வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, June 27, 2010

தூரத்து பச்சை விளக்கு

     
    "செந்தில்... நான் கரெக்டா 7.30 க்கு உங்க வீட்டுக்கு வந்திடுவேன். நீயும் அண்ணாச்சியும் ரெடியா இருக்கனும்.  லேட்டாச்சுன்ன நாமே போயி சேரதுக்குள்ள விடிஞ்சிரும் அப்புறம் ரெஸ்ட் எல்லாம் எடுக்க முடியாது. குளிச்சிட்டு ஒடனே கெளம்ப வேண்டியதுதான்" என் பதிலுக்காக காத்திருக்காமல் போனை வைத்தான் வேல். இவன் சொன்னா கழுதப்பய கரெக்ட்ட வந்து நிப்பானே. இப்ப என்ன பண்றது. நான் வேறே எதாவது ட்ரிப் போகணுமுன்னு கெளம்பினா அன்னைக்கின்னு பாத்துதான் நெறைய வேல வரும்.

      நான் ஆபீசிலிருந்து ரூம்க்குள் நுழைந்தபோது மணி ஏழு. அண்ணாச்சி ஏதோ சமைத்துக்கொண்டிருந்தார். "வேல் , நிமா, ஸ்ரீபா பாப்பா கெளம்பி குமார் வீட்டுக்கு போயி குமாரையும்  லக்ஷ்மியையும் கூடிக்கிட்டு சரியா நாம வீட்டுக்கு வந்திருவாங்கலாம்" வேல் சொன்னதாகச்சொன்னார்.  இரவு சாப்பாடு நம்ம வீட்டுலதான். நீ சீக்கிரம் கெளம்பு என்றார் .      


      ஏழு பேர் அமரும் வண்டி கொஞ்சம் பெருசுதான். எனக்கு எப்பவுமே இரவு வண்டி ஓட்டுவது பிடிக்கும் அதுவும் தமிழ்ப்பாட்டு கேட்டுக்கொண்டு. 


              தமிழா....தமிழா.... 
             நாளை உன் நாளே... 
            ஒன்றான இந்திய தேசம் உனை காக்கும் இல்லையா...


என்று ஹரிஹரன் பாடிக்கொண்டு இருந்தார்.  எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தனர் நான் காரை ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி பெட்ரோல் போட்டேன் அப்படியே எனக்கும் ஒரு ஹாட் சாக்லேட் எடுத்துக்கொண்டேன்.  Freeway 15 -ல் Los Angeles to Grand Canyon இன்னும் 30  மைல் என்று GPS  காட்டியது.


         Grand Canyon வார்த்தைகளால் விளக்கமுடியாது. அது கடல் மாதரி மிகப்பெரிய பள்ளத்தாக்கு.  கார் பார்க் நோக்கி நடந்துகொண்டிருந்த எங்களுக்கு முன் ஓர் இந்தியப்பெண். இந்த பொண்ணைப்பார்த்த மதுரைக்கும் கன்னியாகுமரிக்கும் நடுவுல எதோ ஒரு ஊராத்தான் இருக்கணும். இதைப்பத்தி நீங்க என்ன நேனைகிறேங்க அண்ணாச்சி என்றான் குமார். டிரஸ் மேக்கிங்கை பார்த்த எதோ சென்னை அல்லது கோயம்த்தூர் மாதரி தெரியுது என்றான் வேல். "அங்க என்ன பேச்சு", என்றார் நிமா. இல்லம்மா  நாங்க மியூசிக்பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் என்றான் வேல். நீங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டேன். அந்த பொண்ணு இலங்கைத்தமிழ் அவங்க அமெரிக்க வந்து பத்து வருஷம் ஆச்சாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க கூட பேசினேன் என்றார் நிமா.   நீங்க எதாவது இந்தியன் ஹோட்டல் பார்த்து சாப்பாடு வாங்கிட்டு வாங்க. பாப்பா, லக்ஷ்மி, நானும் ஹோட்டல் இறங்கிக்கிறோம் என்றார் நிமா.


    பக்கத்தில இந்தியன் ஓட்டல்  எதாவது இருக்கன்னு தேடி ஒருவழியா அட்ரஸ் கண்டுபிடுச்சு கார் எடுத்துகிட்டு போனோம்.  நாங்க போய் சேர்ந்தபோது கடைக்காரர் ஹோட்டலை அடைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். நாங்க LA இருந்து வந்திருக்கோம் எதாவது பண்ணமுடியுமா என்றான் வேல். வெஸிடபில் ரைஸ் இருக்கு வேணுமுன பேக் பண்ணித்தரவா  என்றார். நீங்க நல்லா தமிழ் பேசுறேங்க எந்த ஊரு என்றான் வேல் பார்சல் கொண்டுவந்த கடைக்காரரிடம்.  நாங்க இலங்கைத்தமிழர் முதல் சண்டையின் போதே எங்க அப்பா இங்க வந்துட்டார். அங்க இப்ப நிலைமை  எப்படி இருக்கு என்றான் குமார். எங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை ஆனால் நிலைமை மிகவும் மோசம் என்பது உறுதி என்றார்.         


