வாசகர் வட்டம்
வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.
Wednesday, August 11, 2010
மாறி மாறி... ஒரே மாறி...
அதிகாலை நாலு மணி டிரைவர் வீடு @ பழங்கானத்தம், மதுரை.
இழுத்து அணைத்த புருசனின் கையை தட்டிவிட்டு குழந்தையை தூக்கத்தில் தேடினாள் டிரைவரின் மனைவி. தூக்கம் கலைந்த டிரைவர் மனைவி தட்டிவிட்ட கையில் மணி பார்த்து எழுந்தான். குழந்தையும் மனைவியும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். எழுப்ப மனமில்லாது குளித்து டூடிக்கு கிளம்ப ஆயத்தமானான்.
"ஏங்க... சாப்பிட ஏதவாது பண்ணித்தரவா?" பாதி தூக்கத்தில் மனைவி கேட்டாள்.
"இல்லமா... நீ தூங்கு, நான் டிப்போ கேண்டின்லே ஏதாவது சாப்புட்டுக்கிறேன்."
கதவை வெளியே பூட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்து கைகாட்டி அரசு பேருந்தில் ஏறி டிப்போவுக்கு போனான் டிரைவர்.
காலை ஏழு மணி மீனாச்சி வீடு @ மேலமாசி வீதி, மதுரை.
"துப்பட்டா எங்கடி? "
"அம்மா... சுடிதாருக்கு துப்பட்டா போடுறது எல்லாம் ஓல்ட் பேஷ்ன்ம்மா... இப்ப யாருமே துப்பட்டா போடறது இல்லம்மா..."
"யாரு போடுறாங்களோ இல்லையோ... நீ போடணும்."
துப்பட்டாவை தேடிக்கொடுத்து, இரண்டு முழம் மல்லிகைப்பூவை ரெண்டாக மடித்து சடைதொடங்கும் இடத்தில் வைத்து கேர்ப்பின் குத்தினாள் மகளுக்கு.
அம்மாக்கு டாட்டா காட்டி துப்பட்டாவை கழுத்தை சுற்றி முன்னும் பின்னும் போட்டுக்கொண்டு சூர்யா படம் போட்ட நோட்டை அணைத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினாள் மீனாச்சி.
காலை ஏழு பதினைந்து சுந்தர் வீடு @ காகாத்தோப்பு தெரு, மதுரை.
"அம்மா நூறு ரூபா கொடு ரெக்காடு நோட்டு வாங்கனும்"
"ஏன்டா போனவாரம் தானே ரெக்காடு நோட்டு வாங்கானும்முன்னு பணம் வாங்கிட்டு போனே"
"அது வேற படத்துக்கும்மா" புருவத்தை உயர்த்தி நாக்கை கடித்துக்கொண்டு பாடத்துக்கும்மான்னு சொல்லாம படத்துக்கும்மான்னு உளறிட்டேயேடா.... தனக்குள் தன்னை திட்டிக்கொண்டான்.
"என்னமோ சொல்றே... நோட்டு வாங்கினா சரி" என்று நூறு ரூபாய் கொடுத்தாள் இவன் பதிலை சரியாக கவனிக்காத அம்மா.
அம்மா கொடுத்த நூறு ரூபாயை ஜீன்ஸின் பின்பாக்கெட்டில் சொருகிக்கொண்டு ஆள் காட்டி விரலில் ரஜினி படம் போட்ட நோட்டைச் சுற்றிக்கொண்டு கிளம்பினான் சுந்தர்.
காலை ஏழு முப்பது செக்கனுரணி பேருந்து @ பெரியார் பேருந்து நிலையம், மதுரை
மீனாச்சி முன்படிக்கட்டு வழியாக ஏறி டிரைவர்க்கு இடப்புறம் உள்ள ஒருவர் மட்டும் அமரும் இருக்கையில் இடம் பிடித்தாள்.
பேருந்தில் ஏறிய சுந்தர் டிரைவர்க்கு நேர் பின்புறம் சன்னலோர இருக்கையில் உக்கார்ந்தான்.
டிரைவர் முன்பக்கமுள்ள சிறிய கதவை திறந்துகொண்டு ஏறும்போது சுந்தரை பார்த்து சிரித்தார். சுந்தரும் சிரித்தான்.
நடத்துநரின் விசிலுக்கு வண்டியை கிளப்பிய டிரைவர் இடப்புறம் திரும்பிக் கண்ணாடி பார்த்தபோது டிரைவரை பார்த்து சிநேகமாக சிரித்தாள் மீனாட்சி.
அதே பேருந்து... அதே மூவர்... அதே சிரிப்பு... அதே order-ல்... எந்த மாற்றமும் இன்றி. ஒருநாளாவது தன்னையும் பார்த்து சிரிக்கமாட்டாளா? ஒரு வருசமா அவள் சிரிப்புக்காக காத்திருக்கிறான் சுந்தர்.
