வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, August 22, 2010

கதை உருவான கதை

இப்பதிவுக்கு நேரே வருவவர்கள் முடிவே முதலாய் படிக்கவும்.

"முடிவே முதலாய்" உருவான கதை கதையை விட சுவாரிசியமானது அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன்.

முதலில் உண்மையில் என்ன நடந்தது என்றால் என் நண்பர் (1) ஒரு நாள் காலை இன்னும் முப்பது நிமிடத்துக்குள் பத்தாயிரம் என் வங்கி கணக்குக்கு அனுப்ப முடியுமா? என்று ஈமெயில் செய்து கேட்டிருந்தார், நான் என்னிடம் இல்லாததால் என் நண்பனிடம் (2) அனுப்பச்சொல்லி நண்பனுக்கு (1) அனுப்பினேன். இது எல்லாம் நடந்தது பத்து நிமிடங்களுக்குள். இது நடந்து முடிந்தபின்  பேசியே போதுதான் தெரிந்தது என் நண்பன் (2) அவன் வீட்டுக்வங்கி கடனுக்கு உரிய பணத்தை அனுப்பி வைத்தான் என்று. இதில் என்ன கொடுமை என்றால் என்னிடமும் என் நண்பரிடமும்(1) வீட்டுக் கடனுக்கு உரிய பணம் வங்கியில் இருந்தது. ஆனால் என் நண்பனோ (2) அவன் வீடுக் கடனுக்குரிய பணத்தை அனுப்பியிருந்தான் ஏன் என்று கூடக்  கேட்காமல்.

இப்போது கதைக்கு வருகிறேன். இதை கதையாக்க  வேண்டும் என்று நினைத்தேன். கே ஆர் பி செந்தில் வேறு கதையில் ஒரு டுவிஸ்ட்டு வையுங்கள் என்றதால் அதில் சிறிது சுவாரிசியத்தை கூட்ட கதையில் வரும் நாயகன் குமாரின் பணமே அன்பரசின் வழியாக சதீஷ் குமாருக்கே அனுப்புவதுபோல் அமைத்தேன். இந்த முடிவை எழுத மூன்று விதமான முடிவு எழுதி எதுவும் திருப்தியில்லாததால் நான்காவதான ஒரு முடிவை எழுதினேன். அதுதான் இப்போது கதையில் உள்ளது.  கதையில் நண்பர்கள் பெயர் இருக்கும் இடம் எல்லாம் மாற்றினேன். அப்புறம் வெளிநாட்டில் இருக்கும் இருவர் இந்தியாவில் இருக்கும் நண்பனை சுற்றி வருவதாய் கதையை எழுதினேன். கதையில் வருவதுபோல் இந்திய இளஞர் தன்னிறைவு வாழ்வு  என் ஆசை அல்லது நான் என் முதுமையில் வாழவிரும்பும் வாழ்க்கை.

இக்கதைக்கு முதலில் "அதே பணம்" என்று ஒரு தலைப்பு வைத்தேன். முடுச்சு படிக்கும்போதே வாசகர்கள் யூகிக்கக்கூடும் என்று தலைப்பை "முடிவே முதலாய்" என்று மாற்றினேன். மேலும் முதல் என்றாள் வழக்கில் முதலிடு... பணம்..செல்வம் என்று ஒரு பொருள்...இக்கதையிலும் பணம் ஒரு மையப்பொருள் மற்றும் அந்தப் பணம் ஆரம்பிக்கும் இடத்தை திரும்பி வந்து அடைவதால் இது பொருந்தும் என்று நினைத்தேன்.

நான் ஒரு பதிவராக எழுதிய கதையின் முடுச்சைவிட நட்பே கதையில் மேலோங்கியிருந்ததை பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

முடிவாக கே ஆர் பி செந்திலுக்கு, உங்களுடன் பேசியபோது பணம் தொடர் உருவானதும் அதற்காக உங்கள் தேடலும் என்னை மலைக்க வைத்தது. பணம் தொடர் உருவான பின்புலத்தை ஒரு தனிப் பதிவாக்க வேண்டுகிறேன்.

9 comments:

  1. இது கதை அல்ல..... நல்ல நட்பின் பாசம்! You are blessed!

    ReplyDelete
  2. இது தான் நட்பின் கதை , வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி முனி .. நான் மீண்டும் படிக்கிறேன் ...

    ReplyDelete
  4. மிகவும் அருமை நண்பரே...வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நட்புகள் நம்மை உயிர்த்திருக்க வைக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல ... தோழர் கே ஆர் பி க்கு நீங்கள் வைத்திருக்கும் வேண்டுகோளை நானும் வழிமொழிகிறேன் ....

    ReplyDelete
  7. கதை நல்லா இருக்கு . அதுக்கு பேர்தான் நட்பு.

    ReplyDelete
  8. மிகவும் அருமை...

    நல்ல நட்பின் பாசம்..

    ReplyDelete