        பில் எவ்வளவு என்றான் குமார். தமிழ்நாடு மக்கள் எங்க மக்களுக்கு எவ்வளவோ பண்ணியிருக்கீங்க. எதோ எங்களால் முடிந்த கைமாறு என்று மறுத்து விட்டார் நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்.  


           விடை  கொடு  எங்கள்  நாடே , 
           கடல்  வாசல்  தெளிக்கும்  வீடே  
           பனைமர காடே , பறவைகள்  கூடே  
           மறுமுறை  ஒருமுறை  பார்ப்போமா ...


பாட்டை  ஆப் பண்ணினேன் காரை ஓட்டிக்கொண்டே. என்னை இந்த பாட்டு மிகவும் காயப்படுத்தியது. எனக்குள் நெறைய கேள்விகள். நான் உண்மையிலே தமிழன் தானா? தமிழன் என்பது இனம்சார்ந்த்ததா  மொழிசார்ந்த்ததா? தமிழ் பேசுவதால் மட்டுமே நான் தமிழன்  ஆகிவிட முடியுமா? இனம்...ரத்தம்...சொந்தம்...அழிவதை செய்தியாக படித்து அன்றுமட்டும் வருத்தப்பட்டு....அடுத்தநாள் அதே பத்திரிக்கையில் டாட்டூ மாமிக்கும் ஞானி நாமம் கொண்டவருக்கும் காதலாம் என்று கிசுகிசு படிப்பவர் தான் நாம் என்று எனக்கே என்மேல் கோவம் வந்தது. காரில் யாரும் பேசிக்கொள்ளவில்லை. ரோடு ஒரே இருட்டாக இருந்தது. தூரத்து சந்திப்பில் மஞ்சலில் இருந்து சிவப்புக்கு மாறியிருந்தது சாலை விளக்கு. வேகம்கூட்டினேன் பச்சை வரும் என்ற நம்பிக்கையில். 



18 comments:

  1. உக்கிரமான பார்வையைப் பதிந்திருக்கிறீர்கள். விளக்கொளி ஒரு குறியீடாக வருகிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்லா எழுதிரிக்கிங்க..

    ReplyDelete
  4. கனக்க வைக்கிறது அந்த இலங்கைத்தமிழர் சொற்கள்...

    :-(

    ReplyDelete
  5. வணக்கம் முனியாண்டி.எங்கிருந்தாலும் விருந்தோம்பலுக்கும் நன்றியுணர்வு கடமைக்கும் பெயர் போனவன் தமிழன்.உங்கள் தமிழின உணர்வுக்கு நன்றி.அரசியலுக்குள்தான் ஈரம்
    வற்றிக் கிடக்கிறது.ஈழத்தவன் வாழ்விலும் நம்புவோம் பச்சைவரும் என்று !

    ReplyDelete
  6. Riyas,

    தாங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  7. அகல்விளக்கு,

    இதை எழுதுதிய போதும் சரி அல்லது பின்னுட்டம் எழுதும்போதும் தாங்கள் மனநிலையே எனக்கும்.

    தங்களால் இதை மற்றும் பலர் படித்து அதனால் ஒரு சிறிய சிந்தனை மாற்றம் வந்தால் மகிழ்ச்சி.

    தாங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  8. ஹேமா,

    நானும் உங்களில் ஒருவன் தான் ஈழத்தவன் வாழ்விலும் பச்சைவரும் என்று நம்பும்.

    தாங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  9. ரெம்ப நன்றி பட்டாபட்டி.

    ReplyDelete
  10. இலக்கை ஒரு நாள் அடைவோம் என்ற நம்பிக்கையுன் இருப்போம் நண்பா.

    ReplyDelete
  11. Jay,

    நிச்சயம் நம்புவோம்.
    பின்னுட்டளுக்கு நன்றி.

    ReplyDelete
  12. பச்சை வரும் என்ற நம்பிக்கையில்தானே எல்லோருமே பயணிக்கிறோம்.
    நம்பிக்கையோடு தொடருவோம்....

    ReplyDelete
  13. நானும் பச்சைவரும் என்று நம்பும் உங்களில் ஒருவன்.

    தங்களால் இதை மற்றும் பலர் படித்து அதனால் ஒரு சிறிய சிந்தனை மாற்றம் வந்தால் மகிழ்ச்சி.

    தாங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  14. நாம் எதிர்பார்க்கும் வெளிச்சம் விரைவில் கிடைக்க பிரார்த்திப்போம்.

    மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  15. அக்பர் பிராத்திப்போம் நம்பிக்கையுடன்.

    பின்னூட்டத்திற்க்கு நன்றி.

    ReplyDelete
  16. தமிழ்நாடு மக்கள் எங்க மக்களுக்கு எவ்வளவோ பண்ணியிருக்கீங்க. எதோ எங்களால் முடிந்த கைமாறு என்று மறுத்து விட்டார் நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்.
    Tamilnadu politicians did a lot :(

    ReplyDelete
  17. அதன் ஆதங்கம் தான் இந்த புனைவு. புரியும் உங்களுக்கு. நன்றி உங்கள் பின்னுட்டத்திர்க்கு.

    ReplyDelete