வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, August 19, 2010

முடிவே முதலாய் !

குயூப் 12B , இருபத்தி ஆறாவது தளம், டெம்பில் டவர்  , லாஸ் ஏஞ்சல்ஸ் @ அமெரிக்கா  

"அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மருத்துவக் காப்பீடு எடுக்க இன்று கடைசி நாள்."

இவ்வாறான ஒரு செய்தியை என் கணினி காலண்டர் நினைவுட்டல் செய்துகொண்டிருந்தது. கிளைன்ட் மீட்டிங் முடிச்சிட்டு வந்த என் மரமண்டைக்கு இப்போதுதான் உறைத்தது. மணிபார்த்தேன் 10.30 am என்றது. இப்ப இந்தியாவுல இரவு 11.00, இன்னும் ஒரு மணி நேரத்துல காப்பீட்டு கம்பெனியோட அக்கவுன்னுக்கு ஒன்பதாயிரம் இந்தியன் ரூபாய் அனுப்பி வைக்கணும். என் இந்தியன் வங்கியின் வலைதளத்துக்குள் நுழைந்த எனக்கு என் அக்கவுண்டின் இருப்பு பதினைந்து ஆயிரம் என்றது. இது வீட்டுக்  கடனுக்கு பத்தாம் தேதி கட்ட வேண்டியபணம். இதுல கைவச்சா பத்து நாளைக்குள்ள ஏற்பாடு பண்ணமுடியுமா தெரியல. யோசிக்க நேரம் இல்ல ஏதாவது பண்ணனும்.

எங்க அப்பவேறே ஏன்டா தேவையில்லாம எங்களுக்கு வருஷம் வருஷம் பணம் கட்டுறே. எங்களுக்கு கட்டுன பணத்த சேர்த்து வச்சுருந்தா இந்நேரம் ஒரு லட்சம் சேந்திருக்கும் என்பார். அவருக்கு புரியலே. நான் வேறே ஊர்ல இல்ல... அவங்க ஒடம்புக்கு ஒன்னுனா எங்க போயி பணம் பொரட்டு வாங்க. காப்பீடு இருந்தாலாவது எதையும் எதிர்பார்க்காம ஆஸ்பத்திரியிலாவது சேருவாங்க.

இந்தமாதரியான இக்கட்டுக்கு கைகொடுக்குற ஒரேஆளு அன்பரசு தான். என் பள்ளி நண்பன். சொந்த ஊரிலே வாத்தியார் வேலை பார்க்கிறான். அப்படியா அவன் சொந்த நிலத்துல விவசாயம் செய்யுறான். என் மாதரி அகலக்காலு வைக்காம எல்லாத்தையும் அளவா பண்ணிக்கிட்டிருக்கான். அவனுக்கு பெருசா செலவும் இல்ல. நான் அமெரிக்காவுல இருந்தாலும் என் அவசர தேவைக்கு அவனைத்தான் நாடுவேன். ஆனால் அவன் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்குற ஆளு.  

யோசித்துக் கொண்டிருக்கும்போது யூ கே  வில்  இருக்க என் நண்பன் சதீஷ்யை ஆன் லைனில் பார்த்தேன்.

"டேய் சதீஷ்... எனக்கு அவசரமா ஒன்பதாயிரம் வேனுமுடா"

"சரிடா... நான் அனுப்பி வச்சுட்டு மெயில் அனுப்பிறேன்"

"அவசரம்டா...  கட்டாயம் அனுப்பிவைக்கணும்... சரியா"

"சரிடா"

சதீஷ் என்னை மாதரிதான் வீடு காரு நகைன்னு எல்லாக்  கடனும் வாங்கியிருக்கான். அவனும் என்னப்போலதான் அக்கவுண்டை தொடச்சுதான் வச்சுருப்பான். என்னமோ நல்லா நேரம்  அவன் கிட்ட பணம் இருந்துருக்கு கேட்டவுடனே சரின்னுட்டான்.  ஒரு வழியா பிரச்சனை தீர்ந்தது. அடுத்த மீட்டிங்  க்கு தேவையான கோப்புகளை கணினியில் வாசிக்க தொடங்கினேன். என் போன் வைபிரேட்ல் மேசையை வட்டம் அடித்து அன்பு... அன்பு... என்றது. 

"என்னடா அன்பரசு... இந்நேரம்... நீ  தூங்கலையா?"

"பத்தாயிரம் என் அக்கவுண்டுக்கு அனுப்பி வையுடா"

"நீ எப்பவுமே அக்கவுண்டுல ஒரு லட்சம் வச்சிருப்பையில... என்னாச்சு?"

"இல்லடா குமார்... நிலம் ஒன்னு ரெசிஷ்ட்டர் பண்ணினேன் அதான்..."

"சரிடா அனுப்புறேன்... பத்து நிமிஷம் கழிச்சு உன் அக்கவுண்டுல பாருடா...."

போனை துண்டித்தேன். என்னைக்குமே கேக்கமாட்டான். வீட்டுக்கடனுக்குரிய பணத்திலிருந்து பத்தாயிரம் அனுப்பிவைத்தேன். 

