ஆண்: கண்டும் காணாம
பாசாங்கு செய்யுற
பெண்: உனை காண உன்தெருக்கு
வந்தும்மா என்னை புரியல
ஆண்: பார்த்தும் பாக்காம
தவிக்க வைக்கிற
பெண்: நீ இருக்கும் இடமெல்லாம்
வந்தும்மா அறிய முடியல
ஆண்: ஓரக்கண்ணால் பார்த்து
உயிர எடுக்குற
பெண்: கண்சாடை காட்டியும்
அத படிக்க தெரியல
ஆண்: கவனத்த ஈர்த்து
கவர்ந்து கொல்லுற
பெண்: நீ பாக்குறப்போ கொளந்தைய
கொஞ்சினேன் அதுகூட புரியல
ஆண்: அன்பிருக்கா இல்லையா
அறிய முடியல
பெண்: உங்கம்மாவ அத்தேன்னு
கூப்பிட்டும்மா அன்பு புரியல
வேண்டுகோள்: இந்த கவிதையில் வருவது போல் பெண்கள் எப்ப அடுத்த நிலைக்கு போனார்கள் என்று பாவம் இந்த ஆண்களால் கண்டுபிடக்க முடிவதில்லை. பெண்களே தயவுசெய்து வரும் காதலர் தினத்தில் ஆவது கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்.
ஆஹா..... வேண்டுகோள் வேறயா? ஹா,ஹா,ஹா,ஹா...
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்
ReplyDeletenalla irukkunga!!
ReplyDelete//வேண்டுகோள்: இந்த கவிதையில் வருவது போல் பெண்கள் எப்ப அடுத்த நிலைக்கு போனார்கள் என்று பாவம் இந்த ஆண்களால் கண்டுபிடக்க முடிவதில்லை. பெண்களே தயவுசெய்து வரும் காதலர் தினத்தில் ஆவது கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்//
ReplyDeleteAppadinaa pen budhi mun budhinu otthukareenga... ha ha ha...idhu super...:))))
This comment has been removed by a blog administrator.
ReplyDelete