வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, June 7, 2010

மிதமான காற்றும் இலையும்

மிதமான காற்றும் இலையும்

      Mobile - ல் அடித்த ஆறு மணி அலாரத்தை அணைத்துவிட்டு மறுபடியும் போர்வைக்குள் புகுந்தேன் எழுந்திருக்க மனமின்றி. மனசுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மனைவி குழந்தையுடன் நேற்று நிகழ்ந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. எது சாப்பிட்டாலும் வாந்தியாக வருகிறது ரொம்ப கஷ்ட்டமாக இருக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு என்றாள் மனைவி. குழந்தை எப்பப்பா வருவிங்க என்றாள். Fourth Std half yearly exam leave-க்கு வந்திருவேன் என்றேன்.

       உலகத்திலே மிகவும் வருத்தமான ஒன்று, ஒருத்தர் கஷ்டபடுறத ஒரு பார்வையாளன ஒன்றும் செய்யாமல் பார்த்துகொண்டு இருப்பது. என்னால India - யாவில் இருக்கிற குடும்பத்துக்கு phone பண்ணலாம் chat பண்ணலாம் பணம் அனுப்பலாம். அவங்க கஷ்டப்படும் போது ஒரு துரும்பைக்கூட என்னால நகர்த்த முடியாது. Office - க்கு போக மனமின்றி leave போடலாமுன்னு தோனுச்சு.

          Sick leave போல மனசுக்கு சரியில்லை என்றாலும் leave போடுறதுக்கு ஒரு category - யை corporate company எல்லாம் கொண்டு வரணுமுன்னு தோனுச்சு. உடம்புக்கு முடியலைனாலும் ஓரளவுக்கு வேலை செய்யலாம் மனசு சரியிலைன்ன எப்படி வேலை செய்யிறது corporate company மேலே கோவம் கோவமாக வந்தது.
        
         Leave - விட leave latter எழுதிறது கொடுமை. எனக்கு exam - ல கூட leave latter எழுத பிடிக்காது.  போர்வைக்குள் இருந்தவாரு laptop - ய அருகில் இழுத்து I'm not feeling well and taking sick day என்று பொத்தம் பொதுவாக ஒரு email - லை manager   - க்கும் team உள்ள மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டு மறுபடியும் முகத்தை போர்வைக்குள் புதைத்தேன்.

       பக்கத்தில் உறங்கும் நண்பனை எழுப்பி நான் office - க்கு வரல நீ வேணுமுன்ன எழுந்துக்க என்று சொல்லலாமுன்னு தோனுச்சு ஆனால் அவன் கிளம்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது உறங்கட்டுமுன்னு விட்டுடேன். நண்பனின் ஏழு மணி அலாரம் அடித்து. அவன் மெல்ல எழுந்து காபி கலந்து குடித்து email check பண்ணி குளித்து சரியாக ஏழரைக்கு room - ய  விட்டு போயிருந்தான்.  எழுந்திருக்க மனமில்லாது உறங்கிபோனேன்.

           Mobile சப்தம் என் தூக்கத்தை கலைத்திருந்தது mobile - ல நண்பன் கூப்பிடிருந்தான் call - யை எடுத்தேன். மறுமுனையில் அவன் "உடம்புக்கு முடியலைய இல்ல usual sick leave - வ" என்றான். நான் usual sick leave தான் என்றேன் வருஷ கடைசியில சும்மாதான போகபோகுது அதான் எடுத்தேன் என்றேன். நான் முடிபதற்குமுன் மறுமுனை துண்டிக்கபட்டிருந்தது. நேரத்தை பார்த்தேன் மாலை நாலு என்றது.

            மெல்ல எழுந்து காபி கலந்து கொண்டு பின் கதவு திறந்து பால்கனிக்கு சென்றேன். வானம் மேகமுட்டதுடன் மிதமான காற்று வீசியது அது தோட்டத்தில் இருந்த இலைகளுக்கு நடுவே புகுந்து சென்றது. அந்த காற்று இலைகளை வருடிசென்றது இலைக்கு சுகமாக இருந்திருக்கும் என்றே தோன்றியது.

4 comments:

  1. இது போல் சிரமப்படுபவர்களை இலைகளாகக் கொண்டால்,இறைவனின் ஆசியும் பாதுகாப்பும் இதமாய் வருடிச் செல்லும் காற்றாய் எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. இந்த பதிவை என் நண்பர்கள் பலர் கடைசி பாரா புரியவில்லை என்று சொல்லிவிட்டனர் சரவணனை தவிர. ஆனால் நான் என் சொல்ல வந்தேனோ அதை சரியா புரிந்துகொண்டதற்கு நன்றி. கதை நாயகனை இலையாகவும் நண்பனின் போனை காற்றாகவும் உருவகப்படுதியிருந்தேன்.

    மீண்டும் நன்றி சரியான புரிதலுக்கு.

    ReplyDelete
  3. நல்ல ஆழமான துயரம்.. பொருள் வயின் பிரிவு ...
    எழுத்தில் முதிர்ச்சி வந்துவிட்டது.. பாராட்டுக்கள்...

    ReplyDelete
  4. பிரிவின் வலி கொடுமையான ஓன்று,

    எழுதிய விதம் அருமை அண்ணா..

    ReplyDelete