வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, August 9, 2010

அன்பே சிவம் ஒரு புரிதல்


அன்பே சிவம் இது ஒரு விமர்சனம் அல்ல, இது படம் குறித்த என் புரிதல் என்று கொள்ளலாம். இந்த படம் புவனேஸ்வர்  விமானநிலையத்தில் தொடக்கி, ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து ஒரு பேருந்தில் பயணப்பட்டு, மறுபடியும் ரயிலுக்கு தாவி, ஆம்லன்ஷில் கடந்து, அம்பாசிடரில் ஊர்ந்து கதையின் இறுதிப்பகுதிக்கு செல்லும்.
அதேபோல் கதை ஒரு மழைக்காலத்தில் புவனேஸ்வரில் ஆரம்பிப்பதால் கதை நெடுக மழையும் பயணப்பட்டு இருப்பதையும் அழகாக காட்டப்பட்டு இருக்கும். சென்னையை நெருங்க நெருங்க அதன் தாக்கமும் குறைந்திருக்கும்.
கதை ஒரு கம்யூனிஸ்ம் சார்ந்ததால் கேரளா (நல்லா பாலா கல்யாணத்திற்கு இங்கு தான் பயணப்படுவார்கள்) என்று கம்யூனிஸ்ம் சார்ந்த நிலப்பரப்பில் கதை நிழந்திருக்கும். இதை மேலோட்டமாக மட்டுமே காட்டப்பட்டிருக்கும்.
நல்லசிவம் அன்பரசுக்கு சிவமாக அறியபடும் அன்பரசு அரசுவாக அறிப்படும். அரசுவின் காதலி சரசு (அதாவது பாலாவாக நல்லாவுக்கு அறியப்பட்டவர்) சிவத்திற்கு அறிந்திருக்க முடியாது என்பதுபோல் அழகாக காடப்பட்டிருக்கும். அதே போல் பாலா அரசுக்கு தெரியாததுபோல் கதை சொல்லப்படிருக்கும். இருவரும் தத்தம் காதல் குறித்து பரிமாறிக்கொண்டாலும் ஒரே பெண் வேறு வேறு பெயரில் விளிக்கப்படுவாள். அல்லது கதையின் ஆசிரியர் நல்லாவின் காதலி பாலா வேறு...அவள் புதிதாக மாறியிருக்கிறாள் (சரசு) என்று சொல்லாமல் சொல்லியிருக்கலாம். நல்லாவின் கடிதத்தை பாலா படித்தபோதும் அவன் சிவமாக கடிதம் முடித்திருப்பதாலும் அவன் கையெழுத்து மாறியிருப்பதாலும் ( விபத்து காரணமாக) பாலா நல்லாவை அடையாளம் காணமுடிவதில்லை.
நல்லசிவம் நல்லாவாக (கதையின் எடுத்துக்காட்டில்) கருப்பு நிற உடை பெரும்பாலும் அணிந்திருப்பான் மற்றும் கடவுள் மறுப்பு அதிகம் இருப்பது போலும் காட்டப்பட்டிருக்கும். கதையின் நிகழ்காலத்தில் சிவமாக சிவப்பு நிற உடை அணிந்திருப்பார் அதிகம் கம்யூனிஸ்ம் பேசுவார்.  சிவம் நானே கடவுள் என்றும் கூறிகொள்வார்.
சிவத்திற்கும் அரசுக்கும் கடவுள் குறித்த விவாதத்தின் நடுவே சிவம் சொல்வதாக ஒரு வசனம் வரும் 
"மலைமேலே பொட்டிக்கட வச்சிருந்த ஆயா சொல்லுச்சி அன்னைக்கிலே இருந்து நம்பிட்டேன்" என்று.
எடுத்துகாட்டில் கதையில் விபத்துக்கு பிறகு "நீங்க சாமி மாதரி அதன் பொலச்சுகிட்டிங்க" என்று வசனம் இருக்கும்.
கதையின் தலைப்பு "அன்பே சிவம்" 
அன்புதான் கடவுள் என்றும் கொள்ளலாம்.
அன்பரசு அவனுள் இருக்கும் அன்பை(கடவுளை) புரிந்து கொண்டான் என்றும் கொள்ளலாம்.

