வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, June 9, 2010

ஆத்தா அக்கா மகள்

       விருமா, "குண்டு வெளையாட போறேன் நீயும் வரயா?". நான் வரலே, எங்க ஆத்தா சீக்கிரம் வீட்டுக்கு வரச்சொல்லுச்சு. நான் நேரே வீட்டுக்கு போகணும். எங்க அக்கா பேர்காலத்துக்கு எங்க வீட்டுக்கு வருது.  அவங்க அப்பா  தச்சு கொடுத்த உரப்பையில புத்தகம் நோட்டு பள்ளிகொடதில போடுற மதியசாப்பாடு சாப்பிடுற வட்டி எல்லாத்தையும் திணித்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். 

     விருமன் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடியே அவங்க அக்கா நாலு மணி பஸ்ல வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்க அக்கா விருமனுக்கு பிடிச்ச சேவு அதிரிசம் வாங்கிட்டு வந்திருந்தாங்க. அவங்க அப்பத்தா, "எல்லாத்தையும் இன்னக்கே தின்னு தீத்திறதே நாளக்கி கொஞ்சம் பள்ளிகொடத்துக்கு கொண்டுபோகவும் வையி" என்றாள். அவங்க அப்பத்தா சொன்னா எதையும் காதில்வாங்கிக்கொள்ளாமல் அதிரிசத்தை வாயில் திணித்துக்கொண்டு சேவை கால்சட்டைப்பையில் போட்டுக்கொண்டு வெளையாட ஓடினான். 

    விருமன் வெளையாடிட்டு வீட்டுக்கு வந்தப்ப, நெறைய பக்கத்துக்கு வீட்டு பொம்பளங்கலாம் அவங்க அக்காவ பாக்க வந்திருந்தாங்க.  ஒ புருசன் மாமியா எல்லாம் நல்ல இருக்காகள என்றாள் பக்கத்து வீட்டுக்கிழவி.  இருக்கக என்று பட்டும் படாமல் சொன்னாள் அக்கா. "ஏண்டி இழுக்கிறே" என்றாள் கிழவி. "மூணாவதும் பொம்பளப்பிள்ளைன்ன வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அவங்க மாமியா சொல்லிட்ட அதான் வருத்தமா இருக்க" என்றாள் ஆத்தா.  "அவளும் பொம்பளதானே பின்னே ஏன் பொம்பளபிள்ள வேணாங்கிற" என்றாள் கிழவி.  

      விருமா, "நீ இன்னக்கி பள்ளிகொடத்துக்கு போக வேணாம், அக்காவுக்கு கொளந்த பொறந்த அக்கா வீட்டுல சொல்ல போகணும்" என்றாள் விருமானின் ஆத்தா. ஏங்க கடைக்கு போயி பேர்காலத்துக்கு தேவையான சாமான வாங்கிகிட்டு வாங்க என்று அப்பனை ஏவினாள். "டேய் அப்படியே ஒரு வெடக்கோழி வாங்கிட்டு வா பச்சஒடம்புக்கு நல்லது வலி எல்லாம் போயிரும்" என்றாள் விருமானின் அப்பத்தா. எல்லாத்துக்கும் சரி என்று தலைய ஆடிட்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக கிளம்பினார் விருமானின் அப்பா.

        விருமா, "உங்க அக்காவுக்கு பொம்பளபுள்ள பொறந்திருக்கு நீ பாக்க போகலைய" என்றாள் தண்ணி எடுக்க வந்த விருமானின் வயதொத்த பக்கத்து வீட்டுச்சிறுமி. விருமன் வெளயாட்ட பாதியிலே விட்டுட்டு வீட்டுக்கு ஓடினான். விருமன் பிறந்த கொளந்தைய  பக்கத்தில பாக்கிறது இதான் மோதல.  "நீ என்னடி பண்ணுவ பாவம் கொளந்த பால் கொடு என்று அதட்டினால்" அக்காவை பக்கத்து வீட்டுக்கிழவி.  ஆத்த நான் வேணுமுன்ன அக்காவுக்கு கொளந்த பொறந்தத அக்கா வீட்டுல சொல்லிட்டு வரவா என்ற விருமனிடம் அதல்லாம் வேணாம் நீ வெளையாட போ என்றாள் விருமானின் ஆத்தா.

