வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, April 6, 2010

அறை நண்பன்

கண்ணாடியில்
என் முகம்
பார்ப்பேன் ...
உன் முகத்தில்
என் மனம்
பார்ப்பேன் ...

கோவில்
குடி
கூத்து
பிரிந்ததில்லை
இருவரும் ...

ஆயிரம் கேள்வி
அன்று ஓர்நாள்
நீ
என்னுடன்
வராதபோது ....

நான்
பசித்திருப்பேன்
நீ
சமைத்திருப்பாய் ...

கோடிட்டு
பழகியதில்லை
ஆனால்
எல்லை தாண்டியதில்லை
இருவரும் ...நிறை பாராடினோமா ?
நினைவில்லை
குறை கூறிகொண்டதில்லை
இருவரும் ...

உதவியாக இருந்தோமா ?
நினைவில்லை
உறுத்தலாக இருந்ததில்லை
இருவரும் ....

முடிவில்
பார்த்துக்கொள்வோமா ?
தெரியாது
ஆனால் நிச்சயம்
நினைத்துக்கொள்வோம் .
7 comments:

 1. பின்னிட்டீங்க!!

  ReplyDelete
 2. athenna, Kudi Koothu'nnu udane, KK Photo?
  ithellam nalla illa, pathukonga!

  ReplyDelete
 3. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் உங்களுடைய வலைப்பூ அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்http://blogintamil.blogspot.com/2013/09/1.html?showComment=1379384881277#c1156036493630622032

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. அன்பின் முணியாண்டி - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - நட்பு பாராட்டும் நற்கவிதை நன்று - மிக மிக இரசித்தேன் - நட்பின் இலக்கணம் -அருமையான கவிதையில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. அன்பின் முணியாண்டி - 20 மாத காலமாக எழுத வில்லையா - பணிச்சுமை காரணமா ? சற்றே நேரம் ஒதுக்கி எழுதத் துவங்கவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete