தலையில வெயிலுக்கு உருமா
முள்ளுக்கு கால்ல கனத்தசெருப்பு
குட்டி ஆடும் தொரடிக்கம்பும்
தோதா தொள்வச்சு
கைய ரெண்டும் கம்புலபோட்டு
ஒரு கையில தூக்குசட்டி கஞ்சி
மறுகையில ஆட்டுக்குட்டியோட காலு
கவனமா புடுச்சுக்கிட்டு
வெரசா எட்டுவச்சு வேகமா
நடக்குராறு கீதாரி.
ஆடு மேக்கிற பையன்
ஊருல கொடன்னு போயிட்டான்
கரட்டுல மேயிற கெடைய
கவனிக்க ஆளில்ல
கரடெல்லாம் முள்ள தவிர
ஆடு மேய புல்லில
ராத்திரி அடைய இடமில்ல
ஊரெல்லாம் வெள்ளாம
எப்ப இது வெளஞ்சு
வெள்ளாம அறுத்து
காடு தறுசாகி
ஆடு தர எறங்கி
நாலு நல்ல புல்லு
தின்னுமே தெரியல
தந்தரையில கெட
அடையுமோ தெரியல
நாலு நல்ல கெட அமத்தி
சியான் வீட்டு சில்லற
பொலங்குமோ தெரியல
நானும் பொண்டாடியோட
இருந்து பொழுதுவிடியிரப்ப
கெடைக்கு போவேனோ தெரியல
குறிப்பு: இதில் நிறைய வட்டாரவழக்கு வார்த்தைகள் உபயோகித்திருக்கிறேன். அதற்கு தனி விளக்கம் கொடுத்தால் அதன் அழகு சிதைந்து விடும் என்பதால் உங்கள் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்.
அருமை
ReplyDeleteவாசித்து
வாக்களித்தேன்
நல்லா இருக்குங்க...வட்டார வழக்கு புரியும் படியா தான் இருக்கு... நெறைய கதை சினிமாக்கள்ல படித்தது கேட்டது... nice write up
ReplyDeleteஅருமை. நன்றி. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் திரு முனியாண்டி.