அப்படி நான் நெனைக்கல
ஓன் ஒத்த வாத்தயில
கெடையப் பிரிஞ்ச
ஆடுகெனக்க மனசு
கெடந்து அலையுதுடி.
தப்பா புருஞ்சுகிட்டிங்க
நீ சொன்னப்ப
கொக்கநோவு வந்த கோழியா
மனசு கெடந்து சொனங்குதுடி.
செநேகம் மட்டுந்தேன்
ஓன் ஒத்தச்சொல்லு
உச்சி வெயிலாட்டம்
சுளிருன்னு சுடுதுடி.
எல்லாத்தையம் மறந்திருங்க
ஓன் பேச்சு
கால்ல முறுஞ்சமுள்ளா
உள்ளுக்குள்ள கடுக்குதுடி.
பழகிய பழக்கமெல்லாம் பொய்யா ?
செஞ்ச அம்பு நெசமில்லையா ?
கடந்த நாக்க கனவா ?
அடுத்தடுத்து பொறந்த
சவலபுள்ள பசியா
மனசு பதறுதுடி.
எல்லாத்தையம் மறந்திருங்க
ReplyDeleteஓன் பேச்சு
கால்ல முறுஞ்சமுள்ளா
உள்ளுக்குள்ள கடுக்குதுடி.
.....சூப்பரு!
நல்லா இருக்குங்க... அதற்கேற்ற படமும் அருமை
ReplyDeleteவித்தியாசமான மொழிநடையில் கவிதை சோகம் ஆதங்கம் சொல்கிறது நல்லாயிருக்கு !
ReplyDelete