வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, February 8, 2011

மலரின் கதறல்


கட்டுண்டு கிடக்கிறாயா ?
கழண்டுவிழத் துடிக்கிறாயா?
மனிதக்கழிவிலும் கறி புகையிலும்
கசிந்த என் உயிரை
துளி துளியாய் துளிர்க்க செய்தாய்
கைமாறு என்ன செய்வேன் ?

தரையெங்கும் இலை மலர் பரப்பி
மறுமுறை மழையாய் விழும்போது
தரைவிழாது என்மடி ஏந்தி
உனக்கும் தரைக்கும் வலிக்காமல்
தரைக்கு மெல்ல தாரைவார்ப்பேன்

சூரியன் கதிர்களால் உன்னை
சுட்டு சுட்டு குடிக்காமல்
கதிர்களை கட்டுபடுத்தி
வெயிலை மட்டுபடுத்துவேன்.

காற்றை தென்றலாக்கி
உன் குளங்களின்
தளமெங்கும் தவலச்செய்வேன்.

உனை கொஞ்சம் உறிஞ்சி
மரங்களின் நாளங்களில்
உதிரமாய் ஓடவிட்டு
நீ உயிராய் நான் உடலாய்
காலம் காலமாய் வாழ்த்துடுவேன்

களங்கமில்லா நாம் காதல்
யுகம் யுகமாய் தொடர
கழிவுகளை மறுபரிசிலனை செய்ய
மனிதகுலத்திடம் மண்டியிடுவேன்.


பின்குறிப்பு: நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.

8 comments:

 1. படமே கவிதையாக - அழகுற இருக்கிறது. :-)

  ReplyDelete
 2. மலர் கதறியதோடு நில்லாமல் கண்ணீரும் விடுகிறது...
  ப்டமும் கவிதையும் ஒன்றை ஒன்று உயர்த்தி நிற்கிறது

  ReplyDelete
 3. //உனை கொஞ்சம் உறிஞ்சி
  மரங்களின் நாளங்களில்
  உதிரமாய் ஓடவிட்டு
  நீ உயிராய் நான் உடலாய்
  காலம் காலமாய் வாழ்த்துடுவேன்//

  அழகு வரிகள்...ரசித்தேன் வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. கவிதை அருமை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. நல்லாயிருக்குங்க.... பாராட்டுக்கள்

  ReplyDelete