வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, July 5, 2010

ஆதலால் காதல் செய்தேன்

   எத்தருணத்தில் என்னுள் அவன் வந்தான் விளங்கவில்லை. தமிழ் வாத்தியார் குறள் வாசிக்கச் சொன்னபோது 

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

என்று  தலை சாய்த்து ஒரு  சிறுபுன்னகை உதிர்த்தானே அப்போதா?  எப்போதும் கண்களைப்  பார்த்து மனதோடு பேசுவானே அதனாலா? இதுவரை எனை யாரும் இவ்வளவு ஆழமாக பார்த்ததில்லை அதனாலா? புன்னகை தவழ எப்போதும் மெதுவாக பேசுவானே அதனாலா? எதனால் இன்றுவரை புரியவில்லை. ஈர்த்தானா? ஈர்க்கப்பட்டேனா? எல்லாம் ஒன்றுதான். பேருந்து நெரிசலில்  அவன் மட்டும் எங்கிருந்தாலும் என்கண்ணில் பட்டானே ஏன்? துளித்துளியாய் நனைத்தானா? அலையாய் அடித்தானா? எதுவானாலும் நான் நனைந்தது உண்மை. 

   அவனை எனக்கு எவ்வளவு பிடிக்கும். மழை அளவுக்கு. தூங்கறப்ப அம்மாவின் தாளிக்கும் வாசனை அளவுக்கு.  அவனுக்கு பிடித்ததெல்லாம் எனக்கும் பிடித்ததானதே அந்த அளவுக்கு. சாமியக்கூட பரிச்சைக்கு முன்தான் நினைத்துக்கொள்வேன். அவனை மட்டும்தான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். நான் குறைவாக பேசியதும் அவனோடுதான். பேசாமேலே அதிகம் பேசிக்கொண்டதும் அவனோடுதான்.

   அவன் காதல் சொன்னதில்லை....காதல் குறித்தும் பேசியதில்லை. காதல் செய்தான். மழையை காதலித்தான் தூறல் ஆனேன். காட்டை காதலித்தான் இலையானேன். விலங்குகளை காதலித்தான் பூனையாய் தவழ்ந்தேன். பறவையை காதலித்தான்  பட்டாம்பூச்சியாய் பறந்தேன்.  அவனால் என் பார்வையின் நீளஅகலம் கூடியது மனம் விசாலமானது.  ஆதலால் காதல் செய்தேனா?

   காதல்... மனசா? வயதா? உடம்பா?  எதுவானாலும் உணர்வு உண்மை. காதல் தப்புன்னு சொன்னாக்கூட காதல் குறித்த எண்ணம் அன்பு வருத்தம்  அழுகை சந்தோசம் எல்லாம் என் உணர்வு. அது எப்போதும் என்னுடன் இருப்பது. அது எப்படி பொய்யாக முடியும்.  சரி... தவறு... யார் முடிவு செய்தது? சாமியா? சாமியாரா? சாமியும் சாமியாரும் கூட பொய்யாகலாம். சாமி சாமியார் காதல் கொண்டது உண்மை. 

   அவன் எனக்கானவன் எதனால் முடிவுசெய்தேன். கடிதங்கள் எழுதியபோதா? கடிதங்களுக்காக காத்திருந்தபோதா? இல்லை அவன் கடிதங்களை படித்துக்கொண்டே அவனோடும் அவன் நினைவுகளோடும் உறங்கினேனே அப்போதா? அவன் வாசித்த புத்தகத்தை வசித்தபோதா? வரிகளுக்கு நடுவே கண்ணை மூடி இதை அவனும் வாசித்திருப்பான் என்று என்னைமறந்து இழுந்து சிரித்தேனே அப்போதா?

   அவன்மேல் எப்போதும் கோபம் வரவில்லை ஏன்? என் காதலை மறுத்தபோதுகூட. எனக்கு விருப்பு வெறுப்பு இல்லாத அன்பு  சொல்லிக்கொடுத்ததாலா?  எதிர்பார்ப்பில்லாத அன்பு அவன்தானே சொல்லிக்கொடுத்தான். எப்படி எதிர்பார்த்தேன்? அவன் மறுத்ததால் அன்பு செய்வது நிற்க்கப்போவதில்லை. மழையின்  துளியாய்... காட்டின்  இலையாய்... பறவையின் சிறகாய்... மண்ணின் வாசனையாய்... எதிர்பார்ப்பு இல்லாத காதல் எல்லா இடத்தும் செய்வேன்.


28 comments:

 1. என் பதிவுகளுக்கான உங்கள் விமர்சனம் என்னை திருத்தவும் ஊக்கப்படுத்தவும் செய்யும் என்று திடமாக நம்புகிறேன்.

  ReplyDelete
 2. மிகவும் சிறப்பாக எழுதி இருகிறிர்கள் . நீங்கள் காதலித்து இருகிறீர்களா !

