வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, February 14, 2011

உயிர் வாழ வழியிருக்கா ?



ஓடி பிடுச்சு வெளையாடி
விழுந்து உராய்ந்த புண்ணுக்கு
எச்சிமண்ண உனக்கு தடவுனப்ப
கொஞ்சம் மனசும் சேர்ந்து வந்திருச்சு

ஊர்க்கருப்புக்கு யாரோ ஒடச்ச
செதறு தேங்காசில்லுல ஒட்டுனமண்
ஊதி உனக்கு கொடுத்தப்ப
கொஞ்சம் உசிரு ஒட்டிகிட்டு வந்திருச்சு

கஞ்சி காச்சி வெளையாண்ட
கதவு இல்லாத வீட்டுக்குள்ள
ஒன் காலடித்தடம் பதிச்சப்ப
கொஞ்சம் உறவும் கூட வந்திருச்சு

சாமி ஊர்சுத்தி வந்தப்ப
மாவிளக்கு வெளுச்சத்துல மங்கலா
ஒன் மொகம் பாத்தப்ப
கொஞ்சம் கிறுக்கும் பிடுச்சு போச்சு

பச்சஓல இடுக்கு வழி
ஒன் கண்ண பாத்தப்ப
மிச்சம் மிதம் இருந்த
கொஞ்சம் நஞ்சம் உசிரும் போயிருச்சு

உயிர் வாழ வழியிருக்கா ?
நீ வந்துசேர மனமிருக்கா ?
வெறும் கூடுதான் இங்கிருக்கு
கொஞ்சம் கொஞ்சமா போனதெல்லாம்
கொண்டு வந்து சேப்பியா ?

6 comments:

  1. கிராமத்து காதல்... மணம் வீசுகிறது..

    ReplyDelete
  2. //எங்கு போனாலும் எங்கு இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு கிராமத்தான்.//

    இது போதுமே, உங்களைப்பற்றி ரெண்டே வரியில் சொல்லீட்டீங்க சூப்பர் நண்பரே... :))

    ReplyDelete
  3. மண்மணம் கமழும் உணர்வுகளை வரிகளில் பதிவு செஞ்சீருக்கீங்க.. வாழ்த்துக்கள் நண்பரே :)

    ReplyDelete
  4. //கொஞ்சம் கிறுக்கும் பிடுச்சு போச்சு//

    Too good...:)

    ReplyDelete
  5. நெனப்ப சொல்லி(பு)ட்டு
    நெஞ்சை அள்ளி(பு)ட்டு
    போறிங்க முனி சார்...
    அருமை...படிச்சுகிட்டே இருக்கணும் போல இருக்கு...

    ReplyDelete