வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, July 9, 2010

வெள்ளத்தாயி



   என்னாடி காளியம்மா....புள்ளப்பெத்து முழுசா முப்பது நாக்கூட ஆகல அதுக்குள்ள தலையில இடுப்புல கையிலன்னு சொமைய தூக்கிக்கிட்டு காட்டுக்குப்போறே. என்ன என்னாக்கா  பண்ணச்சொல்லிரிங்க அந்த மனுஷன் கோழிகூவுரதுக்கு முன்னையே கலப்பையே தூக்கிக்கிட்டு உழுகப்போயிட்டாரு. அதான் மாட்டுக்கு தண்ணி, நாயுக்கு கஞ்சி,  அவருக்கு சாப்பாடுன்னு  எல்லாத்தையும் நானே எடுத்துக்கிட்டு போறேன். 

   சரி புள்ளய எங்கடி? அதுக்கு பாலக்குடுத்து உறங்க வச்சுட்டு வந்திருக்கேன்.  கொஞ்ச நேரம் கழிச்சு எங்க ஆத்தா தூக்கிட்டு வரும். சரிக்கா... காட்டுல நாலுபேறு கள எடுக்குராங்க. தலச்சொம வேறே கனக்குது நான் வரேன் என்று பெரிய எட்டு வச்சு நடந்தா  காளியம்மா.  

   கோரப்புல்லும் நெல்லுப்பயிரும் பாக்க ஒண்ணுபோல  இருக்கும் கோரப்புல்ல புடுங்கிரதுக்கு பதிலா நெல்ல புடிங்கி போட்டுராதிங்க என்று சொல்லிக்கொண்டே காட்டுக்குள் நொலஞ்சா  காளியம்மா.  கொண்டுவந்த தண்ணிய மாட்டுக்குழுதானியில ஊத்திட்டு, கஞ்சிய நாய்க்கல்லுல ஊத்திட்டு, சாப்பாட்ட தாவாரத்து கம்புல தொங்கவிட்டா. சும்மாடு கூட்டியிருந்த சேலையில புள்ள வந்தா தூங்குறதுக்கு பூவரசமரத்தில தொட்டில் கட்டிட்டு வயல்ல இறங்கி கோரப்புல்ல புடுங்கத்  தொடங்கினாள்.

   நீ ஊரக்கூட கடந்திருக்க மாட்டா அதுக்குள்ள அழுக  ஆரம்பிச்சிட்டான் ஒம்புள்ள. புள்ளயவாங்கி பசியமத்தி ஆத்தாகிட்ட கொடுத்து தொட்டியில போடச்சொன்னா காளியம்மா. வெயில்த்தெரியாம இருக்க ஊர்க்கத பேசிக்கொண்டே தன்னோட நெரையில இருக்கும் புல்லைப்புடுங்க ஆரம்பித்தார்கள்.

   அந்த மனுஷன் உழது முடிசுட்டாரு. ஏரேக்கலட்டி மாட்டக்கட்ரதுக்குள்ள சாப்பாடு எடுத்து வக்காட்டி மூக்குமேல கோவம்வரும் புள்ள அழுதா பாத்துக்க வெள்ளத்தாயி  என்று புருசனுக்கு சாப்பாடு போடப்போனாள் காளியம்மா.  தலமறையிரதுக்குள்ள புள்ள அழுக ஆரம்பித்தான். புல்லுப்புடுங்கின கையக்கழுவிட்டு புள்ளயத்தூக்கி பசியமத்த ஆரம்பித்தாள் வெள்ளத்தாயி.

   ஏண்டி புள்ள அழுகுறது கூடத்தெரியாம அப்படி என்னடி பேச்சு புருசன்கூட என்றாள் களயெடுத்துக்கொண்டிருந்த கெழவி. அப்பத்தா உனக்கு தெரியாததா... அவ புள்ள செத்து இருபது நாக்கூட ஆகல பால்கட்டிக்கிட்டு கஷ்ட்டபடுறா அதான் அவ எம்புள்ளைக்கு பால்க்குடுக்கட்டுமுன்னு விட்டுடேன் என்றாள் காளியம்மாள்.

"அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டால .....
மாமா  அடிச்சாரே மல்லியப்பூ செண்டால .....
அடிச்சரே சொல்லியழு....ஆராரோ...ஆரிராரோ..."

தாலாட்டு பாடிக்கொண்டிருந்தாள் வெள்ளத்தாயி.





38 comments:

  1. தமிழ்மணத்துல இணைகிறதில்லையா நீங்க.

    ReplyDelete
  2. கிராமத்து கோரப்புல் வாசனையடிக்குது

    அருமையான நடை
    தங்கள் படைப்பை தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் இனைக்கவும்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கிராமங்களின் உண்மை நிலை மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளை அழகாக சொல்லி இருக்கும் இந்த பதிவு சிறப்புதான் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. மண் வாசனையுடன் அற்புதமாய் வந்திருக்கு .. பாராட்டுக்கள் தம்பி ...

