வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, July 16, 2010

புளியமரமும் பொம்பளப்பேயும்


ஊருக்கு போகும் கடைசிப்பஸில் ஏறி அமர்ந்தான் சுப்பு என்ற சுப்பிரமணி. பஸ் கிளம்ப இன்னும் அரை மணிநேரம் இருந்தது. சுப்பு படிக்கட்டையே வெறித்துக்கொண்டு யாருக்கோ காத்திருப்பது போல் கவலை ரேகை படிய கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்தான். 

அவன் யோசனையில் இருந்து விடுபடும் முன் அவனை பற்றி ஒரு சிறிய விளக்கம். சுப்பு சொந்தஊருலேயே +2 வரைக்கும் படிச்சுட்டு காலேஸ் முதல் ஆண்டு சேர்ந்திருக்கிறான். அவனைப்பத்தி சொல்லிட்டு ஊரப்பத்தி சொல்லன்னா பேயாட்டம் போடுவான். ஏற்க்கனவே சாரு பயங்கரமா கவலையில இருக்காரு.   

கரட்டுப்பட்டி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள   ஒரு அழகிய கிராமம். அக்கிரமத்தின் மூன்று பக்கமும் கரடு  ஓர் அரண்போல் இருக்கும்.   கரட்டுப்பட்டிக்கு பஸ் கிடையாது. கரட்டுக்குப் பக்கத்தில இறங்கி ஒரு கிலோ மீட்டர் நடந்துதான் ஊருக்கு போகணும். ஊர்க்கு போற வழில ஓடையும் ஓடையின் இருபுறமும் ஓங்கி உயர்ந்த புதரும் மரமும் இருக்கும். ஓடையில் வருஷம் ஆறு மாசம் தண்ணி இருக்கும் பார்ப்பதற்க்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். வண்டுகளின் ரீங்காரமும் தவளையின் கொர்...கொர்...சப்தமும் எப்போதும் கேட்க்கும். இந்த ரம்மியம் எல்லாம் அதிகாலையிலோ அல்லது மாலையிலோ தான். அப்படியே மேலே விவரித்த காட்சிகள் நடுஇரவில் எப்படியிருக்கும். தனியா கரட்டுக்கு பக்கத்துல பஸ்ல இறங்கி ஓடவழியா நடந்து ஊருக்கு போன எப்படியிருக்கும் மனத்திரையில் ஓடவிடுங்க அப்பறம் புரியும் நம்மாளு ஏன் கவலையா கன்னத்துல கையவச்சுக்கிட்டு இருக்காருன்னு.

அவன் ஊரைச்சேர்ந்த ஒருத்தரும் வராமலே பஸ் கிளம்பியது அவன் கவலை குறித்து எந்த கவலையும் இல்லாமல். அவன் சிறுவயதில் கேட்ட பேய், பிசாசு, கொல்லிவாயு, பேயோட்டுனது, ஓட்டுன பேய் புளியமரத்து ஆணியில அடிச்சுது எல்லாம் ஞாபகத்தில் வந்தது.  பஸ் அவனை கரட்டின் அடிவாரத்தில் இறக்கிவிட்டு பஸ் வெளிச்சம் புள்ளியாகி பின் மறைந்தது. ஒரே இருட்டு அவன் மனசைப்போல.

மனசுல எல்லாச்சாமியையும் நினைத்துக்கொண்டு ஓடையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். ஓடையக்கடந்தா அவங்க தோட்டம். அங்க யாராவது இருப்பாங்க குறைந்தபச்சம் நாயாவது இருக்கும். தைரியத்தை வரவழைத்துகொண்டு நடந்தான். பேயோட்டுன  புளியமரத்தையும்,  பொம்பள விழுந்து செத்த கிணற்றையும்   கடந்துதான் அவன் தோட்டத்துக்கு போகமுடியும்னு நினைத்தபோது வந்தா தைரியம் காணமல் போனது.

பொம்பள செத்த கிணத்திலிருந்து தண்ணி வாய்க்கால் வழியாகப் போகும் சப்தம். நெருங்க நெருங்க யாரோ நக்கி நக்கி தண்ணி குடிக்கும் சப்தம்.  பொம்பள பேயி, கன்னிப்பையன் வேறு, இருட்டில் தண்ணிகுடிக்கும் இடத்திலிருந்து இரண்டு கண்கள் அவனையே பார்த்தது. தைரியத்தை வரவழைத்து வேகம் கூட்டினான். அந்த உருவம் அவன் மீது தாவி அவன் முகத்தை நக்கியது. பெரும் குரலெடுத்து அலறினான். கண்ணை திறந்தால் அவன் தோட்டத்து  நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவனை சுற்றி வந்தது.

10 comments:

  1. திகில் கதை போன்ற ஆரம்பம். இறுதியில் அவர்களது வளர்ப்பு நாய் .....நன்றாக் கதை சொல்கிறீர்கள் .
    வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    ReplyDelete
  2. பெரும்பாலும் கிராமம் மெயின் ரூட்டில் இருந்து தள்ளியே இருக்கும்.. நள்ளிரவில் தனியே போகும் எல்லோருக்கும் இப்படி ஒரு பயம் இருந்திருக்கும்...
    நான் தனியாக போனால் அப்போதெலாம் சத்தமாக பாடிக்கொண்டே செல்வேன்..
    அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருந்தது. இது போலவே என் வாழ்வில் நிஜமா நடந்த ஒரு சம்பவம்--
    http://kovaiaavee.blogspot.com/2009/02/under-construction.html

    ReplyDelete
  4. திக் திக்னு தான் இருந்தது :)

    ReplyDelete
  5. ஹஹ்ஹா, எங்க ஊருல கூட ஒரு ஒத்த புளியமரம் இருக்குது, அதுல “முனி” இருகாமாம்.....!!!!

    சூப்பரா எழுதியிக்கீங்க, படிக்க விறுவிறுப்பா இருந்தது:)

    ReplyDelete
  6. கே.ஆர்.பி.செந்தில், நீங்கள் சொல்கிறேர்கள் எல்லோருக்கும் இருந்திருக்கும். பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  7. Thanks Anand. I read your blog...it's really super

    ReplyDelete
  8. பின்னூட்டத்திற்கு நன்றி பிரசன்னா.

    ReplyDelete
  9. பின்னூட்டத்திற்கு நன்றி Jey.

    ReplyDelete