வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, April 5, 2010

வேலை பளு


வாழ்க்கை
நடத்த
வேலைக்கு போனேன்
வேலையே
வாழ்க்கையானது ...

வாழ்க்கை
பளு குறைக்க
வேலைக்கு போனேன்
வேலையே
பளுவானது ....

விடுமுறையில்
வேலைக்கு போனேன்
இன்று
விடுமுறை நோக்கி
வேலைக்கு போகிறேன் ...

பிடித்து
வேலைக்கு போனேன்
வேலையே
பிடிக்காமல் போனது ...


8 comments:

 1. அருமையா இருக்கு..

  ReplyDelete
 2. நல்ல கருத்துகளுக்காக
  கவிதை படித்தேன்! இங்கு
  கவிதையே நல்ல
  கருத்துடன் உள்ளது!

  ReplyDelete
 3. நல்லாருக்குங்க ..பாராட்டுக்கள் ..

  ReplyDelete
 4. கே.ஆர்.பி.செந்தில் நன்றி.

  ReplyDelete
 5. நல்லாஇருக்குங்க கவிதை! யதார்த்தத்தை அழகா சொல்லியிருக்கீங்க!

  ReplyDelete