        விருமன் வெளையாடிட்டு வீட்டுக்கு வந்தபோது கொளந்தையை தேடினான். அவங்க அக்கா சுவத்து  பக்கம் திரும்பி அழுது கொண்டிருந்தாள். அழாதேடி என்று மகளை தேத்திகொண்டிருந்தாள் விருமானின் ஆத்தா. மூளையில் உக்கார்ந்து எங்கோ பார்த்துகொண்டிருந்தாள் விருமானின் அப்பத்தா. விருமனுக்கு அங்கிருக்க பிடிக்காமல் வெளியேறி, நண்பனின் வீட்டுக்கு போனான்.

         "விருமானின் ஆத்தாதான் பாலில் நெல்ல போட்டு கொளந்தைக்கு கொடுத்து கொன்னுட்டாங்க" , என்று சொல்லிகொண்டிருந்தாள் பள்ளி நண்பனின் ஆத்தா. அவனுக்கு ஆத்தா மேல் கோவம் கோவமாக வந்தது.  விருமன் நேராக மாட்டுதொழுவத்துக்கு போயி அங்கிருக்கும் கயித்து கட்டிலில் படுத்து யாருக்கும் கேட்காமல் அழுதான்.

       விருமனிடமிருந்து போன்,  இப்படி முடிக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்த விருமானின் பள்ளி நண்பனுக்கு. மறுமுனையில் விருமன், "எனக்கு  பெண் குழந்தை பிறந்திருக்கிறது. செத்துப்போன எங்க ஆத்தா அப்படியே பொறந்த மாதரி இருக்குடா. நல்ல கலருடா செத்துப்போன எங்க அக்கா கொளந்தபோல " என்றான்.

14 comments:

  1. nice writing. I feel that this stands out from the rest of your previous posts. Not that this is something new, the style of writing is good and it just took me through that made the reading easy and comfortable.

    the last paragraph could have been made a bit more clear. Liked this.

    ReplyDelete
  2. சரவணா நன்றி.

    என் ஊரில் நிகழ்ந்த என்னை சிறுவதில் மிகவும் பாதித்த ஒரு சம்பவம். அதை அதான் வட்டராமொழியில் பதிவு செய்யவும், அந்த நிகழ்வின் தாக்கத்தை பகிர்ந்து கொள்ளவும் தான் இந்த பதிவு. இது சிறு அலையையும் அதிர்வையும் ஏற்படுத்தினால் ஆறுதல்.

    உன் விருப்பம்போல் கடைசி பகுதியை திருத்தியுள்ளேன்.

    ReplyDelete
  3. நெகிழ்ச்சியான பதிவு. எழுத்து நடை சட்டென சிந்தனையோடு ஒட்டிக் கொள்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். சின்னச் சின்ன எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. தமிழ்ம்ணம், தமிழிஸ் திரட்டிகளில் இணைக்கலாமே!

    ReplyDelete
  4. settings-ல் சென்று word verificationaஐ எடுத்ஹ்டு விடுங்கள். கமெண்ட் போடுகிறவர்களுக்கு அது ஒரு தொந்தரவாக இருக்கும்.

    ReplyDelete
  5. மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . நல்ல எழுத்து நடை . தொடருங்கள் மீண்டும் வருவேன் !

    ReplyDelete
  6. From Krishna
    Very good man, Excellent !!! Please keep it going.

    ReplyDelete
  7. மாதவராஜ் நன்றி.

    என் நண்பன் தான் உங்கள் வலைதளத்தை எனக்கு அறிமுகப்படுத்தினான். உங்கள் பாராட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்தும். நன்றி .

    ReplyDelete
  8. சங்கர் நன்றி.

    உங்களுக்கு புரியும். உங்கள் கள்ளிப்பால் படித்த மறுநாள் இதை எழுதினேன். நன்றி

    ReplyDelete
  9. sinhacity நன்றி.

    எனது பதிவை இன்றைய டாப் ஐம்பதில் ஒன்றாக தேர்வு செய்தமைக்கு.

    ReplyDelete
  10. நல்ல கருத்துள்ள கட்டுரை! நல்ல தொடக்கம்! உங்களிடம் இருந்து இதுபோல் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்!!

    ReplyDelete
  11. ஆனந்த் நன்றி. முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  12. congrats very excellent writing

    ReplyDelete
  13. Thanks lot. if it make some change in people thought process.

    ReplyDelete