் பேத்தியை ஏற்றிவிட்டு தானும் ஏறி அமர்ந்தாள். ஏங்க.... மாமா வந்தா அடுப்பில உப்பமா இருக்கு சாப்புட சொல்லுங்க என்று சொல்லிக்கொண்டே கண்ணாடியில் முகம்பார்த்து ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து கொண்டு கிளம்பினாள் என் மனைவி. கதவை சாத்திவிட்டு கணினி முன் அமர்ந்தேன். 

       ஆபீஸ் வேலை ஒரு சாக்கு. உண்மையில் எனக்கு கோயிலுக்கு போக விருப்பம் இல்லை.  இன்று எழுந்ததில் இருந்து எனக்கு எதிலும் ஒரு நாட்டம் இல்லாமல் இருந்தது. டொக்...டொக்...டொக்...  கதவு தட்டும் சப்தம்  திறந்தால், "பரமன் யாரு சார்"   என்றான் தபால்காரன். நான் தான் என்று கையெழுத்து போட்டு கடிதம் வாங்கி டிவி மேல் வைத்தேன். கணினியில் வசித்த செய்தியை திரும்ப திரும்ப வாசித்தேன். மனம் ஏனோ எதிலுமே ஒட்டாமல் அலைபாய்ந்தது.

     திடிரென்று ஒரு எண்ணம். என் நினைவுகளில் பின்னோக்கி சென்று என் நினைவுகளிலே  மிக பழைய நினைவு எது. என்னால் எந்த நினைவு வரை பின்னோக்கி செல்லமுடியும் இதை ஒரு தவமாக செய்து விடவேண்டும் என்று முடிவு செய்தேன். கல்லூரி படித்த போது கொஞ்சநாள் தியானம் கத்துகிறேன்னு கண்ணைமூடி முயற்சி செய்து முடியாமல் கைவிட்டிருந்தேன். அந்த தியான அறிவை இன்று பரிசோதித்து பார்த்துவிடுவது என்று கண்ணைமூடி உக்கார்ந்தேன். ஒரே இருட்ட இருந்துச்சு.   நல்லா மூச்சு இழுத்து விட்ட மனசு லேசாகும் தியான வகுப்பில் சொன்ன ஞாபகம். நல்லா மூச்சு இழத்து விட்டேன்.    

      நாசி தொண்டை நெஞ்சு உடம்பு என்று மூச்சு பரவுவதை உணரமுடிந்தது. என் உடலை உணர முடிந்தது. வேறு ஒரு மனிதனை பார்ப்பது போல் என்னையே நான் பார்க்க முயற்ச்சித்து முடியவில்லை. பழைய நினைவுகளை அசைப்போட முயன்றபோது என் கிராமம் என்முன் காட்சியாக விரிந்தது. 

     சரி எங்கிருந்து ஆரம்பிப்பது யாரில் இருந்து ஆரம்பிப்பது. முரட்டுகாளை படம் பார்த்துட்டு நானும் நண்பர்களும் ஊருக்கு திறம்பி வந்துகொண்டிருந்தோம். எதுத்தாப்பிடி என் மாமா குடும்பத்துடன் மாலை காட்சி பார்ப்பதற்காக வந்துகொண்டிருந்தார். அவரை தூரத்தில் பார்த்தவுடன் முடிவுசெய்து விட்டேன் ரஜினியை இரண்டாவது முறைபார்ப்பது என்று.  மாமாவிடம் கெஞ்சினேன் அழுதேன் முடியாது ஊருக்கு போ என்றார்.  இதற்க்குள் நண்பர்கள் குறைய தூரம் போயிருந்தார்கள். ஓடிப்போய் உன் நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு போ இருட்டுகிறது என்று அவரும் நடக்க ஆரம்பித்தார். நான் நடுவில் இருட்டியதால் பயமாகவும் அழுகையாகவும் வந்தது. மாமாவும் நண்பர்களும் ஒத்தையடி பாதையில் எதிர் எதிர் திசையில் வெகுதூரம் போயிருந்தார்கள். கொஞ்சதூரம் கழித்து புதர் மறைவில் ஒளிஞ்சு இருந்து பார்த்த மாமா.  நான் போகவில்லை என்று தெரிந்து அழைத்து சென்றார். நான் திரையில் பார்த்த முதல் படம் நான் கடைசியாக இருமுறை திரையில் பார்த்த ரஜினி படம். 

   சாப்புடுரையாட சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மாமா கேட்டார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சாப்பிட்டான் என்றாள் அத்தை. பரவாயில்லை கொஞ்சம் சோறும் இன்னக்கி உருக்குன நெய்யும் ஊத்து அவனுக்கு பிடிக்கும் என்றார் மாமா.  அத்தையும் மாமாவும் வெத்தலை போட்டார்கள்  சாப்பிட்டு முடித்து.   நான் கேட்டதற்கு ஆம்பளைப்பய வெத்தல போட்ட கோழி முட்டும் என்றாள் அத்தை. தரையில் விழுந்து அழுதேன். ரோஜா பாக்கின் காகிதம் என் கையில் பட்டது. யாருக்கும் தெரியாமல் காகிதத்தை வாயில் வைத்து சுவைத்தேன்.

      ஒரு நாள் காலை தூங்கி எழுந்தபோது மாமா போர்வையை போர்த்திக்கொண்டு திண்ணையில் உக்கார்ந்திருந்தார். அவருக்கு காய்ச்சல் என்றாள் அத்தை. பெரியகுளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் மாமாவை. மாமா ஒரு மாசம் கழித்து ஊருக்கு வந்தார் பாதியாக.  மாமா நடமாடி பார்க்கவில்லை. அதற்க்கு பிறகு படுத்தே இருந்தார். 

      நான் மாமாவை பார்க்கவேண்டும் என்று அழுதேன். என்னை என் மாமாவின்  மகன் தோளில் தூக்கி காட்டுகிறார். எனக்கு வெறும் தலைகளாக தெரிகிறது. வெட்டியான் எல்லாரும் விலகுங்க பரமு அவங்க மாமா முகத்த பாக்கனுமாம். எல்லோரும் விலக வெட்டியான் எருவை விலக்குகிறான். மாமாவின் முகம் எருவுக்கு  நடுவே. 

     என்னால் இதற்கு மேலும் தொடர முடியாமல் கண்ணை திறந்தேன். பரமா...பரமா.. கதவுக்கு வெளியே அப்பா. பனித்திருந்த கண்ணை துடைத்து கொண்டு எழுந்தேன் கதவு திறக்க.5 comments:

 1. நன்றி. உங்கள் கடவுள் பிச்சை மிக அருமை.

  People visit my blog, please click this link:

  http://krpsenthil.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88

  ReplyDelete
 2. வேகம்கூட்டினேன் பச்சை வரும் என்ற நம்பிக்கையில். ////  நிச்சையம் வரும்

  ReplyDelete
 3. நன்றி.

  நீங்கள் தூரத்து பச்சை விளக்கு பதிலாக நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா? - வில் உங்கள் பின்னுட்டத்தை பதிவு செய்துவிட்டிர்கள்.

  நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா? - வையும் படித்து உங்கள் பின்னுட்டத்தை பதிவு பதிவுசெய்யவேண்டுகிறேன்.

  ReplyDelete
 4. நல்ல தொடக்கம்- முடிவுதான் சோகம் அதானால்தான் நீங்களும் நினைவிலிருந்து வெளிவந்தீர்களே!!!!!!!!!

  ReplyDelete