வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Saturday, August 7, 2010

என்னை பற்றி நான் - தொடர் பதிவு


வெறும்பய ஜெயந்த் உனக்கு அப்படி என்ன கோவம் என்மேல் (உன்ன வெறும்பயன்னு ரெண்டு மூனு தடவை பின்னூட்டத்தில் சொன்னதுக்காகவா?). நான் எதோ வந்தமா எனக்கு தோன்னத எழுதுனமான்னு நான் பாட்டுக்க என் வழியில போயிகிட்டு இருந்தேன். இருக்கதிலே ரெம்போ கஷ்ட்டம் தன்னை பத்தி சொல்றதுதான்னு (சொல்றதுக்கு ஒன்னும் இல்ல அது வேற விஷயம்) இத எழுதுரப்பதான் புரிந்தது. வெறும்பயலின் அன்பிற்காக எழுதுகிறேன். 

(1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? & (2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உலகிலே எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை என் பெயர் (எங்கோ எப்போதோ படித்தது, மிகவும் பிடித்ததும் கூட, உண்மையும் அதே). பிறப்பு, பெற்றோர், பெயர் இவை நான் தீர்மானித்தது இல்லை. என் பெற்றோர் என் மீது இட்ட சுவடு என் பெயரும் ஒன்று. என் எண்ணங்களை எனக்கு பிடித்த என் பெயரிலே எழுத விரும்பினேன். 
(3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
அமெரிக்காவில் மூன்றாவது முறை இறங்கிய முதல் நாள் StarBucks ( நம்ம ஊரு நாயர் டீ கடை மாதரி) வரிசையில் நிற்கும்போது ரெம்ப நாளைக்கு அப்புறம் ஒரு (ஏனோ இன்று...) கவிதை தோன்றியது அதை என் பேப்பர் காபி கப்பில் எழுதினேன் (காதலிக்கும்போது கவிதை எழுதியது என் காதலிக்காக இப்போது என் மனைவி).  கவிதையை படித்த என் நண்பன் சரவணன் blog பத்தி சொல்லி ஆரம்பிக்கச் சொன்னான். என் மற்றொரு மலையாளி நண்பன் Finsen முதல் கவிதையின் ஆங்கில மொழிமாற்றத்தை கேட்டு சில context சொல்லி எழுத ஊக்கபடுத்தினான். அப்போது ஆரம்பிக்கலே மாசம் கழிந்து ஆரம்பித்தால் என்ன என்று தோன்றி ஆரம்பித்தேன்.
(4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன வெல்லாம் செய்தீர்கள்?
ஆரம்பித்த புதிதில் யாராவது வாசிக்கமாட்டார்களா என்று தோன்றியது. நாட்கள் ஆக ஆக என் பார்வையை நான் கடந்து வந்ததயை பதிவு செய்யும் திருப்பதி அதிகமாகியது. மாதவராஜ் என்னை புதிய பதிவர்கள் அறிமுகத்தில் அறிமுகபடுத்தினார். அதன் மூலம் சிலர் (வால்பையன்♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫goma,ஆவி அறிமுகம் கிடைத்தது அவர்களின் பின்னூட்டம் என்னை எழுத ஊக்கப்படுத்தியது. 
(5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை  என்றால் ஏன்?
என்னை பாதித்ததை நான் பார்த்ததை என்னை கடந்து சென்றதை என் பார்வையை இன்றைய மனநிலையில் இருந்து எழுதுகிறேன்.  என் சொந்தவிசயங்கள் என்று தனியாக எதையும் எழுதவில்லை ஆனால் பதிவின் நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் என் விசயமும் இருக்கும் ஆனால் எண்ணங்கள் விவாதங்கள் எல்லாம் என்னுடையது. 
(6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
போழுதுபோக்குக்காகவோ... சம்பாதிப்பதற்காகவோ...  எழுதவில்லை.   பாதித்ததை பதிவு செய்த திருப்தி. அதனால் மற்றவர்களுக்கு உபயோகப்பட்டால் சந்தோசம்.
(7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னுக்க கண்ணுமுழி பிதுங்குது. தமிழில் சிந்திப்பதால் தமிழில் மட்டுமே எழுதுகிறேன்.
(8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்?
யார் மீதும் கோவம் இல்லை. அன்பையும் வாழ்வின் புரிதலையும் பகிர்ந்து கொள்ள ஒரு அழகான இடம் இது. ஆனால் எனக்கு சிலர் மீது பொறாமையுண்டு. கே.ஆர்.பி.செந்தில்ஜெகநாதன் இருவரின் எழுத்து என்னை மிகவும் பாதித்துள்ளது. மற்றவர்கள் கோவித்து கொள்ளவேண்டாம் எனக்கு படிக்க அதிகம் நேரம் இல்லை.  இவர்களின் மிதான பொறாமை என்னை அடுத்தநிலைக்கு இட்டு செல்ல உதவும் என்று நம்புகிறேன். மற்றவர்களையும் படிக்க முயற்சிக்கிறேன்.
(9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
எல்லா பின்னூட்டங்களும் என்னை ஒரு விதத்தில் பாராட்டியதாகவே கருதுகிறேன். ஜோதி என்ற என் பதிவிற்கு ஜெகநாதனின் பின்னூட்டம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது என்னை மிகவும் கவனமாக இருக்க வைத்தது.  கே.ஆர்.பி.செந்தில், ஜெகநாதன், வெறும்பய, ஜில்தண்ணி, ஆண்டாள் மகன் , கோமதி, ஹேமா, ராமசாமி கண்ணன், நிலாமதி, கோவை ஆவி எல்லோரும் ஆரம்பகாலங்களில் என்னை பாராட்டி இருக்கிறார்கள். 
(10) கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னைப் பற்றி விசேசமாக சொல்ல ஒன்றுமில்லை. என் பதிவுகளில்  என்னை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். முடிவாக பின்னூட்டம் இட்ட எல்லோருக்கும் நன்றி. 
இதை தொடர்வதற்கு அழைப்பது 