    ReplyDelete
  6. கிராமங்களின் உண்மை நிலை நல்லா இருக்கு.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. கோரப்புல் நெல்லுப்பயிரும் .
    காளியம்மா குழந்தையை அலட்சியம் செய்தது கோரப்புல்லை ஒத்ததாக இருந்து ,வெள்ளத்தாயி பால் குடுக்கட்டுமேன்னு விட்டதில் நெல்லுப் பயிராய் நிமிர்ந்து நின்று விட்டாள்

    அருமையான கதை.

    ReplyDelete
  8. நல்லாருக்கு.

    ஆனா படிக்க கொஞ்சம் சிரமமா இருக்கு.

    punctuation, quotation, paragraph லயும் கவனம் செலுத்துனா நல்லாருக்கும்.

    http://vaarththai.wordpress.com

    ReplyDelete
  9. அற்புதமாய் வந்திருக்கு

    ReplyDelete
  10. மிக அருமை தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  11. நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  12. சங்கர் நன்றி.
    உங்கள் பின்னூட்டத்தை கண்டு மிகுந்த திருப்தி. நான் ஓர் அளவு கிராமத்தின் நிலையை பதிவு செய்திருக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  13. நன்றி கே.ஆர்.பி.செந்தில்.
    ஒவ்வொரு முறையும் எழுதும்போது உங்களை நினைத்துகொள்வேன். பாரட்டுவிர்களா? நல்ல முயற்சி என்பீர்களா? என்று. பாராட்டுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  14. கோமா,
    உங்கள் பின்னூட்டம் கண்டேன் மிக்க நன்றி. தாங்கள் சொன்னது நானே பார்க்காத பார்வை. என் பதிவை ஆழமாக வேறு கோனத்தில் பார்த்ததற்கு நன்றி.

    ReplyDelete
  15. நன்றி சௌந்தர்.
    நிச்சயம் கவனத்தில் கொள்வேன்.

    ReplyDelete
  16. நன்றி ஜோதிஜி.

    எனது மற்ற பாதிக்கும் பின்னூட்டம் இடுக.

    ReplyDelete
  17. அருமையான நடை.

    தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  18. பின்னிடீங்க!!!

    ReplyDelete
  19. //கோரப்புல்லும் நெல்லுப்பயிரும் பாக்க ஒண்ணுபோல இருக்கும் //
    என்ற வரிகள் தத்துவார்த்தமாக..! எழுத்திலுள்ள மண்வாசனை மயக்குகிறது. நாம் இழந்துகொண்டேவரும் சொற்களை, சொல்லாடல்களை மீட்க இதுபோன்ற எழுத்து அவசியம்.
    இருந்தும், கதையை எளிமையான வாசிப்பில் புரிந்து கொள்ள முடியவில்லை. 3 முறை படித்த பின்பே காளியம்மாள், வெள்ளத்தாயி இவர்களின் பாத்திரங்கள் புரிகின்றன. அதேபோல் கதைவிவரணைக்கும் உரையாடல்களுக்கும் வித்யாசம் புரியவில்லை. இதே கதையை இன்னும் சிறப்பாக உங்களால் எழுதமுடியும் என்று நம்புகிறேன்.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. கிராமத்து நடையில் அழகாய் இருக்கு இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. சிம்பிளா அழகா சொல்லி இருக்கீங்க , நல்லாஇருக்கு

    ReplyDelete
  22. நல்ல பதிவு...

    கிராமத்து மணம் வீசுகிறது நண்பரே...

    அவ்வாழ்க்கை திரும்ப கிடைக்குமா???... :-(

    ReplyDelete
  23. ஏன் அடிக்கடி எழுதவதில்லை?

    ReplyDelete
  24. நன்றி ஜெகநாதன்.

    எனக்கு வரும் விமர்சனங்களில் என்னை மிகவும் யோசிக்க வைப்பது என்னை அடுத்த நிலைக்கு முயற்ச்சிக்க வைப்பது உங்கதும் ஒன்று. நிச்சயம் உங்கள் ஆலோசனைகளை நினைவில் கொள்வேன்.

    ReplyDelete
  25. நன்றி நிலாமதி. அது வாழ்ந்த வாழ்க்கை.

    ReplyDelete
  26. நன்றி அமைச்சரே, தொடர்வேன்.

    ReplyDelete
  27. நன்றி அகல்விளக்கு.
    வாழ்ந்தது, ஆனால் திரும்பக்கிடைக்குமா? தெரியாது. ஆனால் முயற்ச்சிப்பேன்.

    ReplyDelete
  28. வெள்ளத்த்தாய் காவியம் கிராமத்து கூட்டான் சோறு

    ReplyDelete