வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, February 17, 2011

See you அமெரிக்கா!!!

பாட்டானோட நாடா ?
நான் பிறந்த ஊரா ?
இளமை கழிந்தது இங்கேயா ?
என் காதலி வீடு இங்கிருக்கா ?

ஏன் பின்ன மனசு
கெடந்து லேசா வலிக்குது
இந்த ஊர பிரிய மறுக்குது

போன இடத்துக்கெல்லாம்
போய்வர துடிக்குது

பழகிய மனுசாரெல்லாம்
பாக்க தோணுது

பிடிக்காத பிட்சா கோக்
சாப்பிட எண்ணுது

அலுவலகம் போய் வந்த
பஸ்சுல சும்மா ஒரு தடவ
போக மனசு ஏங்குது.

அலுவலகத்து கம்ப்யூட்டர்
இருந்த இருக்கை
விட்டு வர மறுக்குது.

பல நாள் பாத்த இடம் கூட
புதுசு புதுசா தெரியுது

அழுக்கான வீட்டு
கிச்சன் கார்பெட் கம்பெடர்
எல்லாம் அழகா தெரியுது.

வீட்டு பால்கனியில கடைசியா நின்னு
ஒரு காப்பி குடிக்க தோணுது.

இருபத்தி ஐந்தாவது தளத்தில்
இருந்து இன்னொரு முறை
சிட்டியை பாக்க ஆசையாகுது.

நடந்த தெரு கடந்த சிக்னல்
காத்திருந்த பஸ் நிறுத்தம்
கனவுல கூட வந்து போகுது

வெள்ளி வெள்ளியாய் எத்தனை
வெள்ளி இரவுகள் விடிந்தன இங்கே

வாழாத வாழ்க்கையில்லை மறுபடியும்
வாழமுடியுமா தெரியவில்லை

போகாத இடங்கள் இல்லை மறுபடியும்
பார்ப்போமா தெரியவில்லை

எனக்குள் நான் புரட்டி பாக்காத
சில பக்கங்கள்
என்னை நான் புதுசா உணர்ந்த
சில தருணங்கள்
பள்ளி காலத்து நட்பாய் - எதையும்
எதிபார்க்காத நண்பர்கள்

என்ன சொல்ல???
ம்... ம்... ம்...
................................
................................
எல்லாத்துக்கும் நன்றி.

என் நட்பே ...
என்னை கொஞ்சம்
உன்னில் விட்டுச்செல்கிறேன்
என் கண்கொண்டும் காணு.


7 comments:

  1. உங்கள் உணர்வுகள் புரிகிறது... அழகாய் சொல்லி இருக்கீங்க...
    Who knows? Maybe you will come back again for another project. :-)

    ReplyDelete
  2. //வீட்டு பால்கனியில கடைசியா நின்னு ஒரு காப்பி குடிக்க தோணுது//
    போட்டோ அப்போ எடுத்ததா...well conceived photography....

    //எனக்குள் நான் புரட்டி பாக்காத
    சில பக்கங்கள்
    என்னை நான் புதுசா உணர்ந்த
    சில தருணங்கள்//
    ஒண்ணை விட்டு விலகரப்போ தோணும் உணர்வுகள்...பிடித்தும் பிடிக்காத கலவையாய்... ரெம்ப அழகா சொல்லி இருக்கீங்க...

    //என்ன சொல்ல???
    ம்... ம்... ம்...//
    ம்... ம்... ம்.........

    //என் நட்பே ...
    என்னை கொஞ்சம்
    உன்னில் விட்டுச்செல்கிறேன்
    என் கண்கொண்டும் காணு.//
    ............................

    ReplyDelete
  3. உணர்வுகளை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே அருமை :)

    ReplyDelete
  4. அழகான அருமையான எழுத்துக் கோர்வைகள்.

    ReplyDelete