15 comments:

  1. நல்ல பதில்கள்

    ReplyDelete
  2. //யார் மீதும் கோவம் இல்லை. அன்பையும் வாழ்வின் புரிதலையும் பகிர்ந்து கொள்ள ஒரு அழகான இடம் இது. ஆனால் எனக்கு சிலர் மீது பொறமையுண்டு.//

    மிக்க நன்றி முனி .... உங்கள் அன்பும் தனித்துவமானது...

    ReplyDelete
  3. ///////// பொழுது போக்குக்காகவோ... சம்பாதிப்பதற்காகவோ... எழுதவில்லை. பாதித்ததை பதிவு செய்த திருப்தி. அதனால் மற்றவர்களுக்கு உபயோகப்பட்டால் சந்தோசம்.//////
    நிச்சயமாக தோழரே!!!! உண்மையில் உங்களின் எழுத்து மெருகேறிவருகிறது. உங்களின் இந்த எழுத்து பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!!!!!
    ஆண்டாள்மகன்

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. வெறும்பயலின் அன்பிற்காக எழுதுகிறேன்.

    ///

    மிக்க நன்றி சகோதரா...

    உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்..

    ReplyDelete
  6. இந்த பதிவின் வாயிலாக உங்களைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் அமைந்தது . நீங்கள் வலையில் எழுதத் தொடங்கிய அனுபவம் பற்றி சொல்லி இருப்பது மிகவும் ரசிக்க வைக்கிறது . பொதுவாக தமிழனுக்கு தமிழனைவிட வேற்று மொழிக்காரர்கள்தான் அதிகம் உதவுகிறார்கள் . உங்களை எழுத ஊக்குவித்த அந்த கேரள நண்பருக்கு என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  7. பதில்கள் நல்லா சொல்ரீங்கோ...

    ReplyDelete
  8. ம் நேர்மையான பதில்கள்..!!

    ReplyDelete
  9. பதில்களில் எளிமையும் நேர்மையும் வடக்கயிறாகத் திரிந்து கிடக்கின்றன. கயிறு, அன்பை வாளி தளும்ப அள்ளிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
    உங்கள் எழுத்தின் மேல் உள்ள நம்பிக்கையால்தான் பின்னூட்டங்களில் விமர்சித்து எழுதினேன். எல்லோருக்கும் நான் அப்படி எழுதுவதில்லை.

    தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி நண்ப!

    ReplyDelete
  10. எல்லாரும் காமெடியா பதில் சொல்லிட்டு இருக்கும் போது..நீங்க ரொம்ப சின்சியரா..சீரியாசான பதில்களா சொல்லி இருக்கீங்க...நன்று...நன்றி...

    ReplyDelete
  11. பார்த்த பழகிய பார்த்துக் கொண்டுருக்கும் பல ஆண்கள் பெணகள் தங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயரில் வைப்பதே கேவலமாக நினைக்கிறார்கள்.

    கேட்ட போதும் அதையே தைரியமாகவும் சொல்கிறார்கள். உங்கள் உண்மையான பெயரில் எழுதுவதற்கும் அதற்குரிய காரணத்திற்கும் ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    ReplyDelete
  12. நன்றி ஜோதிஜி. விளக்கம்மாக பதில் அளிக்க ஆசை ஆனால் என் பெயர்குறித்து தனி பதிவு எழுதலாம் என்று ஒரு எண்ணமுண்டு. ஆதலால் நன்றியுடன் முடிக்கிறேன்.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு.. நண்பரே!

    //அன்பையும் வாழ்வின் புரிதலையும் பகிர்ந்து கொள்ள ஒரு அழகான இடம் இது.//

    அருமை...

    ReplyDelete