சிறிது நேரத்தில் சதீஷ் ஒன்பதாயிரம் அனுப்பியதாக இமெயிலில் உறுதிசெய்திருந்தான். என் அக்கவுண்டுக்கு மறுபடியும் போயி அம்மாவுக்கும் அப்பாவுக்குமான மருத்துவா காப்பீட்டுத்தொகை  ஒன்பதாயிரத்தை அனுப்பிவைத்தேன். இப்ப வீட்டுக் கடனுக்கு பணம் ஏற்பாடு பண்ணனும்.

கணினி மேசை, தோட்டவீடு - அன்பகம் ,  வாடிப்பட்டி @ இந்தியா

"ஏங்க... நடுராத்திரி தூங்காம கம்யூட்டரல என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க" தூக்கம் களைந்து எழுந்த அன்பரசின் மனைவி.

"சதீஷ் பத்தாயிரம் வேணுமுன்னு கேட்டு போன்பண்ணியிருந்தான்... என்கிட்ட இல்ல அதான் குமார்கிட்ட வாங்கி சதிஷ்க்கு அனுப்பினேன்"  மனைவிக்கு பதில்ச் சொல்லிக்கொண்டே கணினியை ஆப் செய்தான் அன்பரசு.22 comments:

 1. அவசரத்துக்கு நாம கேட்டது மாதிரிதானே அவரும் என உதவும் மனப்பானமையுடன் கதை முடிந்திருக்கிறது.. நல்ல முடிவு ..

  ReplyDelete
 2. நட்பு! அவசரம், தேவைகள், அந்த கணத்தில் தோன்றும் உணர்வு அப்படியே இந்த பதிவின் மூலம் என்னுள் உணர்ந்தேன்.வாழ்த்துக்கள்
  ஆண்டாள்மகன்

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. ரொம்ப நல்லாயிருக்குங்க..

  எவ்வளவு அழகா நட்பைப் பத்தி சொல்லியிருக்கீங்க.. நாம எவ்வளவு இக்கட்டான நிலையில இருந்தாலும் நம்மளோட நண்பனுக்கு ஒரு கஷ்டம்னா.. வேற எதுவும் தோணாது..

  குறைவான வரிகள்ல அருமையான கருத்துக்களை சொல்லியிருக்கிங்க.. ரொம்ப நல்லாயிருக்கு..

  ReplyDelete
 5. நட்பை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது...

  :)

  ReplyDelete
 6. நண்பரே...அருமையான கதை. நேர்த்தியான நடை.
  ஆனா ஒரு எழவும் புரிய மாட்டேன்கிறதே ..மாத்தி மாத்தி பணம் அனுப்புறானுக ..கழுதைப் பயலுக
  சரி இப்போ என்ன தான் சொல்ல வர்றீர் ?

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. நீங்கள் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தீர்கள்.நான் ஏற்கனவே அந்தத் தொடர்பதிவு பதிவிட்டு விட்டேன்.நன்றி என்னையும் அழைத்தமைக்கு.
  இரண்டு வார விடுமுறை விட்டு இப்போதான் மீண்டும் தளங்களோடு உலவுகிறேன்.

  நல்லதொரு கதை.முடிவு நல்லாயிருக்கு நண்பரே.

  ReplyDelete
 9. வித்தியாசமான சிந்தனை.. இததான் நாங்க முனி "டச்" ன்னு சொன்னோம். நல்லா இருந்தது!

  ReplyDelete
 10. தொழில் நுட்ப பதிவுகளில் கூட முடிந்த வரைக்கும் ஆங்கிலத்தை தமிழ் படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  நெருடலாக இல்லாவிட்டாலும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயற்சித்துப் பாருங்களேன்.

  என்ன? கொஞ்சம் கஷ்டப்படவேண்டும்.

  ReplyDelete
 11. சூப்பர் தல,

  இப்படியெல்லாமா நண்பர்கள் இருக்காங்க
  நம்மக்கூட இருக்குரதுயெல்லாம் களவானிபயளுகலாச்சே.

  ReplyDelete
 12. நட்புனா இப்பிடித்தான் இருக்கணும்னு உங்க கதை சொல்லுது,சின்னதாய் அழகாய்

  ReplyDelete
 13. கவலையாக உள்ளது நண்பரே

  ReplyDelete
 14. ஆபத்தில் கை கொடுப்பவன் தான் மனிதன். நட்பின் வலிமை உணர்த்திச் செல்கிறது

  ReplyDelete
 15. கதை மிகவும் அருமை நண்பரே...நட்பின் உயர்வை...மிகையில்லாமல் இயல்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்...

  ReplyDelete
 16. இதுக்கு பேர்தான் உண்மையான நட்பு

  ReplyDelete
 17. அருமையா சொல்லியிருக்கீங்க உயர்ந்த நட்பை பற்றி..

  கதை நல்லாயிருக்கு...

  ReplyDelete
 18. நட்பின் இலக்கணத்தை எடுத்துக்காட்டும் நல்ல கதை!

  ReplyDelete
 19. கதையில் வரும் ஆங்கில வார்த்தைகளை நீக்கிவிட்டேன்.

  நன்றி ஜோதிஜி.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் முனியாண்டி. இப்போது தான் வர முடிந்தது.நல்லா எழுதுறீங்க.

  ReplyDelete
 21. நன்றி காமராஜ் சார். அடிக்கடி இந்த பக்கம் வாங்க. உங்கள் சகஜ மீட்பர்கள் என்னையும் உங்களுடன் பயனப்பட வைத்துவிட்டது நன்றி.

  ReplyDelete