வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, April 12, 2010

சொந்தமண்


உண்ண
உணவளித்தாய்
தாயாக ...

உடுக்க
உடையளித்தாய்
தந்தையாக ...

வீழ்ந்தபோது
தாங்கினாய்
நண்பனாக ...

முதல் காதல்
முதல் முத்தம்
முதல் கலவி
முதல் தோல்வி
மவுனசாட்சியாய் ...

என் வாழ்வின்
எல்லாமான உனைவிட்டு
எங்கோ போனேன்
என் வாழ்க்கைதேடி ...

5 comments:

  1. மண்ணின் மைந்தனே!
    யாதும் ஊரே ! யாவரும் கேளிரன்றோ?

    ReplyDelete
  2. சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரப்போல வருமா ?

    ReplyDelete