மறுநாள்
(கதையை மறுபடியும் முதலில் இருந்து படிக்கலாம்.... இல்லை, இதோ கீழே உங்களுக்காக)
இழுத்து அணைத்த புருசனின் .................................... டிப்போவுக்கு போனான் டிரைவர்.
துப்பட்டா எங்கடி? .................................................................... கிளம்பினாள் மீனாட்சி.
அம்மா ................................................................................................. கிளம்பினான் சுந்தர்.
மீனாச்சி ....................................................................................... காத்திருக்கிறான் சுந்தர்.
பின்குறிப்பு: மறுநாள் அத்தியாயம் மட்டும் "computer program" பாணியில் இதோ உங்களுக்காக.
சுழற்சி(சரி) // சுழற்சி எல்லா நேரமும் சரி
{
மாறி மாறி... ஒரே மாறி...; // முழுக்கதை மறுபடியும் நிகழும்
காரணம் (அவள்_இவனை_பார்த்து_சிரித்தாள் == சரி)
{
விடுபட்டு; //சுழச்சியில் இருந்து விடுபடு. கதை வேறுதளத்திற்கு செல்லும்.
}
}
// விட்டுபட்டப்பின் என்னசெய்வது என்பது கதையின் "scope" ல் இல்லை. அதனால் இங்கு விவரிக்கப்படவில்லை.
பார்வையாளர்: எல்லா software ம் requirement scope ல் இல்லன்னு சொல்லி தப்பு தப்பாதான எழுதிறிங்க.
நான்: என்னது.... நீங்க சொல்றது சரியா புரியல? இன்னொரு தடவ சொல்லுங்க.
பார்வையாளர்: அட கொக்கமக்க... ஒண்ணுமே தெரியாது மாதரி நடிக்காதே... இது ஒன்னும் requirement gathering meeting இல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
கதையை பிரமாதமா கொண்டு போயிருகிரீர்கள்.. ஆனால் ஓர் ட்விஸ்ட் வைத்திருந்தால் பின்னியிருக்கும்... முடிந்தால் யோசித்து மீண்டும் எழுதுங்கள்...
ReplyDeleteஅண்ணா.. மணிரத்தினம் படம் பார்த்த மாதிரியே இருக்கு...
ReplyDeleteமூன்று திசை..
வேறுபட்ட மனிதர்கள்...
வேறுபட்ட களம்..
மூன்றும் சங்கமிக்கும் ஒரு பேருந்து....
Annachi...nalla attempt. nalla irukkudhu. Ana, kadaisiyila konjam adhikamaga vilakkiteengalo nnu thonudhu. Nalla yoasanai.azhaga eludhi irukkenga..konjam award movie style ayiruchu nnu thonudhu..."enga pochu unga twisttuuuuuuuuuu"
ReplyDeleteappuram college kku ellam ponnuga surya attai padam potta note kondu pogumannu theriyala..ungalaukku dhan ellam theriyum / puriyum.
enakku ennamo..sundar blog eludha vanthutanno nnu thonudhu..narayana..
ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteஇது தொடருமா....?
நல்ல சிந்தனை, கதையில் இன்னும் விறுவிறுப்பு வேண்டும் என்று நான் நினைக்கிறன்.எப்படித்தான் இப்படி சிந்தனையோ? பதிவுக்காக நாள்முழுவதும் ஏதும் ''''ரூம் போட்டு "" யோசிப்பீர்களோ?? எனக்கு பொறாமையாக உள்ளது.பெருமையாகவும் உள்ளது. கலக்குங்க.
ReplyDeleteவித்தியாசமான முயற்ச்சி வாழ்த்துகள் :)
ReplyDeleteMadurai kathai, kathikuthu undaa?
ReplyDeleteமன்னிக்கணும் டாக்டர் (முனியப்பன்) சார், இது ஒரு மூன்று வெவ்வேறு சம்பவங்கள் ஒரு புள்ளியில் சந்திப்பது. யாருக்கும் யாரையும் தெரியாது. அவர்களுக்கு இடையான தொடர்பு என்றால் அந்த சிரிப்பு மட்டுமே.
ReplyDeleteஅப்படியே கத்திகுத்து நடந்தாலும் உங்ககிட்ட வராது மாதரி பாத்துக்கிறேன். நான் பாசகார மதுரக்காரன், கொபக்காரன் அல்ல.
நன்றி கே.ஆர்.பி.செந்தில். நான் இந்த கதையில் முயற்சித்தாது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு சம்பவங்கள் ஒரு புள்ளியில் சந்திப்பது. அவ்வாறு சந்தித்தாலும் யாரையும் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. இந்த கதையை முயற்சித்ததற்க்கு இவரின்(Alejandro González Iñárritu) இந்த நாலு படங்களே காரணம்.
ReplyDelete1 ) Amores perros (2000)
2) 21 Grams (2003)
3) Babel (2006)
4) Biutiful (2010)
அன்புடன்
முனியாண்டி பெ.