  ReplyDelete
 3. நேர்த்தியான எழுத்து நடை...

  காதல்... அருமை....

  ReplyDelete
 4. நன்றி அகல்விளக்கு.

  ReplyDelete
 5. என் பதிவிற்கு நீங்கள் அனுப்பிய பின்னூட்டம் ஏதோ காரணத்தால் பின்னூட்ட பெட்டிக்குள் நுழைய வில்லை[சம் டெக் ப்ரொப்ளம்]

  காத்திருக்கிறேன்.6 பின்னூட்டங்கள் க்யூவில் காத்திருக்கின்றன

  வருகைக்கு நன்றி
  --------------
  அவளது காதல்,எதையும் எதிர்பார்க்காத மழை போனறது,நிலவுக்காகக் காத்திருக்கும் அல்லி போல் பரிசுத்தமானது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பெண்ணின் காதல் குறித்த மனநிலையை பார்வையை பதிவு செய்ய முயற்ச்சித்தேன். அது முழுமையானதா... சரியாகத்தான் பதிவு செய்துள்ளேனா? பெண் வாசகர்தான் சொல்லவேண்டும்.

  சில விசயங்களை முன்னே முடிவு செய்தேன்.
  1) பெண் காதல் முடிந்தவரை பெண் மனநிலையில் இருந்து சொல்வது.
  2) ஆண் காதலை மறுப்பது.
  3) அவன் மறுத்தாலும் அவள் அடுத்த நிலைக்கு பயணிப்பது.

  ReplyDelete
 7. முனி கலக்குங்க இன்னும் கொஞ்சம் ஆழம் வேண்டும்

  ReplyDelete
 8. பெண்ணின் மனநிலையை தொட முயன்றிருக்கிறீர்
  முயற்சிக்கு வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 9. நல்ல துவக்கம்... நிறைய எழுதுங்க ..

  ReplyDelete
 10. இதெல்லாம் எப்படி வாத்தியாரே ,,,,பொண்ணுங்க மனசெல்லாம் படிக்கிறீங்க ?

  ReplyDelete
 11. நல்லா எழுதீருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 12. நன்றி ஆண்டாள்மகன். நிச்சயம் நினைவில் கொள்கிறேன்.

  ReplyDelete
 13. யோகேஷ் நன்றி. தொடர்ந்து முயற்ச்சிப்பேன்.

  ReplyDelete
 14. நன்றி கே.ஆர்.பி.செந்தில். கட்டாயம் எழுதுகிறேன்.

  ReplyDelete
 15. நன்றி கிருஷ்ணா. எதோ என்னால் முடிந்தது.

  ReplyDelete
 16. கண்ணன் ரெம்ப நன்றி. நிச்சயம் எழுதுகிறேன்.

  ReplyDelete
 17. நல்ல முயற்சி மேலும் தொடர்க. பாராடுக்கள்

  ReplyDelete
 18. மெல்லிய நீரோட்டம் போல மிக நல்ல நடை. வாசிக்கும் தோறும் மெல்ல மெல்ல தூரலாக விழுந்து மனப்பரப்பை மென் உணரவுகளால் நனைக்கின்றன.

  ReplyDelete
 19. நிலாமதி நன்றி. உங்கள் பாராட்டுகள் பெற நிச்சயம் தொடர்வேன்.

  ReplyDelete
 20. suzhiyam,

  எழுதும் போது நானும் கொஞ்சம் நனைத்தேன். அந்த தூறல் உங்களையும் நனைத்தது மகிழ்ச்சி.

  பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete
 21. காதல் - ஒரு பக்கத்தில் ஒரு காதல் கதை சொல்வதென்பது சற்றே சிரமமான காரியம்தான். சற்றே உரை நடையாய் தோன்றியது. நன்றாக உள்ளது. ஆதலால் தொடர்ந்து எழுதவும்!

  ReplyDelete
 22. ஆனந்த்,

  நன்றி தொடர்ந்து எழுதுகிறேன்.

  ReplyDelete
 23. viral valikum varai ezhuthungal muniyandi avargalae

  ReplyDelete
 24. Suresh,

  Ok my lord...

  தாங்களுக்கு தான் தெரியும் இது யார் மனச்சாட்சி என்று. வாழ்க மனசாட்சி... வளர்க தாங்கள் (மக்கள்) தொண்டு...

  இப்பவெல்லாம் உங்களையும் அடுத்தவங்களையும் (மனச்சாட்சி) பிரிச்சு பாக்க முடியல சாமி

  ReplyDelete
 25. Arputham...miga miga arumayaana sindhanai,ezhuthu...thodarungal ungal karpanayai,adhai engalukku ezhuthu vadivil kondu thaarungal :)

  ReplyDelete