வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, April 14, 2010

வேண்டி தொலைத்தது

கல்வி வேண்டி
இளமை
தொலைந்தது ...

காதல் வேண்டி
சுயம்
தொலைந்தது ...

வேலை வேண்டி
கனவு
தொலைந்தது ...

பதவி வேண்டி
நட்பு
தொலைந்தது ...

இல்லறம் வேண்டி
இன்பம்
தொலைந்தது ...

கலவி வேண்டி
தூக்கம்
தொலைந்தது ...

சமுகமரியாதை வேண்டி
சுற்றம்
தொலைந்தது ...

வேண்டியதெல்லாம்
கிடைத்தது
வெறுமையில் ...


2 comments:

 1. இல்லறம் வேண்டி
  இன்பம்
  தொலைந்தது ...ரொம்ப தைரியம் தான் அப்பு வீட்டில் அடி வாங்க போறீங்க..உண்மை :)
  கலவி வேண்டி
  தூக்கம்
  தொலைந்தது

  ReplyDelete
 2. உலக நடப்ப , உண்மைய சொல்ல தைரியத்த விட மனச்சாட்சி ரொம்ப முக்கியமுன்னு நினைக்கிறேன் .....

  ReplyDelete