அன்பே(ரசு) (நல்ல)சிவம் இருவரின் புரிதல் குறித்த கதை என்றும் கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது வேறு வேறு விசயங்கள் புரிகிறது.

12 comments:

 1. இது ஒரு Legend movie சுந்தர் .சி இயக்கியிருப்பார்.. நான் இருபது முறை பார்த்திருப்பேன் ... ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொள்கிறேன் ..
  உங்களைப்போலவே ,..

  ReplyDelete
 2. உங்களுடய புரிதல் எனக்கு சரியாக படுகிறது.இந்த பதிவை படித்த பிறகு அந்தப்படத்தில் எனக்கு சில விஷயங்கள் புரிகிறது.நான் மீண்டும் அந்த படத்தை பார்க்கப்போகிறேன்.

  ReplyDelete
 3. ”அன்பே சிவம்” என்னுடைய all time favorite movie! பல தடவை பார்த்திருக்கிறேன்... கமல், மாதவன் இருவரின் நடிப்பு அபாரம்....

  ReplyDelete
 4. நீங்க சொன்னதும்தான் நிறைய செய்தி புரியுது. நான் மறுபடியும் பார்க்கப் போகிறேன்..

  ReplyDelete
 5. எனது ரசனையை மீண்டும் உங்களின் பதிவில் பார்கிறேன் அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. மிகச்சிறந்த படம்... நல்ல புரிதல்... அனால் படம் கல்கத்தாவில் ஆரம்பிக்காது... புவனேஸ்வரிலிருந்து தொடங்கும்...

  ReplyDelete
 7. கதை கல்கத்தாவில் ஆரம்பிக்காது.
  படத்தை நல்லாப் பாத்திருக்கீங்கப்பு :))

  ReplyDelete
 8. திருத்தம் படம் கல்கத்தாவில் ஆரம்பித்திருக்காது புவனேஷ்வர் இருந்து ஆரம்பிக்கிறது. ஜெகநாதனுக்கும், கோவிந்திர்க்கும் என் நன்றி திருத்தியமைக்கு.

  ReplyDelete
 9. பதிவிலும் புவனேஷ்வர் என்று மாறியுள்ளேன். பதிவு எழுதுவதற்கு முன் படம் பார்க்கவில்லை நினைவில் இருந்து எழுதியது. பெயர் ஞாபகம் வைப்பதில் நான் கொஞ்சம் மோசம். இனி கூடுதல் கவனத்துடன் இருக்கிறேன். மீண்டும் நன்றி ஜெகநாதனுக்கும், கோவிந்திக்கும்.

  ReplyDelete
 10. "அன்பே சிவம்" - ஒரு மிகச்சிறந்த படம். எனக்கு மிகவும் பிடித்த படம். கமல் எனும் கலைக்காதலனின் சிந்தனைக்கருவில் பூத்த மணம் வீசும் பூ. ஒரு சில கடவுள் மறுப்புக் கருத்துக்களைத் தவிர, அதில் எல்லா காட்சிகளும் வசனங்களும் நன்றாக இருக்கும். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து!

  ReplyDelete
 11. "நல்ல" என்ற சொல்லுக்கு "கருப்பு" என்ற அர்த்தம் உண்டு தெலுங்கு பாஷையில்... உங்க பதிவு படிச்சப்ப அந்த relativity just striked

  எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு நெறயவே... ஆனால் கமல் ரசிகையாய் இந்த படம் மிகவும் ரசித்தேன்... நல்ல பதிவு...

  "அன்பே சிவம்... " - can't agree more either...

  ReplyDelete