வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, July 19, 2010

ஜோதி


புருசனிடம் கோவித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்திருந்த புதுசா கல்யாணமான ஜோதி தான் வாங்கிவந்திருந்த வெற்றிலைய அப்பத்தாவுக்கு கொடுத்தாள்.

"ஏண்டி, சின்ன... சின்ன... விசயத்துக்கெல்லாம் சண்டைபோட்டு இங்க வந்திருர?".

"அப்பத்தா, நாலு நாளைக்கு பட்டினியாக் கெடந்ததான் அவருக்கு புத்தி வரும்".

"உன் புருசன் பட்டினிகிடந்தா  பரவாயில்ல... வெளியில கிடைக்குதுன்னு போயிட்டா என்னடி பண்ணுவா? பாத்துடி... எப்பவுமே புருசன உன் கைபக்குவதிலையே வச்சிருக்கணும்".


ஊரிலிருந்து வந்த மகளுக்கு பிடித்த சுண்டல் கொளம்பு வைத்துக்கொண்டிருந்தாள் ஜோதியின் அம்மா.

"அம்மா, நான் போயிட்டு வரேன்".

"என்னாடி வந்ததும் வராததும் கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டு பறக்கிற, இருந்து சாப்பிட்டு காலையில போகலாமில்ல?".

"இல்லம்மா நான் இப்ப கிளம்பினாத்தான், அவரு தூங்கிறதுக்கு முன்னாடி  வீட்டுக்கு போகமுடியும்".

இதை நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் பொக்கைவாய் அப்பத்தா.

22 comments:

  1. //பட்டினிகிடந்தா பரவாயில்ல... வெளியில கிடைக்குதுன்னு போயிட்டா //

    சின்ன கதையா இருந்தாலும் அர்த்தம் பொதிந்த கதை தான்,அப்பத்தாவின் சுருக்கென்ற வார்த்தைகள் அருமை :))

    தொடர்ந்து எழுதுங்க :)

    ReplyDelete
  2. சின்னகதை ஆனால் வீரியம் அதிகம்.. அப்பத்தா அனுபவசாலி....

    ReplyDelete
  3. //"இல்லம்மா நான் இப்ப கிளம்பினாத்தான், அவரு தூங்கிறதுக்கு முன்னாடி வீட்டுக்கு போகமுடியும் //


    பாசமா..பயமா..?

    நல்ல கதை

    ReplyDelete
  4. பாரதிராஜாவுக்கு அடுத்த படியா நீங்கதான் தலைவரே!

    ReplyDelete
  5. எல்லாருக்கும் இப்பிடி
    ஒரு பாட்டியும் தாத்தாவும் வேணும் !

    ReplyDelete
  6. ஜோதி, எண்பதுகளில் வந்த துணுக்குக் கதை போன்ற தொனியில் இருக்கிறது. இதுபோன்ற பாட்டி வைத்திய கதைகள் நிறைய. தாம்பத்யத்தை சாப்பாடு என்ற பேரில் மறைமுகமாக பேசுவது அதர பழசானது. இக்காலத்து பாட்டிகள் கூட காலத்திற்கேற்ப 'அப்டேட்' ஆகிவிடுகிறார்கள்.

    இக்காலத்து ஜோதிகள் பற்றி எழுதலாம்.

    அப்புறம்.. தலைவி இல்லாவிட்டால் தலைவன் 'வெளியில்' சாப்பிடப் போய்விடுவான், அதைத் 'தடுப்பதற்காகவாவது' தலைவி அடித்துப் பிடித்துக் கொண்டு தலைவனிடம் ஓட வேண்டும் - இதெல்லாம் ஆண்வர்க்க எழுத்து (male text) சுருக்கமாக ஆணாதிக்கச் சிந்தனை என்று கருத வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  7. நன்றி கே.ஆர்.பி.செந்தில்.

    ReplyDelete
  8. தெரியவில்லை... இது ஜோதிக்கும் அப்பதாவுக்கும் இடையே உள்ள புரிதல் என்றே அளவில விட்டுவிட்டேன். வாசகர்கள் புரிந்துகொள்ளட்டும் என்று.

    நன்றி ஜெய்லானி.

    மேலும் "வருந்துகிறேனில்" விளக்கம் கொடுத்துள்ளேன் படிக்கவும்.

    ReplyDelete
  9. Thanks NESAMITHRAN. Keep reading my post and give your feedback

    ReplyDelete
  10. நன்றி இராமசாமி கண்ணண்.

    ReplyDelete
  11. நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  12. ஆனந்த் என்மேல கோவம் ஏதாவது இருந்த அட்ச்சிருங்க... வேணாம் வலிக்குது... பேசி தீத்துக்கலாம்..

    ReplyDelete
  13. ஜெகநாதன் நன்றி. மீண்டும் என்னை திருத்தியதற்கு. நான் மேலும் கவனமாக இருக்கவேண்டும் என்று புரிகிறது. புரியவைத்தற்கு நன்றி.

    மேலும் "வருந்துகிறேனில்" விளக்கம் கொடுத்துள்ளேன் படிக்கவும்.

    ReplyDelete
  14. எதோ ஒருவேகத்தில் கோவித்து கொண்டுவந்தாலும் உள்ளூர ஒரு பாசம் உண்டு. ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு ...ஆற அமர யோசிக்கும்போது தப்பாக் தெரிந்து ...திருந்துபவர்களும் உண்டு...படிப்பினை உண்டு.

    ReplyDelete