அப்படி ஆரம்பிக்கவில்லை தொடராக்கும் எண்ணமில்லை. முடிந்தால் இதன் தொடர்ச்சி வேறு பதிவாக வரலாம். உங்கள் எண்ணத்திற்கு நன்றி.
ReplyDeleteஆயுத எழுத்துக்கு முன்னே Alejandro González Iñárritu இந்த ஆளு மூனு படம் எடுத்துட்டாரு. ஆய்த எழுத்தில் கூட கதை நேர்கோட்டில் போகும். ஆனால் இந்த மனுஷன் கதை சொல்லும் விதமும் வித்தியாசம். இவரின் எந்த படமும் Usual போர்மட்- ல் இருக்காது.
வெறும்பயலுக்கு நன்றி .
நன்றி இராமசாமி கண்ணண்.
ReplyDeleteMadurai paasam is the best.Nandri Muniyandi.
ReplyDeleteநிச்சயம் நீங்கள் சொல்வதை கவனத்தில் கொள்வேன். ரூம்லே தூங்காமே யோசிக்கிறேன். இப்பவெல்லாம் தூக்கத்துலே கூட பதிவுதான் ஞாபகத்துக்கு வருது. என்ன பண்ண நந்தா.
ReplyDeleteகதை சுவாஸ்ரஸ்யமா இருக்கு
ReplyDeleteஅருமையா சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteஅருமை.. சிரிப்புதான் மூவரும் சந்திக்கும் மையப்புள்ளியா???
ReplyDeleteஹ ஹ ஹ ஹ ஹ ஹா
ReplyDeleteஅருமை நன்பரே
எந்த கம்பைலர் யூஸ் பண்ணறீங்க
நல்லா தானே எழுதிகிட்டு இருந்தீங்க!! கடைசீல ஏன் இப்படி?
ReplyDeleteWork From Home எடுத்துட்டு ஜாவா புரோக்ராம் யோசிச்சிட்டே கதை எழுத உக்காந்த மாதிரி இருந்தது. முனியாண்டி "டச்" மிஸ்ஸிங்!!!
Muni...kalakiteenga...
ReplyDeleteJust like that i visited your page and now expecting to see your email on ur new story every time i open gmail...u have a totally different thought perspective, which is crisp, clear and to the point... and its very impressive. Not like the usual boring short stories, but with a software coding touch to it :) Keep up the great work!
ஒரு சின்ன சந்தேகம்.
ReplyDeleteமுனியாண்டிங்றது உங்கள் புனைப்பெயரா இல்லை இதுவே தான சொந்தப்பெயரோ?
அன்புள்ள ஜோதிஜி ,
ReplyDeleteஇது என் அம்மா அப்பா வைத்தே என் சொந்த பெயர்.
மேலும் விவரங்களுக்கு,
என்னை பற்றி நான் - தொடர் பதிவு
http://adisuvadu.blogspot.com/2010/08/blog-post_07.html
இது ஒரு புது முற்ச்சி. சிலருக்கு ஏமாற்றம் அதில் நீங்களும் ஒருவர். ஒரு வட்டத்துக்கு இல்லாமல் என்னை விசாலபடுத்த எடுத்த முற்ச்சி. முனி டச் என்னனு எனக்கே தெரியலே..... இனிமேத்தான் கண்டுபிடிக்கணும். ஆவியை நினைத்துக்கொள்வேன் அடுத்து எழுதும்போது.
ReplyDeleteதமிழ் ஜாவா கம்பைலர் நண்பரே, வேலு நன்றி.
ReplyDeleteபின்னுட்டத்திற்கு நன்றி அமைதிச்சாரல். ஆம் புன்னகைதான் மையப்புள்ளி. இந்த பதிவுக்குதான் பல்வேறு பட்ட ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விமர்சனங்கள் பதிவை போல. சிலருக்கு ஏமாற்றம் சிலருக்கு எதிர்பார்ப்பு சிலர் இது தொடரா (அவன் காத்திருப்பதால்). சிலருக்கு கடைசியில் எழுதிய கணினி கட்டளை பிடிக்கவில்ல சிலருக்கு மிகவும் பிடித்திருந்தாது. இது வேறு வேறு தளத்திருக்கு சென்றுள்ளதில் சந்தோசம்.
ReplyDeleteரெம்ப நன்றி ராதாகிருஷ்ணன்.
ReplyDeleteபின்னுடத்திற்கு நன்றி Riyas
ReplyDeleteவித்தியாசமாய் இருக்கிறது நன்றி.
ReplyDeleteநிலாமதி, நன்றி நான் சொல்வேன் இப்ப நீங்க சொல்லிடிங்க.... நான் என்ன சொல்ல....தெரியாததால் !!!! :-) :-) :-)
ReplyDeleteவித்யாசமான முயற்சி...வாழ்த்துகள்!
ReplyDelete