வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, July 23, 2010

அப்பா - 1


தெருமுனை ஆட்டோ ஸ்டண்ட் எதிரிலுள்ள டீ கடையில் அப்பாவுக்காக கடந்த ஒரு மணி நேரமாக காத்திருக்கிறேன். தெருக்கோடியில்த்தான் அப்பா பார்த்து பார்த்து கட்டிய எங்க வீடு இருக்கு. அப்பா கையை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு போனது... அப்பா சைக்கிள் கத்துக்கொடுத்தபோது கீழே விழுந்தது... நான்கு தெரு தள்ளியிருந்த காதலிக்காக  இதே டீ கடையில் காத்திருந்தது... எல்லாம் இந்தத்தெருவுக்கு தெரியும்.  பத்து வருடம் ஆகிவிட்டது இந்தத்தெருக்கு வந்து எந்த மாற்றமும் இல்லை.

அப்பா பத்தாவது முடிச்சிட்டு வெறும் கையோட சென்னைக்கு வந்து ரயில்வே கேண்டின்ல சேர்ந்து... ரயில்வே பரிச்சை எழுதி... படிப்படியாக முன்னேறியிருக்கார். நான் ஒரளவுக்கு படிப்பேன். அண்ணன் காலேஜ் பெயில். அப்பா யார் யாரையோ பிடித்து... யாருக்கோ காசு கொடுத்து... மலேசியாவுல அண்ணனுக்கு கார்பன்டர் வேலை வாங்கினார்.   எங்க கிராமத்திலிருந்து வரும் எல்லோரிடமும் பெருமையா சொல்லுவார். பெரியவன் வெளிநாட்டில் இருக்கான். சின்னவன் பி. எட் படிக்கிறான். பொண்ணு டீச்சர் ட்ரைனிங் படிக்குது. எப்படியும் இவங்க ரெண்டுபேருக்கும் வாத்தியார் வேலை வாங்கிருவேன் என்று.

என்னை அப்பாவுக்கு ரெம்ப பிடிக்கும். அவரப்போல மூக்கு எனக்கு இருக்கதாலா...?  ஓரளவு படிகிறதாலா ...? ஒரு விசயத்தில விடப்புடிய இருந்து முடிக்கிறதாலா...?  தெரியாது. இவன் என்னைமாதரி என்று எல்லாரிடமும் பெருமையா சொல்லுவார்.  அவர் எதிர் பார்க்கவில்லை என் காதலியை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவேன் என்று.

இன்னும் நல்ல ஞாபகம் இருக்கு அன்று இரவு அப்பா சொன்னது. அவங்களும் நம்மளும் வேறே...வேறே.. ஒத்துவராது. நீ வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது. திருத்துவது மிகச்சிரமம், நீ ரெம்ப கஷ்ட்டப்படுவ. நீ கூடிட்டுப்போயி கல்யாணம் முடிச்சது தெரிந்தா  என் மூத்த பையனுக்கும் என் பொண்ணுக்கும் நான் எங்க போயி பொண்ணு மாப்பிள தேடறது... நீ வீட்டைவிட்டு வெளியே போ.

இவன் வீட்டைவிட்டு வெளியே போனானா? அவள் என்னவானாள்?   எதற்க்காக  அப்பாவை பார்க்க வேண்டும் ? நீங்கள் அடுத்தவாரம் வரை காத்திருக்க வேண்டும்.  ஆம்... இது ஒரு தொடர்... அடுத்தவாரமும் அப்பா வருவார்.

16 comments:

  1. நல்லா இருக்கு... தொடருங்க :)

    ReplyDelete
  2. தொடருங்க தலைவா , இப்பதான் சூடு பிடிக்குது

    ReplyDelete
  3. ம்ம்...ஏதோ கவலையாச் சொல்லப் போறீங்க !

    ReplyDelete
  4. Good Start! Appa eppadipattavarnu innum theriyala, wait panni therinjukkarom!

    ReplyDelete
  5. ஒரு வாரம் காத்திருக்கணுமா...

    சீக்கிரம் போடுங்க அண்ணா..

    ReplyDelete
  6. நல்ல தொடக்கம். காத்திருக்கிறேன் தலைவா

    ReplyDelete
  7. //ஒரு வாரம் காத்திருக்கணுமா...

    சீக்கிரம் போடுங்க அண்ணா...///

    அதே...

    ReplyDelete
  8. இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்க..

    தொடரின் எதிர்பார்புகளுடன்...

    ReplyDelete
  9. என் ப்லாக் வந்து அழைத்ததற்கு நன்றி. follow பண்றேன். தொடர்ந்து எழுதி அசத்துங்க!

    ReplyDelete
  10. என்னது இவ்வளவு சின்னதா ஒரு தொடர் கொஞ்சம் பெரிசா போடுஙக் பாஸ்...!!!

    ReplyDelete
  11. உங்க அப்பா உங்க மேல வச்சிருந்த நம்பிக்கையை சிதைச்சது நல்லாயில்லை.
    உங்கள நம்பிய பெண்ணை கைவிடாது கூட்டி வஎதது சரிதான்..... ஆனா ஒரு தகப்பனா உங்க அப்பா செய்யதது மிக சரி. தொடருங்க பார்ப்போம்.

    ReplyDelete
  12. சஸ்பென்ஸ் தொடர் ....தொடரட்டும்
    ஆரம்பமே சூடு பிடித்து விட்டது

    ReplyDelete
  13. நினைவை பதிவாக்கியிருக்கிறீர்..நல்லது

    ReplyDelete
  14. oh.I missed this. go ahead. good form of writing.

    ReplyDelete